(https://globaltamilchat.com/forum/upload1/newrule.jpg)
சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..
புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.
அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை அளிக்கப்படும்.
ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில் .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்..
அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..
உதாரணமாக .....
கடந்த வாரம் சங்கீத மேகம் 76இல் பங்கு பெற்ற Membersai தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 77இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.. ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#077
நிகழ்ச்சி : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் : சனிக்கிழமை இரவு ( இந்திய நேரம் ) 09:00 மணி
நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் . யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.
பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில் வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப் செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.
வரைமுறைகள்:
ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும்.
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.
ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்