GTC FORUM

POEMS - கவிதைகள் => Own Poems - சொந்த கவிதைகள் => Topic started by: Shaswath on June 25, 2025, 04:33:18 am

Title: Shasuvin Kavithaigal
Post by: Shaswath on June 25, 2025, 04:33:18 am
-
Title: Re: Shasuvin Kavithaigal
Post by: Shaswath on June 25, 2025, 05:08:46 am
பரிதாபம்

கடிகாரத்தில் முப்பது நிமிட அளவில்…
இக்கரைக்கு அக்கறை இருண்ட அணை

அளவை கடந்ததும்…
இக்கறைக்கு இக்கறை தான் துணை

அக்கறை வேதனையின் ஒளி சட்டென்று தோன்றியதோ?
இல்லையெனில் இக்கறையின் சோகம் தான் குறுகிய நேரம் மறைந்திறந்ததோ?

இல்லை!

அக்கறையின் நரகத்தின் ஒளி துகள்கள் பரவலாக சுற்றி கொண்டு தான் இருக்கிறது,
இக்கறையின் விழிகளில் விழத்தான் எங்கிருந்தோ முளைக்கும் இந்த முப்பது நிமிடங்களின் தேவை

முப்பது நிமிடம் முழுதும் அரங்கேறும் ஊழல்!

தீமை என்று தெரிந்தும் அரங்கேறுவது பணம்,
அறியாமலே அரங்கேறுவது பரிதாபம்

😊








Title: Re: Shasuvin Kavithaigal
Post by: Shaswath on June 26, 2025, 04:15:12 am
இரவினில் ஆட்டம்


நிலவின் ஒளி மிஞ்சும்,
அறைகளில் அடைந்து வாழும் விலக்குகளை!

உயிரும் இரங்கி கெஞ்சும்,
இவைகளின் விடுதலை எண்ணி!

சுய ஓய்வை பற்றின கவலை இன்றி,
இவைகளின் உறக்கம் சார்ந்து கவலையா?

விரிந்த காதுகள்,
இசையருவியை அனுமதிக்கும் கதவுகள்

வீடெங்கும் உழாவும் சாந்தம்,
தனக்கென்று விளையாடும் பாடலின் ஆனந்தம்

பகல் முழுதும் மற்றவர் சார்ந்த ஆட்டம்!

குறுகிய நேரம் ஒன்று,
எனக்குரியதாய் அமைந்திருக்க,
உறக்கம் எனும் பாரத்தை நான் மறுக்க இயலாதா நிலவே?

🌙 🎶

Title: Re: Shasuvin Kavithaigal
Post by: Shaswath on July 03, 2025, 03:41:02 am
ஜகத்தினால் அளக்க முடியா அளவில் மிதக்கிராய்,
தூய்மையாக எங்கள் நெகிழி குப்பிகளில் அடைந்து கிடக்கிறாய்

எங்கும் எப்பொழுதும் ஓலையிடும் தாகம்,
 உடனடியே எங்கள் இதயம் குளிர செய்வாய்

பல வடிவங்களை ஏற்றி சுற்றி வறுகிராய்,
உயிர் கொண்ட ஜீவன்கள் யாவும் பிழைக்க இடம் தறுகிராய்

ஆனால் பலர் உன்னை மதிப்பதில்லை,
 உன் மதிப்பை அறியா அலச்சியவாதிகளாக அலைகிறோம்

மதிக்க பழகுவோம்!
நம் வாழ்வை நிமிடம் தோறும் கரைசேர்க்கும் சாம்ராஜியத்திற்கு தீங்கு செய்ய இயலாது!

செய்தோமே ஆனால்…ஒன்றை நினைவில் பதிப்போம்:

நம் எல்லோரின் வாழ்வில் அசையா தடமாய் வலிகள் கோடி எரிந்துகொண்டு இருக்கின்றன,
அவைகளை அவ்வப்போது தனிக்க கப்பல் ஒன்று கண்ணோரம் ஆட செய்யும்,

ஆடுவது தொடர வேண்டும் அல்லவா? இல்லையெனில் சோகங்கள் நம்மை பொசுக்கி விடும்!


நீர் 💧
Title: Re: Shasuvin Kavithaigal
Post by: RiJiA on August 28, 2025, 04:53:40 pm
Hi Shaswath  Brother 3 kavithai  nalla irukku👏👏👏