GTC FORUM

General Category => Beauty Tips - அழகு குறிப்புகள் => Topic started by: Arrow on November 23, 2018, 12:14:40 pm

Title: கிராமிய வைத்தியம் !
Post by: Arrow on November 23, 2018, 12:14:40 pm
உடலில் தேங்கியுள்ள சளியை விரைவில் வெளியேற்ற உதவும் சில ஆயுர்வேத வழிகள்!
 
சளி பிடித்து விட்டால் சுவாசக்குழாயில் சளித்தேக்கம் அதிகரித்து மூச்சு விடுவதில் சிரமத்தை உணரக்கூடும்.மேலும் இந்த சளி தேக்கத்தை இயற்கையான வழியில் வெளியேற்ற சில வழிகள் உள்ளன.

இப்படி உடலில் தேங்கும் சளியை நம் வீட்டில் உள்ள ஒரு சில பொருட்களின் மூலம் வெளியேற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி பார்ப்போம்.

மஞ்சள்:
மஞ்சளில் உள்ள குர்மின் என்னும் பொருள் பாக்டீரியாக்களை எதிர்க்கும் மற்றும் உடலினுள் உள்ள தொற்றுக்கள் மற்றும் தொண்டை புண்ணை போக்கும்.

1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்து,அதை தினமும் 3-4 முறை குடித்து வர சளி தொண்டையில் தேங்குவது குறையும்.

இஞ்சி:
இஞ்சியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளும் நிறைந்துள்ளன.

1 டம்ளர் நீரீல் இஞ்சி மற்றும் மிளகை சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி,அதில் தேன் கலந்து குடித்து வர சளி விரைவில் வெளியேறும்.

ஆவி பிடிப்பது:
சுடு நீரில் ஆவி பிடிப்பதால் ,சளி மற்றும் கபம் தளர்ந்து,சுவாசக் குழாய் சுத்தமாகி சுவாச பிரச்சினைகள் நீங்கி நிம்மதியாக சுவாசிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி,அதில் மூலிகை இலைகளை போட்டு அந்நீரால் தினமும் 3-4 முறை ஆவி பிடித்து வர ,சளி விரைவில் வெளியேறிவிடும்.

தேன் மற்றும் எலுமிச்சை:
தேனில் சக்தி வாய்ந்த ஆன்டி-பாக்டீரியல்,ஆன்டி-வைரல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.மேலும் வைட்டமின் சி,நிறைந்த எலுமிச்சை நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து,அதை தினமும் மூன்று வேளைகள் குடித்து வர,சளி மற்றும் கபம் பிரச்சினையில் இருந்து உடனே விடுபடலாம்

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் என்றும் அக்கறையுடன்
Title: Re: கிராமிய வைத்தியம் !
Post by: Arrow on June 19, 2019, 05:20:50 pm
முகத்தில் மற்றும் கழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தைப் போக்குவதற்கு
வெள்ளரிச்சாறு 4 தேக்கரண்டி தேன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி
பாசிப்பருப்பு ஒரு அரை டீஸ்பூன் இதனுடன் கொஞ்சம் சோற்றுக்கற்றாழை சேர்த்து
பசை போலாக்கி அந்த கருமை நிறம் உள்ள இடங்களில் கழுத்திலும் முகத்திலும் தடவி
ஒரு 40 நிமிடம் ஊற வைத்து அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும்
முடிந்தால் ஒரு நாளைக்கு இருமுறை அல்லது ஒரு முறை
ஒரு பத்து முதல் பதினைந்து நாட்கள் தொடர்ச்சியாக செய்து வர
 நல்ல பலன் கிட்டும்