GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on October 31, 2022, 12:03:00 am

Title: கவிதையும் கானமும்-008
Post by: Administrator on October 31, 2022, 12:03:00 am
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.



இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk008.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்தியா நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-008
Post by: AniTa on October 31, 2022, 03:04:53 pm
மழையில் நனைந்தப்படி நீயும் நானும்
ஒரு குடைக்குள் நீ என்னை அனைத்தபடி
செல்லும் இந்த தருணம்
அடடா, இதுவே ஒரு ஆணின் முதல் ஸ்பரிசம்.

இந்த இரவின் நிசப்தமான தனிமையில்
மழையின் நீரில்
அந்த நீரின் குளுமையில்
நீ எனக்கு தந்த வெப்பம்
என் வாழ்வின் நான் ரசித்த சொர்கம்

உனதருகினில்
உன் கரம் என் மீதில்
உன் மூச்சு காற்றின் தொடுதளில்
என் செவியில் விழுந்த உன் வார்த்தைகளில்
ரசித்தேன் நிஜங்களை
வர்ணித்தேன் கவிதைகளாய்

மழையின் ஓசையில்
இந்த தருணம் அமைந்தது பாடல் வரிகளாய்
கவிஞனாய் நான் கவி எழுத
அதை பாடலாக்கி இசைக்கின்றாயே
எதை நான் ரசிப்பேன்!

மழை தொடர்ந்திட கூடாதா
உன்னோடு இறுதிவரை நான் வந்திர கூடாதா!
மனம் ஏங்குகிறது குழந்தை போல்.
மழையில் என்னை காத்து செல்லும் உனக்கு
நன்றி சொல்வதா!
அல்லது இந்த தருணத்தை தந்த மழைக்கு
நன்றி சொல்வதா!
இதை என் விதியில் எழுதிய அந்த பிரம்மனுக்கு
நன்றி சொல்வதா!

எதற்கும் பதில் இல்லாமல் வெறும் கேள்விகளாய்
அமைகிறதே என் கவி!
இந்த தவிப்பும், சஞ்சலமும் கூட
ஓர் இன்பம் தான்
அதையும் ரசிக்கிறனே கவிஞனாய்!
Title: Re: கவிதையும் கானமும்-008
Post by: RavaNaN on October 31, 2022, 08:12:07 pm
அந்திசாயும் நேரம்
ஆதவனும் மறைந்திருக்க
ஆர்ப்பரிக்கும்  மழைச்சாரல்
ஆட்கொள்ளும் அழகாய்
அருகினில் நீ இருக்க 
அணைத்தபடி நானிருக்க

செவ்வானம் பூத்திருக்க
செவ்விதழை நான்சுவைக்க
வெட்கத்தில் நீ சிவக்க
வியப்போடு  நான் ரசிக்க

கண்களால்  நீ சிரிக்க
கருவிழியோ கவர்ந்திழுக்க

இருவிழியின் அழகினிலே
இவ்வுலகை நான் மறக்க
இசைபாடும் இடிமுழங்க (போர்முழக்கம் )
இதழோடு போரிட்டேன்
 
இவ்விரவும் கடந்ததடி
இனியதொரு இரவாக
               - இராவணன் என்கிற பச்சப்பிள்ளை 
Title: Re: கவிதையும் கானமும்-008
Post by: Sanjana on November 01, 2022, 03:51:05 am
பிரம்மன் படைத்த அற்புதம் நீ
நான் வாங்கி வந்த வரம் நீ
என் வாழ்க்கையின் அடையாளம் நீ
என் எதிர்காலத்தின் சாயல் நீ
என் வாழ்வின் துணை நீ…..

நீயும் நானும் காதலர் ஆனாது அதிசயம்
நாம் சந்தித்த முதல் கனவே கார் காலம்
கனவு நிஜமான நேரம் அந்தி பொழுது
ஒரு குடையின் கீழ் தஞ்சமடைய வைத்த இயற்கை தாயே
நீ என் முதல் தெய்வம்…..

அந்திமழை பொன்மேகம்
தங்க மழை தூவும் நாள்
ஜில் என வீசும் காற்று
நீர் துளிகள் பாடும் நேரம்
இடி  கொட்டும் நேரம்….

தேகம் இரண்டும் உரசும்
தீ மின்னல் மின்னும்
பெண்  உள்ளம் எங்கும் இன்ப வெள்ளம்
வான முத்துக்கள் சிந்தி
குடைக்கம்பி குளிர்ந்தது
வானிலே நீரின் வெண்நிற தோரணம்
கல்லும் முள்ளும் இப்போது பூவானது…..


உன் தோளில் சாயும் போது
என் கவலைகள் பறந்தோடுது
காணாத ஒன்றை தேடும் நேரம் இது
வீணைகள் ராகம் மீட்டும் நேரம் இது
நாம் சேர்ந்த அழகிய பொழுது இனிமேல்
நம் வாழ்க்கையின் இனிய தருணம்….

இதழோடு இதழ்சேர்ந்து பல வர்ணம் திட்டினோம்
நம்மை நாம் இழந்தோம், மறந்தோம்
வாழ்வின் பலனை அடைந்தோம்
காலங்கள் கடந்தாலும் இந்த உறவு தளைக்கும்
காதலின் வலிமை துலங்கும்
அன்பால் என்றும் இணைந்திருப்போம்…..
Title: Re: கவிதையும் கானமும்-008
Post by: Yash on November 01, 2022, 09:19:10 am
இப்படி ஒரு இரவாகி போகுமெனஅணுவளவும் கூட அறியேன்!!
அதுவும் உன்னோடு!!

எது  இன்றைய ஆட்சியா?

எந்தன் உச்சிதொட்டு உள்ளங்கால் வரையிலும் உந்தன் ஆட்சிதான் நடக்கிறது இந்த நிமிடம் !

அடங்காத அலை போல என் மனசு பாய!
அழகான தடம் பதித்து அவள் பாதம் போக!

மழைத்துளிகளோ
விழ விழ பெருகுதே!!
இடி மொழிகளும் புரியுதே!!

இவளோ மறையாத மேகம்!
மின்னல் வழிவந்த சாரம்!
கனலாய் இருந்தாலே நாளும்!
இவளால் மறந்தேனே யாவும்!

இந்த மணித்துளிகளும் ஒரு அர்த்தம் புணர்கிறது

இதுவோ நேராத மாயம்!!
இதழில் செவ்வண்ண சாயம்!
கடக்கும் நிமிடங்கள் தோறும்!
உதறல் ஆகின்றேன் நானும்!

கானலாய் எங்கும் மழைத்துளிகளா..?! 🤔

குடைக்குள் இருந்த இரு மனதில் ஒரு மனம் இடி முழக்கத்தின் சத்தம் கேட்டு
இதயத் துடிப்பை சீராக்க,
இன்னொரு மனதை கட்டி அணைக்க..,,
   
                                  அத்தனையும் அரை நொடியில் அந்தம் இல்லாமல் போகும்படியாய் நின்று போனதே இந்த மழைத்துளிகள்!!
                                              #Yash🧢
Title: Re: கவிதையும் கானமும்-008
Post by: Athira on November 01, 2022, 12:38:01 pm
அந்தி மாலை நேரம்,
மல்லிகையின் மயக்கும் மணம்,
மன்னவனோடு நான்
சேர்ந்து நடக்க ,
என்னவனை சீண்டி விடும்
சில்லென தென்றல் காற்று,
தோள் மீது கை போட்டு
என்னை கட்டி அணைத்து..,
விரலோடு விரல் சேர்த்து ,
யாருமில்லா தனிமையில்,
 கொட்டும் மழையில்
உன் கை பிடித்து ஓட்றை குடையில்
நடந்து வருகிறேன்,
என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு,
நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும் போதும் என்று .
விளையாட்டாக உன்னிடம் கேட்டேன்
என் மூச்சி காற்றில் கலந்த
உன் உயிரை என்னிடம் இருந்து
எப்படி பிரிப்பாய் என்று ?
இதோ இப்படி தான் என்று என்
இதழோடு இதழ் சேர்கிறாயாட கள்வா.
மூச்சு விடவும் சிரமமாகத்தான் இருக்கிறது
உன் சுவாசக் காற்று என் சுவாசமாய்
மாறும் போழுது. 
என்றும் உன்னுடன் மட்டும் நான் 

Athira
Title: Re: கவிதையும் கானமும்-008
Post by: LOVELY GIRL on November 01, 2022, 04:23:45 pm
உங்களுக்கு நன்றி! என் கவிதை பாடும்  RiJiA உங்கள் இனிமையான குரலுக்கு நன்றி  !

நீ நனைந்து பிடித்த குடைக்குள் பெய்தது
அன்பு மழை..!

எங்கேயோ தான் பெய்கிறதுஎன் அன்பு கணவனே உன்
தோள் சாயும் நேரத்தில் என்
உலகம் சுருங்கி உனக்குள்
அடங்கியது உயிர் உறைந்து
என் இதயம் உன்னுள் துடிக்கிறது "அடை மழை"
ஆனாலும் நான் நனைகிறேன்
அவன் பார்க்கும்
ஈர்ப்பு பார்வையில்..!

என் அன்பு கணவனே உன்
தோள் சாயும் நேரத்தில் என்
உலகம் சுருங்கி உனக்குள்
அடங்கியது உயிர் உறைந்து
என் இதயம் உன்னுள் துடிக்கிறது..!

விழிகள் உறங்கிட
மறுக்கும்
போதெல்லாம்
உறங்க வைக்கிறான்
முத்த சத்தத்தில்
தாலாட்டி..!


மழையை ரசித்து கொண்டே உன்னை ரசிக்கும் உந்தன் ஸ்ரீ..!
Title: Re: கவிதையும் கானமும்-008
Post by: Arjun on November 01, 2022, 05:15:19 pm

சூரியன் மறைகிறது செவ்வானம் தெரிகிறது
மழை பொழிகிறது மேனியோ நனைகிறது
கைகளோ அவளின் இடையை அரவணைக்கிறது
கண்களோ அவளின் மான் விழிகளை மையலிடுகிறது

மழைத் தூறல்களால் மினு மினுக்கும் அவள் கைகள்
குளிர் பனியால் பட படக்கும் அவள் மான் விழிகள்
ஈரத் திவலைகளால் கூர்ச்செறியும் அவளின் கூந்தல்
என் கரம் கொண்டு பாய்ச்சுகிறேன் வெப்பம் அவளின் மார்பில்

மழையின் வாசம் போன்றது அவளின் அருகாமையின் வாசம்
மழையில் நனைவது போன்றது அவளின் அழகில் நனைவது
மழையால் நனைந்து மின் மினியாய் பட படக்கிறது மனம்
உன்னில் நானும் என்னில் நீயும் இருப்போம் அணுதினம்

பொழிந்து பொழியாமலும் மேகத்தின் மழைத்துளி
மறைந்தும் மறையாமலும் செவ்வானச் சூரியன்
ஈரங்கள் காயாமல் மண்ணின் நிலமும் செடியும்
இன்ப ராகங்கள்  ஓயாமல் அவளும் நானும்

பெண்ணின் தூய வண்ணம் அவள்
பக்கம் நிற்கும் கஜுராகோ சிற்பம் அவள்
ஆண்மையின் தூய இலக்கணம் அவன்
அவள் மனதை ஆளும் காதல் மன்னன் அவன்

காதின் மடல்களில் அவன் கொடுத்த மூச்சு காற்று
அவளின் ரத்த நாளங்களில் பெருக்கெடுக்கும் இன்ப ஊற்று !!
இந்த நொடிப் பொழுதில் சஞ்சலங்கள் எல்லாம் விடை பெற்று !!
இனி வாழ்வோம் எப்போதும் ஒன்றாய் இன்புற்று!!


கிறுக்கனின் கிறுக்கல்கள்