GTC FORUM
POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Empty Dappa on November 09, 2026, 02:04:40 am
-
துரோகத்திற்கு ஒரு காரணம்
கைவிடுதலுக்கு ஒரு காரணம்
வாக்குமீறலுக்கு ஒரு காரணம்
ஏமாற்றுதலுக்கு ஒரு காரணம்
என
இருக்கத்தான்
செய்கின்றன
ஒவ்வொருவருக்கும்
ஒரு காரணம்
ஒரு நியாயப்படுத்தல்
ஒரு சமாதானம்
ஒரு தன்னிலை விளக்கம்
அத்தனைக்குப்பின்பும்
அதையெல்லாம்
இருந்து நீ கேட்கத்தான்
வேண்டுமா
என்ன
எல்லாவற்றுக்கும்
வெறுமனே
ஒரு காரணம் சொல்லி
சமாளிக்கப் பார்ப்பவர்களை
இனி
எந்த காரணமும்
சொல்லாமல்
விட்டு விலகி வா
அவர்கள்
தனித்திருக்கட்டும்
ஒன்றுக்கும் உதவாத
தமது
காரணங்களோடு