Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Empty Dappa

Pages: 1 2 3 [4]
46
மறுதலித்து திரும்பையிலும்,
கன்னங்களில் வழிந்திடும்
அனுமதியின்றி
விழிகள் விழுங்கிட்ட
உன் கண்ணீர் துளிகள்
மனக்கதுப்புகளில் வழிந்திருந்தை
அறிந்திருக்கிறேன்

காயங்களுக்கே பழக்கப்பட்ட
மனமொன்றை
நிலுவையில் நீ வைத்திருப்பதை
பரஸ்பரம் அறிந்தே இருக்கிறோம்

வேண்டல்களை புறந்தள்ளி
நீ கடக்குகையிலும்
உனைத் தாங்கிட காத்திருக்கும்
இரு கரங்கள் குறித்து ஒருபோதும்
உனக்கு மாற்றுக் கருத்தேதும் இருப்பதில்லை

நேசம் தவிர்த்த உன் வார்த்தைகளில்
நிஜங்களிருக்கும் சாத்தியக்கூறுகள்
அறவே இருந்ததில்லை என்பதையும்
உறுதிசெய்யப்பட்ட சோதனையொன்றின் முடிவாய்
என்னில் எங்கோ பதித்து வைத்திருக்கிறது
இந்நேசம்

கண்கள் உலர அழுது தீர்த்தும்
குருதி உறைய காயம் செய்தும்
தீர்ந்திடாத ஈரமாகவே
சுரந்து கசிகிறது காதல்

ததும்ப ததும்ப நேசித்துருகும்
உன்னை நான் கடிந்தோதுவது
எப்படிச் சாத்தியம்

நேசத்தின் போதாமைகளில்
குறைசொல்லும் அவகாசங்கள் தான் நமக்கேது

என்னை நேசித்திருப்பதை
தவிர்த்து உனக்கும் வழியேதுமில்லை
கண்மணி

இப்பிறவி தீர்ந்தும் என்னை நேசித்தே இரு...

47
Own Poems - சொந்த கவிதைகள் / ....
« on: July 19, 2022, 01:18:35 am »
ஒரு அழகிய கவிதையை
எதிர்க்கொள்ளுகையில்
காதலாய் உயிர்ப்பெறுகிறாய் நீ

முன்னெப்போதோ நான் எழுதிய கவிதை
இன்னும் உன் புன்னகை மலரின் வாசனையையே
கொண்டிருக்கிறது

மனம் கவர்ந்த ஒரு இரவல் கவிதைக்கு பின்னாக
நீ தொலைத்த உன்னை
தேடித் தொடங்குகிறேன்

விரலுரசி முகரும் உயர்தர அத்தரின்
நறுமணமாய் நாசியில் பரவுகிறாய்

புலன்சிலிர்க்க வைக்கும்
இன்னொரு கவிதைக்காகவே
காத்திருக்கலாம் உனக்கான காதல்.

48
கொஞ்சம் கொஞ்சமாய்
அன்னியமாகிப் போய்விடும் போது
விரிவடையத் துவங்குகிறது
உன் வானம்

உனக்கான பாடலின் வரிகளை
நீ மறந்திடும் தருணத்தில்
ஈர்ப்பு தொலைத்திட்ட
ஒரு சரணத்தை
முணுமுணுத்துக் கொள்கிறேன்

நீ கேட்காத
கேள்வியொன்றின் பதிலை இன்னதென
நான் பாடமிட்டுக் கொள்ளுகையில் காலாவதியாகிப் போகிறது அக்கேள்வி

வருத்தங்களை கரைத்ததாய் புளங்காகிதப்பட்ட
ஒரு நிகழ்வை
நினைவுகளின் அடுக்கங்களில்
இன்னொரு வருத்தமாய்
பதிவு செய்து வைத்திருக்கிறேன்

கண்ணீர் உலர்ந்திட்ட
ஒரு துயராய்
நான் மாறிடுகையில்
உனக்கான பாடல் வரிகளை
பாடத் துவங்குகிறாய்

மந்தாரப் பனித்திரைகளை கரைக்கும்
மார்கழி வெயிலின் கதகதப்புக்கு
காத்திருந்த ஒர் புலரியில் தான்
உன் பெயர் எழுதப்பட்டிருந்தது

விசிச் சென்ற
பூங்காற்றின் வாசனையில்
இன்னும் நிறைந்திருக்கிறேன்
உயிர்க்கூட்டின் துடிப்பில்
ஒரு இரகசியமாகவே
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
உன் பெயர்

Pages: 1 2 3 [4]