GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: RiJiA on December 15, 2025, 05:45:13 pm

Title: கவிதையும் கானமும்-061
Post by: RiJiA on December 15, 2025, 05:45:13 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-061


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://i.postimg.cc/hvsDWZ5h/kava-ta-ya-ma-ka-nama-ma-061.jpg) (https://postimg.cc/xNkDL5YS)



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-061
Post by: Limat on December 16, 2025, 10:53:36 am
வேங்குழலில் இழைந்தாயடி....!


வெண்பாவில் கவிதையின் அழகு மிளிரும்
பெண் என்பாவால் உன்னழகை நான்
மிளிரச் செய்வேன் என் கவி வரிகளால்....

நதிக்கு நெளிவு அழகு
நிலவுக்குப் பிறை அழகு
கன்னத்தில் உன் குழிவு அழகு
கவிதைக்கு என் தமிழ் அழகு !
இந்த தமிழின் கவி வரிகளுக்கு அவன் அம்முவே அழகு!

அழகிய‌ நிலவை அருகில் கண்டேன் இன்று..
விளக்கின் ஒளியை உள்வாங்கி பிரகாசித்த அவள் முகத்தை என் கையில் ஏந்தி..

நீல வானத்தில்...!!!!
வெண்ணிற வான்மேகத்தின் உன் விழிகளும்...!!!

மலைச் சாரலுக்கு
முன் அந்தியில் தோன்றும்
கார்மேகத்தின் உன் கண் இமைகளும்...!!!

அதில்

சட்ரென மின்னலைப் போன்ற ஒளிவிசும்
உன் பார்வையும்
எப்பொழுதும் இயற்கையின் அழகுதான்...!!!

தாமரைக்கு போட்டியாய் நீரில் நிற்கும்
உன்னைக் கண்டதும்
தாமரைகள் தற்கொலை செய்தனவோ
செத்தமீனாய் மிதக்கிறதே...

எதிர்பாராத என் வாழ்வில்
எதிரே நீ தோன்றினாய்!

கண்களால் உன்னை கண்ட நொடியே
கண்மணிகளில் விழுந்தேன்...!

நிமிர்ந்து பார்க்க நேரமின்றி
நிழல் அதில்
நிலை மாறி விழுந்தேன்...!

சிரித்த நேரமே சிந்திக்க நேரமின்றி
சின்ன சிரிப்பில் விழுந்தேன்...!

அழகிய உன் முகம் அது
அங்கும் இங்கும் ஆட!
அசைய மறந்து ஆசையில் விழுந்தேன்...!

ஒருபுறம் ஒதுங்கிய கூந்தலில்
மறுபுறம் பார்க்க மனமின்றி
மயங்கி விழுந்தேன்...!

கட்டிய கைகளைக் கண்டு கண் விழிக்க முடியாமல் கறைந்து நின்றேனடி!
உயிரே
உன்னைக் கண்ட நொடியில்...!
சிலை அழகின் கலை மகளே
உனை படைத்து !

பிரம்மனும் தற்பெருமை
கொண்டானோ...!!!!

சிலையென வடிக்க தான்
நினைத்தான்!

சிந்தையில் உதிர்த்ததால்
உயிர் தந்து பூமியில்
விதைத்தானோ...!!!!

உயிர் கொண்ட ரோஜாவே
உனை அன்றி வேறொன்றும்
அழகாகதோன்றவில்லை இப்பூமியிலே...

உந்தன் இதழ்களில் ஒட்டிய சிவந்த சாயத்தின் வாசத்தை கேட்டுப்பார்
அது உன் மேல் நான்கொண்ட
காதலை சொல்லும்...

உந்தன் விழிகளில் குளிர்ச்சி காற்றை அள்ளி பூசும் கண்மையை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்...

உன் வெட்டிய கூந்தலோடு உறவாடும் ஜன்னலோர காற்றை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்...

உன் பாதங்களின் அழகை கூட்டும்
மருதாணியின் ஈரத்தை கேட்டுப்பார்
அது என் காதலை சொல்லும்

உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் வீட்டு வெள்ளை நாய்குட்டியை
கேட்டுப்பார் அது என் காதலை சொல்லும்

ஏன் இவ்வளவு ஒரே ஒருமுறை என்
இதயத்துடிப்பை கேட்டுப்பார்
அது உன் பேரையே
சொல்லி துதிக்கும்...

தினமும் அவளுக்காக நான் காத்திருந்த நிமிடங்கள் என் அகராதியில் யுகங்கள்...

அவள் பார்வை என்மீது பட்டபோதெல்லாம் என் வாலிபம் உல்லாச
ஊஞ்சலாடியது...

அவள் என்பேரை
உச்சரிக்கும்போதெல்லாம் எனக்கு
மீண்டும் ஒருமுறை
இறந்து பிறக்க தோன்றுகிறது...

நான் அவளின் பெயரை
உச்சரிக்கும் போதெல்லாம்
என் மனதில் தேனருவி பாய்கிறது...

வண்ணம் தீட்டிய அவளின்
இதழின் கோடுகளில் சிக்கிய
என் இதயம் வழிதவறிய
ஆடுப்போல் அலைகிறது...

அவளின் புன்னகையில் மயங்கி என் இளமையும் மழலை பேசுகிறது...

அவளின் மௌனத்தை கண்டால் கடலலையும் ஊமையாகிவிடும்...

முன் யோசனையோடு எல்லாம்
படைத்தான் இறைவன்..
முக்கிய உறுப்பாய் கண்ணை
படைத்தான்..
படைத்தவன் அறிந்த என்னவளின்
ரகசியம் பற்றி கவலையில்லாது
படைப்பானவன் நான் படைக்க முனைந்தேன் எனக்கேற்றபடி...

படைத்தவனுக்கு அடுத்தபடி

வார்த்தைகள் என் படைப்பில் மொழியானது

மொழியில் உள்ள அழகு என்ற வார்த்தை

மொழிகள் அனைத்தையும் ஆராதித்தது

கண்ணை கவரும் அனைத்தும்
அழகு என்ற விதியானது

காதலுக்கும் அழகு என்ற
வார்த்தை அடிப்படையானது

இவையனைத்தும் கண்ணால் காண்பது

கண்ணால் காணாத அழகும் உள்ளது

அது மனதால் மட்டும் உணர்ந்துக்
கொள்வது

அழகு என்ற வார்த்தை சுகமானது

அது ரசிப்பவர்களின் சொத்தானது..,

போவதாய் சொல்லி விட்டு
உடனே போய் இருக்கலாம் !
இப்போது பார் !
நீ மெதுவாய் நடந்து போகும்
அழகை பார்த்து !

இன்னொரு "கவிதை " எழுத
வேண்டியதாய் போயிற்று !

அவளை கடந்துப்போகும் நொடியில்
என் ஐம்புலனும் மயங்க கண்டேன்...

அவள் கண்கள் பார்த்து நின்றேன்
என் உயிரை அள்ளிச்சென்றாள்...

அவள் உறவை நாடிச்சென்றேன்
என் இரவை இறவல் கேட்டாள்...

அவள் நெஞ்சில் ஒலிந்துக்கொண்டேன்
என் உயிரில் கலந்துக்கொண்டாள்...

அவளின் அடர்ந்த கூந்தலில்
என் இரவை பதுக்கிவைத்தேன்...

அவள் மடிக்கு ஏங்கிய என் மனதை
துடிக்க வைத்து துதிக்க வைத்தாள்...

என் தனிமைக்கு துணையாக
அவளின் நினைவை அனுப்பி வைத்தாள்

அவள் நினைவும் என் நினைவும்
உரசிக்கொண்டு பூக்கள் பூத்தன..