GTC FORUM
General Category => Cooking Tips - சமையல் குறிப்புகள் => Topic started by: AnJaLi on January 11, 2026, 04:07:38 pm
-
தேவையான பொருட்கள்:
காளான் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கசகசா - 1/4 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 மூடி
மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி
மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 3
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கொத்து
செய்முறை:
காளானை சுத்தம் செய்து வெந்நீரில் போட்டுக் கழுவி, பெரிய பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும்.
தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை தனியே தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, போட்டு தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் வெட்டிய காளானைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பிறகு தனியே அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக சிறிது நேரம் அடுப்பை மெல்லிய தீயில் எரியவிட்டு, பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்துமல்லி தழை சேர்க்க வேண்டும்.