உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.
4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
கவிதையும் கானமும்-067
இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம்.
(https://i.postimg.cc/Rh8Vgz5S/GTC-kava-ta-ya-ma-ka-nama-ma-067.jpg) (https://postimages.org/)
மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
ஒரு கவிதை எழுத ஆசை...
உன் கார் குழலின் கருப்பு மை தனை
கொஞ்சம் கடன் வாங்கி ..
உன் கருப்பு பொட்டு
தனை தலைப்பாய் இட்டு..
உன் கண்கள் இரண்டை கொண்டு
உலகை கண்டு .....
உன் மூக்கின் நுனியில்
மூச்சு தனை கடன் வாங்கி....
உன் செவ்விதழின்
வரிகளை வசனமாக்கி....
உன் வெண் சங்கு கழுத்து தனை
வெள்ளை காகிதமாக்கி.....
உன் கன்னம் இரண்டில்
வண்ணம் குழைத்து....
உன் மார்பின் மீது
கொஞ்சம் உறங்கி....
உன் கைகள் இரண்டை
பிடித்து கொண்டு
பத்து விரலில்
முளைத்த குட்டி நகங்களைப் பற்றி ....
உன் பிஞ்சு பாதம்
நடக்க
பூமி புனிதம் அடையும் இரகசியத்தை ....
அந்த வருணபகவான் அளித்த மழையெனும் பரிசில் நீ கையில் குடையுடனும் அந்த செல்ல சிரிப்பில்
பல வெள்ளை மனதை
கொள்ளை கொண்ட அழகை கண்டு ...
குட்டி தேவதையே உன்னை பற்றி
ஒரு கவி எழுத கோடி ஆசைக் கண்மணியே....
கால் முளைத்த வண்ணத்துப் பூச்சிகள்
மனதுக்குள் தேன் குடிக்குது...
சின்னஞ்சிறிய இதயத்திற்குள்ளே
சிறகடித்துப் பறக்குது.
இறகு இல்லா வான்பறவைகள்
மழலையாய் இங்கு வந்ததோ?
இதயம் கவரும்
மனம் கொத்திப்பறவைகள்
நம்மையும் கவர வந்ததோ?
குட்டி குட்டி சேட்டைகளில் தான்
எத்தனையோ அழகு இருக்கு.
நீ செய்யும் குறும்பிலே தான்
எல்லையில்லா அன்பும் இருக்கு.
மானிடப் பிறவியில்
மகிழ்ச்சியை மட்டுமே
தந்திடும் பருவம் இதுதானே!
மகிழ்ச்சி தேனை அள்ளிப் பருகிட
மனமும் ஏங்குது தானே!
ஆதவனும் உன்னுடன் போட்டியிட்டு
ஓய்ந்தே போகிறான் மாலையில்.
நீ உறங்கிய பின்னே சந்திரனும்
மெதுவாய் வந்து போகிறான்.
உந்தன் முகத்தில் காணும் சிரிப்பில்
கடவுளும் அடிமை தான்.
நீ சொல்வதை செய்ய என்னை மாற்றிடும்
நீயும் கடவுள் தான்.
பிஞ்சு இதயத்திற்குள் நஞ்சு சேராது
நாமும் காத்திடுவோம்.
மழலையோடு சேர்ந்து மகிழ்ச்சியை
நாளும் பகிர்ந்திடுவோம்......
என்றும் உங்கள் நட்பில்