GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on July 17, 2023, 06:49:34 pm

Title: கவிதையும் கானமும்-028
Post by: Administrator on July 17, 2023, 06:49:34 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-028


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk028.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-028
Post by: iamcvr on July 22, 2023, 08:06:00 pm
தலைப்பு : எரிபொருளாய் என் காதல்

கற்பனையில் கவிதை கனிகிறது

முகம் உரசும் மென் காற்றில்,
தோள் அணைத்த உன் கையோடு,
தொடங்கியது என் பயணம்;
கழுத்துரசும் உன் பேச்சிலும் மூச்சிலும்
முழுமை தொட முயற்சித்தது.

வாழும் காலங்கள்
நீளும் தூரங்களாய் - வழி
அமைத்து ; அழைத்து சென்றிட
துளிர் விட்டு வளர்ந்திட்ட காதல் - தயக்கம் விட்டு கட்டியணைத்தது.
தலை சாய்த்து முத்தமிட்டது
மென் தூறல் என் முகம் பட்ட பரவசம்
விழிகளால் சிரித்தேன் - புலன்களிடையே புது அனுபவம்

இதம் தாண்டி இதயம் தொட்டு
ரத்தத்தோடு ரகசியமாய் பரவியது
என் கற்பனையின் கடைசி வரி

ம்ம்ம்...
பிடித்தவளுடனான பயணம்
திரைப்படங்கள் வழி கண்டு
தீரா ஏக்கம் கொண்டு
கற்பனையில் கழிந்த பொழுதுகள் ;
கனிந்த கவிதைகள்,
நிகழும் நிலை எப்போது என
என்னுள்ளே கேட்ட கேள்விகள்,
என்றாவது நடக்கும் எனும் நம்பிக்கையில்.

தூரங்கள் நீளட்டும்;
எரிபொருளாய் என் காதல்
தீரப்போவதில்லையே.
Title: Re: கவிதையும் கானமும்-028
Post by: Vaanmugil on July 24, 2023, 02:17:24 pm
நெடுந்தூர பயணம் என்னவனோடு....

வாழ்க்கை என்னும்
இலக்கில்லா பயணத்தில்
இலக்கை எட்ட
சில வரைவுகளால் வரையப்பட்ட
ஓர் காதல் பயணம்...

தொலைதூர பயணத்தில்
என் காதலோடு தொலைகிறேன் நான்.........
தீரா காதலோடும்,
என் மன முழுதும் தித்திப்பிலும்
பயணிக்கிறேன் நான்.......

ஏனோ !!
அவனோடு இருக்கும் தருணம்,
அகிலத்தில் நிசப்தம் காண்கிறேன்....
ஆரவாரம் செய்யாமல்
மனதுக்குள் சதிர் ஒன்றை எண்ணுகிறேன்...

அவனோடு இருக்கும் தருணம்,
புது உலகம் ஒன்றையும்,
புதுமை அனுபவத்திலும்,
வானம் வசப்பட்டு மும்மாரி கொண்டு
வாழ்த்துரைப்பையும் உணர்கிறேன் நான்......

அவனோடு இருக்கும் தருணம்,
இளங்காற்று வீசும் திசையில்
அசையும் சாலை ஓர மரங்கள்
ஏதேதோ ஒரு சல சலப்பு சஞ்சரிக்கிறது...
இதில், குயில்களும் குருவிகளும்
புதியதாய் இந்த காதல் பயணத்துக்கு
இசை மீட்டுகிறது...

தென்றலின் மெய் தீண்டலில்  ..
இதயத்தில் ஓர் இணக்கம் ஒன்றை ஏற்படுத்துகிறது....

என்னவனோடு,
நீண்ட தூர பயணத்தை
இனிமையாய் நீளச் செய்கிறது.....

Title: Re: கவிதையும் கானமும்-028
Post by: Nilla on July 25, 2023, 08:45:01 pm
அன்றொரு நாள்
கனவில் நான் கண்ட நாள்
மலைகளின் இளவரசியின் மடியில்
மழை சாரல் வருட
என் விரல் பிடித்து நடந்துக்கோன்றிருந்தாய் நீ
என்னவன் எனக்கானவன் என்னோடு எனக்காகவே
என்ற பெருமிதத்தில் நான்

காதலிக்க ஆரம்பித்த அந்த நாள் முதல் இன்று வரை
நான் மட்டுமே உலகம் உனக்கு...

உனக்கு என்ன பிடிக்கும் மாமா ?
என்று நான் கேட்க
உன் சந்தோசம்தான்  என் சந்தோசம் என்று
சொல்வதோடு நிற்த்தவில்லை நீ

நான் அழும்போது
உன் கண்களில் முட்டி நின்ற கண்ணீர்

என்  கனவுகளை
உன் கண்களில் சுமந்து நின்ற அந்த தருணங்கள்,

நான் இருக்கேன் செல்லம்
என்ற உன் வார்த்தைகள்,

எல்லா காதலர்களும் பேசிகொள்வதுதானே
நீயோ பேசுவதோடு நிற்காமல் வாழ்ந்து காட்டுகிறாய்,

என் சுமைகளை என் தோளில் சுமந்து நின்றேன்
நீ வந்தாய் அதிகம் பேசாமல் அலட்டிகொள்ளாமல்
அமைதியாக தோள் கொடுத்தாய்
பிரம்மித்தேன்!

எனக்குள் இருக்கும் குழந்தை தனத்தை
அதிகம் பார்த்தவன் நீ
அரவனைத்தவன் நீ.....

அப்பா.......
ஈடு செய்ய முடியாத ஒரு உறவு உண்மைதான்
ஆனால் எனை ஈன்ற தாயையும் தாங்கும்
நீ ஈடு இணை இல்லாதவனடா.....

எங்கிருந்து வந்தாயோ
ஏன் தாமதமாக வந்தாயோ தெரியவில்லை
 
ஒன்று மற்றும் தெரியுமடா மாமா
இந்த பயணம் என்றும் முடியாதடா!!!!


            Nilaaaaaaaaaa!!!!!!
Title: Re: கவிதையும் கானமும்-028
Post by: Passing Clouds on July 28, 2023, 11:01:58 am
பேருந்தில் நீ என்னக்கு ஜன்னல் ஓரம் ஆனால்   இப்பொழுது நாம்  பயணிப்பது
சுற்றும் திறந்துள்ள  உள்ள இரு சக்கர வாகனம் !

ஒரு ஆணின் வெற்றியின் பின்னால்  பெண்ணுள்ளாள்  என்பது
இந்த படத்தின் மூலமாக தெளிவு பெற்றது !

நம் பயணத்தின் பொது எராளமான காட்டிச்சிகளை காண்பதுண்டு
ஆனால் பெண்ணே நான்  சாலையை காண்பதை விட
வாகன கண்ணாடியில் உனையே காண்கிறேன் !

நாம் வாகனத்தில் செல்லும்போது காற்றுகூட நம்மீது கோபம் கொள்கிறது
இடையே நுழைய இடம் இல்லையென்று !

சூரியன் ஒளிகூட என் மீது கோபம்  கொள்கிறது
எனது நிழலை கொண்டு உன்னை மறைத்து கொள்கிறேன் என்று !

பெண்ணே பயணத்தின் பொது நீ உறங்கும் தலையணை ஆகிறது எனது முதுகு !

காற்றடிக்கும் போது உனது கூந்தல் முடிகள் என்னை வருடிச்செல்கின்றன!

சாலையோர பள்ளங்களில் பார்த்து பார்த்து வாகனத்தை செலுத்துகிறேன்
உனது தூக்கம் கலையக்கூடாது என்பற்காக !

செடியின் கோடி படர்வதுபோல் உனது கைகள்
என்னை பிடிப்பதற்க்க்கா படர்ந்து இருந்தது !

தூங்கி எழுந்ததும் உனது குறும்புத்தனத்தை என்மீது காட்டிடுவாய் !

இப்பொழுது நாம் கண்ட காட்சி  திருமணத்தின் பதாகை

காதலர்களாய்  இரு சக்கர வாகனத்தில் உலாவரும் நாம்

அந்த பதாகையை  பார்த்த பின் எப்பொழும் கணவன் மனைவியாக  வாழ்க்கையை
தொடங்குவோம் என்ற எதிர்பார்ப்பின்   பொழுது எடுத்த புகைப்படம் !!!


நன்றி

 

வான் _நீலம்
Title: Re: கவிதையும் கானமும்-028
Post by: MuYaL KuttY on July 28, 2023, 04:33:47 pm
தொலைதூரம் நீ இருக்கும் தருணங்களில்
உன்னை தேடி வெகுதூரம்
பயணிக்கும் என் உள்ளம்..

என் நெருக்கத்தில் நீ இருக்கும் பொழுது
அடையும்  அளப்பரிய மகிழ்ச்சியை
சொல்லவா வேண்டும்?

காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும் திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...

உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்...
இளைப்பாற இடம் கேட்டேன்
இதயத்தில் இணைந்து வாழும்
வரம் கொடுத்தாய்..

துன்பக்கடலில் தத்தளித்த போது
துடுப்பாயிருந்து கரை சேர்த்தாய்
மறந்துப்போன மகிழ்ச்சியை
மறுபடியும் மலர வைத்தாய் நீ...

மௌனமாக பேசிட
உன்னிடம்   மயங்கித்தான்
போனது என் மனம்!

விடுதலையில்லா சட்டம் வேண்டும்
உன் காதல் பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க...!

நித்தம் போகும் பயணம் தான்!
இருசக்கர வாகனத்தில் உன்னோடான பயணம்
எப்பொழுதும்  இன்பமாய் ஏனோ???
காதலுடனான இரு சக்கர வாகன பயணம்
அளவில்லா இன்பம் தரும் !!

என் காதல் மன்னவனே
இந்த நெருக்கம் என்றென்றும் வேண்டும்மடா...
இந்த நிமிடம் இப்படியே நீள..ள...ள...வேண்டும் என்று
இறைவனிடம்  வேண்டி கேட்கிறது உள்ளம்!!!
Title: Re: கவிதையும் கானமும்-028
Post by: oMicRoN on July 28, 2023, 09:52:27 pm
மழை சாரல்கள்
அவள் நாணங்கள்
இதழ் ஈரங்கள்
முடிவிலா  பயணங்கள்

இருள் சாலைகள்
பொழியும் நிலவுகள்
குளிரும் அணைப்புகள்
கூத்தாடும் இதயங்கள்

செதுக்கிய புருவங்கள்
எனை விழுங்கிய விழிகள்
மலரும் இதழ்கள்
மயக்கும்  வளங்க்ள்


என்னவள் எண்ணங்கள்
என்றென்றும் என்னுள்
உறையும் இந்நிமிடங்கள்
உலகமே உன் நினைவுகள்

உன் மூச்சுக்காற்றில்
என் உயிரின் அசைவுகள்
தேவதையே
உயிர் உள்ளவரை
உன்னை நேசிப்பேன்


 
Title: Re: கவிதையும் கானமும்-028
Post by: RiJiA on July 28, 2023, 11:50:23 pm
ஒரு வரியில் அடக்கி விட்ட  ஒட்டுமொத்தம்...
அதில் ஒரு பங்காக இருக்கிறேன் நான் ம‌ட்டு‌ம்...

ஒரு வார்த்த வராதானு ஏங்குன...
இப்ப கண்டுக்காம தூங்குன...

பேசணும்னு தினமும்  துடிச்ச...
இப்ப அத மறந்துட்டு  சிரிச்ச...

உன் இசை என் காதுக்குள்ள..
கேட்க கேட்க எனக்கு போதை தள்ள...

நேத்து சொன்ன போகாதென்று...
இன்னிக்கு  மெளனம்  சாதிக்கிற போதாதென்று...

காதலும் இல்ல...காத்திருக்கவும்  இல்ல
ஏங்கவும்  இல்ல... ஏன் எ‌ன்று கே‌ட்க்கவும் இல்ல...

தூங்கவும்  முடியல...
சிக்கிறமாவும்  விடியல...

தொலைந்து  போகவும்  மனமில்ல
தொடர்ந்து பேசவும் அறிவில்ல...

கண்ணீர் வந்து வந்து  போகுது ஒரு ஓரமா...
நீயோ என்ன விட்டு விலகி போர
தூரமா...

கொஞ்சி பேசுன வாயால கெஞ்சி கேக்குறேன்...
உன்ன மட்டும்தானே நெஞ்சுக்குள்ள தாங்குறேன்...

கேள்வியோ மனசுக்குள்ள ஆயிரம் இருக்கு..
கேட்க்கடுமா  பதில் இருக்கா
அதற்க்கு?...

உள்ளத  சொல்லிட்டேன்  வெட்கம்  விட்டு...
மறு பேச்சு  பேசல உன்  வார்த்தைக்கு கட்டுப்பட்டு...

மூச்சு புடிச்சி வச்சிருக்கேன்  உனை  பாக்க...
கரை வந்து சேர்ந்துவிடு எனை மீட்க..


நடந்ததை   மறந்திடு ...
வா என்னோடு  கலந்திடு...

மீண்டும் கிடைக்குமா ஒரு  நீண்ட  பயணம் உன்னோடு....

இம்முறை இறுக்கி அனைத்து கொள்ளவேன் என்னவனை  பின்னோடு..

என்  இரு  கைகள்  பின்னிக்  கொள்ளும் உன்  முன்னாடி....

உன்  உதட்டோரம் வரும்  சிரிப்பு  காட்டும்மடா   இந்தக்  கண்ணாடி...

முடிவே இல்லாத பயணம்  நீள வேண்டும்...
நீல வண்ண மேகம்  தழுவும்  போதை  வேண்டும்....