GTC FORUM

POEMS - கவிதைகள் => படித்து ரசித்த கவிதைகள் => Topic started by: MDU on February 12, 2019, 03:10:36 am

Title: அம்மா கவிதைகள்
Post by: MDU on February 12, 2019, 03:10:36 am
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெற்று
குற்றம் உன்மேல் எனும்
சுத்தமானவளே
--உனக்கு கோபிக்க தெரியாதா அம்மா .!

காற்றுப்பட்டு நான் வீழ்ந்தாலும்
கண்பட்டு வீழ்ந்தேன் என்று
ஊருக்கே திட்டிவிட்டு
கண் திருஷ்டி கழிப்பவளே
-- உனக்கு கண்ணானேனா நான் அம்மா .!

தோளுக்கு மேல் வளர்ந்த பின்பும்
தலை துடைத்து
எண்ணெய் தேய்க்க
--இன்னும் சலிக்கவில்லையா அம்மா .!

விக்கினாலும் தும்மினாலும்
நினைப்பது என் பிள்ளை என்று
நெகிழ்கின்றாயே அம்மா

நினைத்துக்கொள்கின்றேன்

இன்னுமோர் பிறப்பில் உனக்கு நான்
அன்னையாக ...!!
Title: அம்மா கவிதைகள்
Post by: MDU on February 16, 2019, 07:10:21 pm
கடல் கடந்து சென்றேன்.
கவிதைகள் பல படைத்தேன்.
வரலாற்றில் இடம் பிடித்தேன்.
காவியங்கள் பல படித்தேன்.
ஒரே ஒரு ஓவியத்தை மட்டும் இழந்தேன்.
அது தான் என் தாயின் முகம்.
Title: Amma
Post by: EWA on March 11, 2019, 01:29:17 pm
(https://tamilkavithai2017.files.wordpress.com/2017/07/video106.jpg?w=1400)


Thanks&Regards:

EWA
Title: Re: அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்
Post by: EWA on March 13, 2019, 03:54:44 am
Nice One :) :) :) :) :)
Title: Re: Amma
Post by: MDU on March 22, 2019, 04:40:24 am
(https://i.pinimg.com/originals/4b/6e/4c/4b6e4c3dfd982f599075793318bd59f3.gif)
Title: Re: Amma
Post by: Sanjana on September 11, 2022, 11:34:36 am
AMMA...
Title: Re: Amma
Post by: Sanjana on September 11, 2022, 11:35:07 am
AMMA...
Title: Re: Amma
Post by: Sanjana on September 11, 2022, 11:36:02 am
Amma...
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on October 31, 2022, 02:56:07 pm
தூக்கத்தில் உன்னைப் பற்றி
நினைப்பவள் காதலி..
தூங்காமல் கூட உன்னையே
நினைப்பவள் தாய்!!
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on November 11, 2022, 01:25:31 pm
மூன்றெழுத்து கவிதை சொல்லச் சொன்னால் முதலில் சொல்வேன் அம்மா என்று..!!

அப்படியா?
உனக்கு  முன்  சொல்லி விட்டுச் செல்வேன் இரண்டு  எழுத்து  கவிதை  தாய் என்று...!!RiJiA🙂❤💐
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on November 17, 2022, 07:01:28 pm
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது🙂
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: Sanjana on December 18, 2022, 05:34:17 pm
NICE ONE...
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on December 31, 2022, 10:08:03 am
(https://i.postimg.cc/T3zhm2kz/amma-kavithai-2.jpg) (https://postimg.cc/yDTVCKCj)
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on March 18, 2023, 10:36:28 am
(https://i.postimg.cc/QCdZ1J4q/verumai-mothers-day-quotes-600x600.jpg) (https://postimages.org/)
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: RiJiA on April 21, 2023, 08:41:05 pm
Title: Re: அம்மா கவிதைகள்
Post by: MDU on August 18, 2025, 02:43:08 am
🌹 அம்மா கவிதை 🌹

உலகம் முழுதும் தேடியாலும்
உனக்குச் சமம் யாரும் இல்லை,
உன் அன்பின் நிழலில் தான்
என் வாழ்க்கை மலர்கிறது அம்மா.

கண்ணில் தெரியும் கண்ணீரைத் துடைத்தவள் நீ,
கனவில் வரும் ஆசைகளைக் கண்டவள் நீ,
உன் சிரிப்பில் என் சுகம் இருக்க,
உன் மடியில் என் சோர்வு தணிகிறது அம்மா.

வானம் தந்தது வெளிச்சமெனில்,
நீ தந்தது உயிரின் ஒளி.
கடல் தந்தது அலைகளெனில்,
நீ தந்தது முடிவில்லா அன்பு.

என் மூச்சின் ஒவ்வொரு துளியிலும்
உன் பெயரே துடிக்கிறது,
என் உயிரின் முதல் தேவதை –
என்றும் என்றும் அம்மா தான். ❤️

MDU