GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on November 06, 2022, 10:33:07 pm

Title: கவிதையும் கானமும்-009
Post by: Administrator on November 06, 2022, 10:33:07 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk009.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-009
Post by: RavaNaN on November 07, 2022, 12:20:12 pm
மகள்

நான் ஈன்றெடுத்த தாய்

செல்லமாய் கோபித்து
அடம்பிடித்து ஆட்கொள்வாய்
மார்பினில் கால்பதித்து
மழலையோடு தான்சிரிப்பாய்
அன்போடு அரவணைத்து 
அதிகாரமும்  தான்செய்வாய்

மழலை தமிழோடு
அப்பா என்று அழைத்திட
அகிலமும் மறந்தேனே

ஆசையாய்  தலைகோதி
கண்ணுக்கு மையிட்டு
கன்னத்தில் பொட்டிட்டு
கைகளுக்கு வண்ணம்பூசி
சேய்யும் அங்கே தாயுமாக

செருக்கோடு சிரித்தபடி
செல்லமாய் கைபிடித்து
சாலையோரம் நடைபயில்வோம்

தந்தைக்குமகள்கள்
என்றுமே இளவரசியே

                        - இப்படிக்கு இராவணன் என்கிற பச்சப்பிள்ளை
Title: Re: கவிதையும் கானமும்-009
Post by: AniTa on November 07, 2022, 04:22:16 pm
என் வாழ்வின் முதல் காதல் அப்பா
என் பாதங்கள் பூமியில் பதியும் முன்
நெஞ்சில் வாங்கி கொண்டாயே, அப்பா.
வாய் திறந்து பேசிய மழலை மொழியை
செவி வழி கேட்டறிந்து இன்புற்றாயே, அப்பா.

தவழ்ந்து வளரும் பருவத்தை
அருகில் இருந்து பாராமல்
எனக்காக ஓடிச் சென்று உழைத்தாயே, அப்பா.
பள்ளியில் நான் பெற்ற அடி, உனக்கும் வலித்ததோ..
என் மகளை காயப்படுத்தும் ஆசிரியரின் கண்டிப்பும்
தவறு தான் என்றாயே, அப்பா...

இரவு பயணங்களில், கண் உறங்கியதில்
கண் விழித்து பார்த்தேன் படுக்கை அறையில்...
பருவ பெண்ணாக வளர்ந்தாலும், நீ என்னை குழந்தைப்
போல் கையில் ஏந்தி சென்ற நாட்கள் எத்தனையோ...

கல்யாணம் என்ற பேச்சு வார்த்தை,
ஏன் உன் முகத்தில் இவ்வளவு வேதனை,
உன்னை விட்டு பிரியும் நிலை
வாழ்வில் என்றுமே எனக்கு வராது... அப்பா
இது ஒரு தந்தைக்கு மகள் செய்து கொடுக்கும் சத்தியம்.

வாழ்க்கை என்ற ஓட்ட பந்தையத்தில் நானும் உன்னோடு சேர்ந்து ஓடுகிறேன்...
விழுந்தாலும், கை கொடுத்து தூக்கி விடுகிறாயே அப்பா.
இதுதான் வாழ்க்கை, நில்லாமல் ஓடு என்று நம்பிக்கை கொடுக்கும் உன் குரல்.. எனக்கு பல மடங்கு உத்வேகம்.

பல சுமைகள் தாங்கி விண்ணில் பறந்தாயே..
எனக்கு நிழலும் தந்தாயே...
இப்பொழுது உன்னுடன் நானும் சேர்ந்தே பறக்கிறேன்..
உன் சுமைகளை பகிர்ந்துக் கொள்ள.
என் கை பிடித்துக்கொள், வா என்னுடன்
உனக்கும் நான் சிறந்த தந்தை ஆகிற வரம் கொடு ... அப்பா !
Title: Re: கவிதையும் கானமும்-009
Post by: LOVELY GIRL on November 07, 2022, 06:29:11 pm
கடவுளுக்கும் அப்பாவுக்கும் சிறு வேறுபாடுதான் உள்ளது கண்களுக்கு தெரியாமல் இருப்பது கடவுள், கண்களுக்கு தெரிந்தும் கடவுள் என புரிந்து கொள்ளப்படாதவர் தான் அப்பா..!

தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீ ர் துளிகளில்..!

மழலை மொழி தாய்க்கு புரியும் தகப்பன் மொழி மகளுக்கு மட்டும் புரியும்..!

பெண் குழந்தை பிறந்ததை தந்தை சுமையாக என்றும் நினைப்பது இல்லை மாறாக சுகமாக நெஞ்சினில் சுமப்பான்..!

எத்தனை வயது ஆனாலும்
பெண் பிள்ளைகளை என்றும்
தன் செல்லங்களாக பார்த்து கொண்டாடுவது அவளது
அப்பாக்கள் மட்டுமே..!

என்ன தான் அன்னை என்னை மார்போடு அணைத்து என்னுடன் கொஞ்சி விளையாடினாலும் என் அப்பா உங்கள் தோள்களில் சாய்ந்து விளையாடுவது ஆனந்தமே ..

ஆனந்தமாக உங்கள் தோள்களில் சாய்ந்து விளையாடும் ஸ்ரீ..


குடத்துள் விளக்காக இருந்தவளை
குன்றின் மேல் ஏற்றி அழகு பார்த்த GTC
தோழர்களுக்கும் என் கவி பாடும் RIJIA விற்க்கும் நன்றி..
Title: Re: கவிதையும் கானமும்-009
Post by: Barbie Doll on November 07, 2022, 08:53:16 pm
அப்பா
அன்பு வைத்து ஏமாற்றாத ஒரே சொந்தம் நீங்கள்..

இன்றும் அப்பா என்றால் ஓடிச் சென்று கட்டிக் கொள்ளும் சிறு குழந்தை நான்..

எப்பொழுதும் அமைதி, அதிர்ந்து கூட பேசாமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் என் உயிர் அப்பா..

என் கோபத்தால் அதிகம் காயப்பட்டது நீங்கள் தான், கோபப்பட்ட அடுத்த கணமே என்னை சிரிக்க வைப்பதும் நீங்கள் தான்..

இந்த உலகை நேர்மறையாக எதிர்கொள்ள கற்று கொடுத்தவர் நீங்கள்..என் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் அப்பா...

வாழ்க்கையில் நான் தோற்று போக கூடாது என்று எண்ணும் உங்களுக்கு என்றும் வெற்றியே பரிசாக கொடுப்பேன்..

உடைந்து அழுதாலும் உங்கள் ஆறுதல் நான்.. என் ஆறுதல் நீங்கள் மட்டுமே..
இந்த உலகில் நான் முழுமையாக புரிந்து கொண்ட ஒரே ஜீவன் என் அப்பா 💜💜

அப்பா என்றாலே இனம் புரியாத மகிழ்ச்சி என் மனதில்.. Love you so much my dear appa

///Barbie Doll///
Title: Re: கவிதையும் கானமும்-009
Post by: Sanjana on November 08, 2022, 10:42:57 am
என் தேவதையே...

எந்தன் ஜீவனில் உயிர்த்தவள் நீ தானே
மரணம் வென்று ஈன்ற ஜனனம் நீ தானே
உந்தன் கரம் பற்றி வரும் பாதை போதவில்லை
என்னும் மழலையாக நீ இருக்கனுமே...
எந்தன் உந்தன் பாதி தூங்கும் நேரம்
நீயும் நானும் பேசனும் சிறு புன்னகையில்
உந்தன் குமின் சிரிப்பு போதுமடி
எந்தன் ஜென்மம் முழுவதும் உன் முகம் போதுமடி...

பொன் வாய் பேசும் தாரகையே
மார்புதைக்கும் காலுக்கு மணிக் கொழுசு
முத்துக்கள் தெறிக்கின்ற உன் மழலை மொழியே
எந்த மொழியிலும் இல்லாத தேவபாஷை...
அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்
சிற்றாடை கட்டி அவள் சிரித்த போது
எந்தன் பொற்றவள் சாயல் கண்டேன்
மேல் நாட்டு ஆடையில் நடந்த போது
மீசை இல்லாத மகனை கண்டேன்...

என் ராணியின் ரோஜா முகம்
தினம் தினம் பார்க்கையில்
எத்தனை ஜென்மம் எனக்கு கிடைத்தாலும் போதாது
ஆரம்பத்திலிருந்தே உன் கையைப் பிடித்து
உன்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டினேன்
கல்வி கண்ணைத் திறந்திட பள்ளி இருக்க
கற்றுக் கொண்டு மேதை என பெயரும் எடுக்க
உன்னை வளர்த்த தந்தை என புகழை
இன்னும் பல ஆசையுண்டு சொல்லி மகிழ
மீண்டும் ஜென்மங்கள் மாறும் போது நீ என் மகளாக வேண்டும்...


நாம் அனைவரும் ஒரே கருத்தைப் பகிர்ந்துகொள்கிறோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் :
குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்ட அப்பாதான் உலகின் சிறந்த மனிதன்! LOVE YOU APPA( LIEBE DICH PAPA)...

அதேபோல் அப்பாவுக்கும் என்றும் மகளே தேவதை...

[/b]
Title: Re: கவிதையும் கானமும்-009
Post by: NATURE LOVER on November 08, 2022, 02:46:11 pm
என் அன்பு  மகளே,

உன் தாயின் கருவில் நீ மலர்ந்தபோது 
இந்த உலகிற்கு என்னை அடையாளம்  காட்டினாய்,
இந்த பூமியில் நீ பூத்த போது உலகை 
எனக்கு அடையாளம் காட்டினாய்!"
தவமாய் தவமிருந்து எம் தாயின் உருவில் பெற்ற என் தேவதையே ! கண்ணே.! கண்ணின்  ஒளியே !

நீ பிறந்த அன்று
ரோஜாப் பூவாய் உனைக் கையில் ஏந்தி ஒரு
ராஜாவாக உணர்ந்தேன்  உலகையே வென்றவனாய்.!
பா.. அப்பா.. என முதன் முதலாக நீ
பவழ வாய் திறந்து தித்திக்கும் தமிழில் பேசியதும்...
தத்தித் தவழ்ந்து நடை பழகியதும் உன்னை
ஈன்ற பொழுதின் பெரிதுவந்த
இனிய தருணங்கள் இன்று நினைத்தாலும்
இதயம் சிலிர்க்கிறது .!

முதன்முதலில், என் குழந்தையின் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட அந்த நொடி! அந்த உணர்ச்சியை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. தன் ரத்தம், தன் வாரிசு, தன் குழந்தை, அடுத்த சில வருடங்களில் தன்னைத் தாங்கப் போகும் தூணான, உன்னை முதன்முதலில் கையில் ஏந்தி, முத்தம் கொடுத்த அந்த அழகிய நொடியை என்னால் மறக்கவோ, விளக்கவோ முடியாது. அந்த இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...

உன் பிஞ்சு கைகளால், அந்த மெல்லிய விரல்களால், உன் முழு கையையும் வைத்து என்னுடைய ஆள்காட்டி விரலைப் பிடிக்கும். அந்த அழகை ரசிக்கவே எனக்கு ஆயிரம் கண்கள் வேண்டுமே! 
தினம் தினம் உன்னுடன் விளையாடும் அந்த அழகான இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...
நீ என் மார்பில் எட்டி உதைக்கும் சுகமும், உன் அழகிய கொஞ்சல் சிரிப்பும் என்னை வீழ்த்தும் அஸ்திரங்கள். என் ராஜகுமாரி உன்னை கொஞ்சி கொஞ்சி நாட்களைக் கழிக்கும் அந்த இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...
நீ முதல் முதலாக என்னைப் பார்த்து அப்பா என்று கூறிய போது நான் மீண்டும் இப்பூமியில் பிறந்ததைப் போன்று உணர்ந்தேன்...

என் மார்பிலும், முதுகிலும், தோளிலும் தவழ்ந்த  உனது பிஞ்சு பாதங்கள் முதல் அடியை எடுத்து வைத்ததும், எனக்கு  ஆனந்தக் கண்ணீரும், மகிழ்ச்சியும் எனக்கு காட்டாறு போல பெருக்கெடுத்து ஓடியது... எங்கே நீ கீழே விழுந்து விடுவாயோ என்று நானும் உன்னுடன் சேர்ந்து குழந்தையாகவே மாறிப் போனேன்...

என் விரல் பிடித்து நடந்த என் குட்டி தேவதை பருவ வயதில், பூப்பெய்தியதும், என்னை அறியாமல் ஒரு ஆனந்தமும், பயமும் எந்தன் உடல் எங்கும் பரவியது. அந்த உணர்வை எப்படி சொல்லலாம்? என் பெண் பிள்ளையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும், அவளுக்குத் தேவையானதைச் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பும், இன்னும் வெகுசில வருடங்களில் அவள் இன்னொருவனின் மனைவி என்கிற எண்ணத்தின் தாக்கமும், பேரானந்தமும் ஒருசேர ஒருவிதமான உணர்ச்சியை என் மனதில் உருவாக்கியது. அதைப் பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களால் மட்டுமே உணர முடியும்.

காலங்கள் உருண்டோட 'நேற்று பிறந்த குழந்தை போல' தோன்றும் என் பெண் பிள்ளைக்கு திருமண நாள் குறிக்கப்படும். மகனாக இருந்தால், அவனை நல்ல ஒரு ஆண்மகனாக வளர்த்து, தன்னை நம்பி வரும் பெண்ணை தன் தாய்க்கு நிகராக நடத்துபவனாக மாற்றி இருக்க வேண்டும். மகளாக இருந்தால், அவளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். என் மகளின் கைகளை தன்னைவிட பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் ஓர் ஆடவனிடம் ஒப்படைக்கும் நொடி.... என் மகளின் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஒருபுறமும், இனி இவள் மீது இவள் கணவனுக்கே முதல் உரிமை என்ற நிதர்சனமான உண்மை மறுபுறமும் மாறி மாறி அலைக்கழிக்கும். ஆனாலும், உதட்டில் புன்னகையுடனும், கண்களில் ஒளிந்திருக்கும் கண்ணீருடனும் என் மகளை, மருமகளாக இன்னொரு வீட்டிற்கு வழி அனுப்பி வைக்கும் என்னைப் போன்ற அப்பாவின் மனதில்தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்!

இப்படி ஒரு பெண் பிள்ளையைப் பெற்ற அப்பாவின் வாழ்வு முழுவதுமே சிறு சிறு நெகிழ்ச்சியுறும் தருணங்களால் நிறைந்தவையே.

அப்பாக்களுக்கு நிகர் அப்பாக்கள் மட்டுமே

இறுதியாக சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. வருங்காலத்தில் எனக்கு திருமணம் ஆன பிறகு எனக்கு பெண் குழந்தை பிறந்தால் மிகவும் மகிழ்ச்சியாய் உணர்வேன்... மீண்டும் என்னுடைய அம்மாவே இந்த பூமியில் பிறந்தது போல மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், பேரானந்தமாகவும் உணர்வேன்...

சற்று பெரிய கவிதை தான். என் கவிதையை பொறுமையாக வாசித்து காட்டியதற்கு மிக்க நன்றி...

இப்படிக்கு
உங்கள் (NATURE LOVER) இயற்கை நேசகன்
Title: Re: கவிதையும் கானமும்-009
Post by: MuYaL KuttY on November 09, 2022, 03:03:55 pm
என்னை கையில் தாங்கிய
அந்த நாள் இருந்து இன்று மட்டும்
எல்லாவற்றிலும் என்னை
தாங்கிக்கொள்பவர் அவர்

இளவரசியாக என்னை நடத்தும்
ராஜா அவர் தான்
யாரு என்னை என்ன சொன்னாலும்
என் உடனிருக்கும் நண்பர்  அவர்

என்னிடம் பாசமாக பேசும் போது
குழந்தையாக அவர் பேச்சு
எனக்காக அவர் செய்யும் பணிவிடைகள்
அளவுக்கு அதிகம்

அடிக்கடி அவர்  சொல்லும்
அந்த வார்த்தைகள்
'நீ தான் என் அம்மா'
இதை கேட்கும் போதே  என் மெய் சிலிர்க்கும்

என் ஆசை தான்
அவர் ஆசை
என் கனவு தான்
அவர்  கனவு

யாருக்காகவும் எதற்காகவும்
என்னை விட்டுக்கொடுக்காத
அன்பின் உருவம் அவர்
ஆம் அவர் தான் என்
உயருக்குயிரான அப்பா

தந்தைக்கு செல்லம்.. மகள்
இது எழுதப்படாத நியதி !
இங்கு என் முதல் கவிதை எழுத
தூண்டியது அவரின் பாசம்.