காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி-1
காதலர் தினத்தை முன்னிட்டு காதல் சம்பந்தமான கவிதைகளை பதிவிடலாம்.
காதல் பிரிவு
காதலில் ஊடல்
காதலில் விழுதல்
முதற் காதல்
இது போன்ற ஏதேனும் ஒரு கருவை மையமாக கொண்ட கவிதைகளை பதிவிடலாம்.
விதிமுறைகள்:
1.கவிதைகள் சொந்த கவிதைகளாக அமைந்திருத்தல் வேண்டும்.
2 குறைந்த பட்சம் 20 வரிகளும் , அதிகபட்சமாக 50 வரிகளுக்குள் அமைந்திருக்க வேண்டும்
3 பிப்ரவரி 11 தேதிக்கு முன்பு கவிதைகளை பதிவிட வேண்டும்.
(https://i.pinimg.com/736x/0e/96/a9/0e96a9fcfc5c282532df85dcca4bdb43.jpg)
என் வாழ்வு எனக்கானதாய்
விளம்பரத்தில் ஒன்றாய்
நிஜத்தில் வேறொன்றாய் விளங்கும்
அத்தனை விற்பனை பொருட்களை போலவே
நானும் இருப்பேனென்று இல்லை.
ஏனென்றால் நான் விற்பனைக்கு இல்லை.
முழுமை எனும் போலி முகமூடி - என்
முகம் மறைக்க தேவையில்லை
நான் எதிலும் முழுமையாய் இல்லை
முழுமையாக போவதும் இல்லை
நேற்றிலும் இன்று முன்னேற்றமாக இருக்க யோசிக்கும் சாதாரண மானிடனே
எல்லோரையும் திருப்தி செய்ய
என் மனசாட்சி விடுவதில்லை
தேவைக்கேற்ப மாறும்
தேவை முடிய மாறும் சில மானிடரிற்கும்
நல்லவனாய் இருந்து நான் என்ன செய்ய போகிறேன்.
இறுதிவரை யாரும் உடனிருக்க போவதில்லை
உடனிருந்தாலும் எனை உணர்ந்திருக்க போவதில்லை
எனை உணர்ந்து உடனிருக்கும் ஓருயிர்
எனைத்தவிர வேறு யார்?
முழுமையிலா என்னை தராசிலேற்றாது
முழுதாய் ஏற்பது
எனைத்தவிர வேறு யார்?
அப்படிப்பட்ட என்னை நான்
நம்பி, ஏற்று, அக்கறைப்பட்டு, நேசித்து, முக்கியத்துவம் கொடுத்து வாழ
சந்தோசமும் நிம்மதியும் தேடப்படுவதாய் இல்லாமல்
என்னால் உருவாக்கப்படுவதாய் இருக்கும்.
என் வாழ்வு எனக்கானதாய் மீளத்தொடங்கும்.