உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.
4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
கவிதையும் கானமும்-057
இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம்.
(https://i.postimg.cc/QCrPXh4Q/Global-Tamil-Chat-20250818-201424-0000.jpg) (https://postimages.org/)
மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
உன் முகம் பார்க்க தவிக்கும் அவன்”
எங்கு தொடங்கினோம் உன்னோடு நானே,
உறவெனத் தெரியாமல் உயிரோடு நானே.
“ட்ரூத் ஆர் டேர்?” என்ற கேள்வி போல,
தோன்றியது காதல்—தீப்பொறி சோலை.
விளையாட்டின் கேள்வியில் வந்தது பாசம்,
விளையாட்டின் வார்த்தையில் நின்றது நேசம்.
சொல்லாமல் வளர்ந்தது உணர்வு பெரிது,
சொல்ல வார்த்தை போதவில்லை—இதயம் நிரம்பியது.
மழை பெய்த பாதையில் நீ நடந்தாய் முன்புறம்,
நம் காதலோடு நான் நடந்தேன் எப்போதும் பின்புறம்.
உன் முகத்தை மறைத்தது குடையின் கருமை,
அதிலே நீயே சொன்னாய் மௌனத்தின் உருமை.
அன்பே…!
குடை நீ சுமப்பது பாரமல்லவோ காதலி?
குடும்பம், கட்டுப்பாடு, கனவுகளைத் தடுத்தலி.
அந்தக் குடை வலி—அந்தக் குடை சங்கிலி,
அந்தக் குடை மழையில் மறைந்ததே மாங்கலி.
நீ காட்டாத முகத்தை நான் காணும் கனவிலே,
நீ மறைத்த சிரிப்பை நான் உணரும் இரவிலே.
என் கையைப் பிடித்தால் உன் பயங்கள் கரையும்,
என் அருகில் நடந்தால் உலகங்கள் மறையும்.
இன்னும் நேரில் பார்க்கவில்லை என் பார்வை,
ஆனால் மனதில் நிறைந்தது உன் உருவ பாரை.
உன்னை காணும் நாளை எண்ணி காத்திருக்கும்,
என் காதல் தீயாய் தினமும் எரிகிறது.
நான் விரும்புவது ஒன்றுதான்,
உன் முகத்தை நாளும் காண வேண்டும்.
உன் சிரிப்பு சூரியமாய் எனை ஒளி செய்ய,
உன் முகமே என் வாழ்வை நிறை செய்ய.
குடையை விட்டு வெளியே வா கண்ணே,
உன் முகத்தை காட்டிவிடு இங்கே.
உன் பார்வை மழையில் நனைந்து,
என் உயிரை வாழ விட்டு விடு.
காதல் என்றால் அது நீயே,
வாழ்வு என்றால் அது நாமே.
மரணமில்லா பந்தமாய்,
மாறாத நேசமாய்.
உன் முகம் பார்க்கத் தவிக்கும்,
உன்னுடைய அவன் ❤️