Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Empty Dappa

Pages: 1 [2] 3 4
16
தன்னந்தனியே
அழுதழுது கூட
தீர்ந்து விடாத சோகங்களில்,
உழன்று கொண்டிருக்கும் ஒருத்தியின்
ஆகச் சிறந்த வேண்டுதல் ஒன்றுமில்லை.
அவள் உள்ளக்குமுறலில்
பாதியை சுமப்பதற்கான,
இன்னோர் உறவின்
தாங்குதலைத் தவிர.

சொல்லிவிடத் தெரியாத ஏக்கத்தை தன்னகத்தே
நிரப்பி வைத்துக் கொண்டு,
இறக்கி வைத்து விட
ஏங்கிக் கிடக்கும் ஒருத்தியின்
வலிகளுக்குத் தேவை ஒன்றுமில்லை.
தொண்டக்குள்சிக்கிக் கொண்டு தவிக்கும்
வார்த்தைகளை செவிமடுப்பதற்கான, இன்னோர் நிகரற்ற
துணையைத் தவிர.

புறக்கணித்து,
ஓரமாய் தள்ளி வைத்து,
நா பேசக்கூட
இடமளிக்கப்படாத,
ஒடுக்கி வைக்கப்பட்டவளின்
அரண்ட தனிமைக்கு
வேறொன்றும் தேவையில்லை.
ஆறுதல் உணர்த்திடத் தெரிந்த
சில மனிதர்களையும்,
விம்முதல்களை
தணித்து விடத் தயாராய் உள்ள
உறவொன்றின்
அளவற்ற நேசத்தையும் தவிர.

யாருமே புரிந்து கொள்ளவில்லையே? என்பதாய் எண்ணி,
தனக்குள்ளேயே
விசும்பிக் கொண்டிருப்பவளுக்கு...! நினைப்பதை
பேசி விடத் தேவையான,
ஓர் சில மணித்துளிகள்
போதுமாய் உள்ளது.
முழு வீச்சுடன் தன் பாரங்கள்
குறைக்கப்பட்டதாய் அவள் உணர்வதற்கு.

அலுத்துப் போய்,
விரக்தியின் எல்லைகளில்
நின்று கொண்டு,
இவ்வாழ்வு நமக்கும் ஏதோவோர்
விடுதலை மிச்சத்தை,
எப்போதாவது வழங்கி விடாதா என்று, குமுறிக் கொண்டிருக்கும்
ஒருத்தியின் கடைசி நிலைப்பாட்டுக்கு, வைத்தியமாய் எதுவுமில்லை.
அவளைச் சுற்றி உள்ள
அனைத்தும்
அன்பினால் நிரப்பப்படுவதை தவிர.

அவள்களை
அவள்களுக்கான சின்ன உலகத்தில், பிரம்மாண்டங்களாய்
உணர்த்தி விடுதலை தவிர,
அவள்களுக்குள்
அவ்வளவு பெரிதான
வேண்டுதல்கள் எதுவும் இருப்பதில்லை. அவ்வளவே தான்...!
படபடப்பில்லாமல்
வாழ்வை நகர்த்துவாள்

17
Own Poems - சொந்த கவிதைகள் / இசை🎧
« on: January 01, 2023, 11:09:10 am »
என் மனதை ஆக்கிரமிப்புச் செய்யவென்றே
சில பாடல் வரிகளை
நான் நெஞ்சோடு சேமித்து
வைத்துக் கொள்வேன்.
அவை மனிதர்களைப் போல
பல நேரம் ஏமாற்றம் தராதவை
எதிர்ப்பார்ப்புகளை தகர்க்காதவை.

என் மனம் அமைதி நாடும் போதெல்லாம்
மனதிற்கு நெருக்கத்தை ஏற்படுத்துபவை.
என் மனம் மடி நாடும் போதெல்லாம்
உறங்கிக் கொள்ள அனுமதி தருபவை
அவைகளிடம் சிறையாகும் போதெல்லாம்
நான் சுதந்திரமாய் திரிகிறேன்.

என் உணர்வுகளை
அத்துனை நேர்த்தியாய்
வெளிக்கொணர உதவுபவை.
நான் அதிகம் உரையாடல் செய்யும்
என் ரகசிய சகா!

நான் சிறகுலர்த்தி
பறக்கத் தேவைப்படும் போதெல்லாம்,
என் வானமாய்
அந்த இசை விரிந்து கொடுக்கும்.
நான் தனித்து நிற்க
நாடும் போதெல்லாம்
சிறையாய் மாறி
எனை கைது செய்து கொள்ளும்.
என் கண்ணீரை என்னிடமிருந்து
அவ்வப்போது கொஞ்சம்
வாடகைக்கு  வாங்கிச் செல்லும்.
துயரங்களை துடைத்து விடும்
கரங்களாய் மாறி நிற்கும்.
வெறுமைகளில்
மிக அன்னியோன்யமாய்
மனதோடு நெருங்கிப் பேசும்.
என் பல வன்மையான இரவுகளில்
மிக நீண்ட பேச்சுத் தோழனாக
கூடவே அமர்ந்திருக்கும்.

அவை மனிதர்களைப் போல
அவ்வப்போது
அந்நியப்பட்டுப் போவதில்லை.
மழை தூவிக் கொண்டிருப்பதை
என் சாளரத்தின் வழியே
எந்த படபடப்புமில்லாமல்
நான் ரசிக்கும் நள்ளிரவுகளில்,
என் மனதுக்கு ஒத்ததாகவே
அவை இருந்திருக்கிறது.
என் காது வழியே சென்று
என் மனதின் உயிர்ப்பை தட்டியெழுப்பி,
என் ஆன்மாவின் ஆசைகளை
அந்த மழையில் நனையச் செய்திருக்கிறது.
காலம் சென்ற என் நினைவுகளையும்,
காலாவதியான சில உறவுகளையும்,
அவ்வப்போது நினைவூட்டியிருக்கிறது.
சூழ்ந்து கிடந்த என் பயங்களுக்கு அபயமளித்திருக்கிறது.

பாறைகளின் ஈரத்திற்கும்,
பெருமழையின் உற்சவத்திற்கும்,
ஆழியின் ஆழத்திற்கும்,
ராத்திரியின் ரசனைகளுக்கும்,
நதிக்கரை கொண்ட நகரங்களுக்கும்,
என்னை கூட்டிச் சென்றிருக்கிறது.
நடைபாதை
அதிசயங்களையும்,
இரயில் பாதை
இடுக்குகளில் பூத்திருக்கும்
வெள்ளை மலர்களையும்,
இப்பிரபஞ்சத்தில்
காதல் வாழும் முடுக்குகளுக்கும்,
என்னை அழைத்துச் சென்று காட்டியிருக்கிறது.

Music_Is_The_Healing


18
உன்னோடு பகிர்கையில் இலகுவாகிறேன்...

அளவீடுகளும் மதிப்பீடுகளும் செய்யாதவை
உன் செவியேற்றல்கள்

உன் செவிகளுக்கு இதயமுண்டு
சில நேரம் தோளும்...
கரங்களையும் அவ்வப்போது
நீட்டிக்கொள்ளும் அது

ஆதரவாய் தலைகோதவும் செய்யும்
அதன் கரங்கள்
என் வலி தீர்க்க வேண்டிவரின்
ஆயுதம் பூண்டு சமர் செய்யவும் தயாராகும்...

பகிர்தல்கள் இதமூட்டுபவை
யாரோடும் பகிரலாம் தான்..

மகிழ்வொன்றின் பகிர்தல்
சுயபுராணமாய் தெரியக்கூடும்
இல்லை பொறாமையின்
பொறியொன்றை மூட்டிப் போகலாம்

கேட்பவரின் பலவீனமான பொழுதில்
அவரை காயப்படுத்திடவும் செய்யலாம்...

வலியின் பகிர்தல்கள் புலம்பல்களாக படலாம்
சிலநேரம் சலிப்பாகலாம் இல்லை
அழுத்தமுடைக்கும் ஒரு பணிவிடையெனக் கருதி
அமைதியாக செவியுறலாம்
அல்லையேல் செயற்கையான
ஒரு புன்னகை கொண்டு சகித்தும் போகலாம்

அன்றியும் பெரும்பான்மை பொழுதுகளில்
அலைவரிசைகளின் பொருந்தா நிலைகளில்
எல்லோரின் வெளிப்பாடுகளோடும்
ஒன்றிப் போய்விடவும் முடிந்திடுவதில்லை

உனக்கப்படியல்ல

எனக்கு சரிப்படும் ஏதோ ஒன்றை
அநிச்சையாகவே செய்து கடக்கும் உன் வெளிப்பாடு

அதை உன் நுட்பத்தில் சேர்ப்பதா
இல்லை உன் நேசத்தில் சேர்ப்பதா என்பதைத் தவிர்த்து
உன்னோடு பகிர்தலில் வேறு கேள்விகளும் இல்லை எனக்கு

உன்னோடு பகிர்கையில் இலகுவாகிப் போகிறேன்.

19
🍂

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் உண்டு.

தனிப்பட்ட சொந்த வாழ்க்கை,
பொது வாழ்க்கை,
மற்றும் அவரே அறியும் ரகசியமான வாழ்க்கை.

--மார்க்வெஸ்--

உண்மைதான் இல்லியா?
மூன்றாவது சொல்லப்பட்ட இந்த ரகசியமான வாழ்க்கையின்
சந்தோஷங்கள், துயரங்கள், கொண்டாட்டங்கள், சின்னச் சின்ன அச்சங்கள்,
அளவற்ற மகிழ்ச்சி போன்ற அனைத்துமே,
அவரவர் மனங்களுக்கு மட்டுமே சொந்தமானது.
எதுவொன்றின் பொருட்டும் அவைகளை
மனிதன் பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை.
ஏதோவொரு உந்துதலில்,
எப்போதாவது மட்டும் அதனைப்பற்றி,
தான் நம்புகின்ற ஒரு சிலரிடம் பேசக்கூடும்.

மனதிற்குள் தன்னந்தனியே நகர்ந்து கொண்டிருக்கும்
அந்த ரகசியமான வாழ்வு, அவரவரின் மன உலகுக்குள் மட்டுமே
எப்போதும் பயணிக்கிறது,
நினைத்துச் சிரிக்கிறது,
பரிதவித்து அழுகிறது, மீண்டெழுகிறது…..


20
Own Poems - சொந்த கவிதைகள் / தனிமை
« on: December 29, 2022, 05:32:37 am »
தனியா இருக்கேன், எனக்கு யாருமே இல்ல,
எனக்கு நா மட்டுந்தான் துணைன்னு
பொதுவா சொல்லிக்கலாம்.
உண்மையில இங்க யாருமே தனியா விடப்படுறதில்ல.
ஒரு பக்கமிருந்து இன்னொரு பக்கம்
திசை மாற்றப்படுதுன்னு வேணா சொல்லிக்கலாம்.

தனின்னு உலகத்துல யார சொல்லீற முடியும்.
வேணான்னு சொன்னாலும் யாரோவொருத்தர்
நம்மல அரவணைக்குறாங்க, நேசிக்கிறாங்க,
அன்ப தர்ராங்க, நம்ம நல்லாருக்கனும்ன்னு நினைக்கிறாங்க.

கூட்டமா ஒருத்தன கொன்னாலும்
அவனுக்காக அழுக ஆயிரம் கண்கள் இருக்கத்தான் செய்யும்.
எல்லாரும் என்னய வெறுக்குறாங்கன்னு
சொல்ற ஒருத்தனுக்காகவும் அழுது பிரார்த்திக்க
ஒரு உயிர் இருக்கும்.

அவ்ளோதான்.
இன்னமும் குழப்பாமாவே இருந்தா சிம்பிளா ஒன்னுதான்.
நமக்கு யார் இருக்கான்னு பாக்குறத விட்டுட்டு,
நம்மலாள முடிஞ்ச அளவு நாம யார் யாருக்கு
துணையா இருக்கோம்ன்னு யோசிக்கலாம்
நல்லாருக்கும்ல..!

"உலகத்தில் எவரும் தனிச்சி இல்லையே.
குழலில் ராகம், மலரில் வாசம் சேர்ந்தது போல!"

21
Own Poems - சொந்த கவிதைகள் / ஆழி
« on: December 28, 2022, 06:10:11 am »
மிக ஆழமான நேசங்களின் மிச்சங்கள் எப்போதும்
மிக ஆழமான வலிகளையும்
தந்துவிடத்தான் செய்கிறது.
அப்போது மட்டும் அழுவதை தவிரவோ முணங்கிக் கொண்டு
அல்லல் படுவதை தவிரவோ
எதையும் செய்யத் தோன்றுவதில்லை.

எஞ்சிப் போன காலத்திற்காகவும்
சற்று வலிகளை
சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்...!

அன்பெனும் போதைக்கு அடிமையானால்
தன்னிலை மறந்து கூட
துயர் பட நேரிடும்.
முதலில் உணர்வுகளின்
அத்தனை பலத்தையும்
மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு,
நம்மை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்தி விடும்.
பிறகு மீளவே முடியாத
எல்லைக்குள் நிற்க வைத்து
வதைப்புக்குள் அடக்கி விடும்.

பல போது மிருதுவான
நெஞ்சத்துக்கு அளிக்கப்படும்
அதிகபட்ச ரணமே...!
இந்த நேசத்தின் போதை தரும்
முதல் சொட்டு ஆர்ப்பரிப்புத் தான்.

22
பின்னாட்களில்
இடைவெளி விட்டுச் சென்றது
உணர்த்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே...!
இப்போதெல்லாம்
இடைவெளிகளோடு
உரையாட ஆரம்பித்து விட்டேன்.

விலகலுக்கு ஒப்பான
கடினமொன்று இங்கே இருந்ததில்லை, என்பதை துள்ளியமாய்
அறிந்து கொண்டதனாலேயே...!
சற்று அந்நியமாய்
இருந்துவிட முயற்சிக்கிறேன்.

சொற்களற்ற தனிமைக்குள்
மிகுதியாய் தள்ளப்பட்டு,
குரலற்ற மெளன சம்பாஷணைகளோடு எனக்குள் நானே உளருவதை
உணர்வுகள் காட்டித் தந்த போது...!
உண்டான அழுத்தத்தை
இனி பெற்று விடக் கூடாது
என்பதாலேயே
விலகியிருக்க கற்றுக் கொண்டேன்.

நியாபகங்களின்
மிச்சத் துகள்களை வைத்துக் கொண்டு அவதிப்படும் நிலையொன்று
கிடைப்பது போதுமென
கண்ட பிறகே...!
நேசித்தலில் நியாபகத்தை
நிறுத்தி விடாதபடியாக
சட்டென நகர்ந்து செல்கிறேன்.

மரித்துப்போன இதயத்தின் மேலே மீண்டுமொறுமுறை
அன்பெனும் அமிலத்தை,
யாரும் தெளித்து விடக் கூடாது
என்பதில் கவனமாக இருக்கிறேன்.
இங்கே அருகாமையில்
ஏலவே ஓர் குமியல் வெறுமை
செத்துக் கிடக்கிறது.

மூச்சுக்குழல் அடைத்துப் போகும்
அளவுக்கு அளிக்கப்படும்
அபரிமித நேசப் பரிமாற்றங்களில் இருந்து
வெகு தொலைவில்
தொலைந்திருக்கவே
மனதை திடப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

23
எதிர்ப்பாராத ஓர் த்ரோகத்தின்
சகதிக்குள் சிக்குண்டு
திணறி வெளியே வந்த போது.

அளவீடே அன்றி நேசித்த
பிறகான காலமதில்...!
விலகுதல் ஒன்று
திடீரென ஏற்பட்ட போது.

பெருந்துயர்களின்
பெரு வெளியொன்றில்
அப்படியே மொத்தமாய்
தனித்து விடப்பட்ட போது.

அருகே ஒட்டி உறவாடிய ஓர் நெஞ்சம் அவ்வப்போது
விலகலை நேர்த்தியாய்
உணர்த்தும் போது.

அதி கனமான நம்பிக்கைகள்
மிகச் சாதாரணமாக
நசுக்கி உடைக்கப்படும் போது.

சலனமே இல்லாமல்
மிகச் சிறப்பாக பேச்சற்று
ஒதுங்கி விடும் போது
ஒதுக்கப்படும் போது.

முன்போல் நேசப் பரிமாற்றங்கள்
அற்றுப் போய்
ஏக்கங்களோடு
தூரமாக்கப்படும் போது.

ஆனந்தமாய் நகர
புன்னகையை தந்தோரே...!
உயிர் வதைக்கும்
அழுகைக்கு காரணியாய் மாறும் போது.

நிரந்தரமென்று
எதுவுமே இல்லை என்பதை
பிற்பாடு காலம் உணர்த்தும் போது.

இச்சந்தர்பங்கள் எல்லாம் தரும்
அளவற்ற வலிகளுக்கு
பழகிக் கொண்டு
அதனூடாக கிடைக்கப் பெற்ற
நிகரற்ற அனுபவங்கள்
உணர்த்திவிட்டுச் சென்ற
எல்லாமும் தான்,

வாழ்வின் நகர்தலில்
நீங்காத இடத்தை
நினைவுகளால்
நிரப்பிக் கொண்டிருக்கிறது.

24
Own Poems - சொந்த கவிதைகள் / நலம்
« on: December 24, 2022, 05:54:36 am »
மனிதர்களை விட்டு வெகு தொலைவாகி விட்டதாக ஒரு எண்ணம்.
காதல், அன்பு, பரிமாற்றம் எதன் மீதுமே பிடிப்பில்லாத நிலைக்கு
மனம் தள்ளப்பட்டிருக்கிறது.

அதிகம் நேசித்த இன்னமும் நேசித்துக் கொண்டிருக்கிற
எத்தனையோ பேருக்கு இன்று நான் எங்கே இருக்கிறேன்,
என்ன செய்கிறேன் என்று கூட தெரியாது.

ஒரு விசயம் தெரியுமா மனிதா.
நாம் எந்தளவு ஒவ்வொரு மனிதனையும்
நேர்மறை எண்ணங்களைக் கொண்டு மதிப்பிட முயல்கிறோமோ,
அதேயளவு எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் அவர்கள்.

எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும் ஒரு மிருகம்
என்றேனும் வெளிப்பட்டு சாந்தமடையும்.
நாம் அடைக்கலம் கொண்டிருக்கும் ஒரு கூட்டில்
ஒருநாள் மழை பெய்யும், மறுநாள் வெயிலடிக்கும்.

எனக்கென்று யாருமில்லை என்று வருந்துவதை விட,
யாருக்கும் நான் பாரமாயில்லை
நானே என்னை பார்த்துக் கொள்கிறேன்
என்று பெருமையோடு தட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

நாம் மனிதர்களை நேசிக்காமலோ,
பிடிப்பில்லாமலோ ஆராய்வதில் துளியளவும் பயனில்லை.
இதில் எல்லாமவருக்கும் கைசேதம் தான் மிஞ்சும்.
சட்டென பிடித்து விடுங்கள். தொலைவாகி விட்டாலும் பரவாயில்லை.

இருக்கும் இறுக்கமான சூழ்நிலைகளுக்கு மத்தியில்
மனிதர்களுடனான விருப்பு, வெறுப்பு, ஆசைகளோடு
வாழ்வதை விட அவர்களுடனான நினைவுகளோடு வாழ்வது
கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.

25
நிறைய ரகசியங்கள் உள்ளது.
நிறைய கவிதைகள் உள்ளது.
மறைக்கப்பட்ட நிறைய அன்புகள் என்னுள் உள்ளது.
மறுக்கப்பட்ட நிறைய நியாயங்கள் என்னுள் உள்ளது.
மறக்க முடியாத நிறைய நினைவுகள் என்னுள் உள்ளது.
என்னோடு இன்னும் எத்தனையோ அபூர்வங்கள் நிறைந்துள்ளது.

உங்களுக்குத் தெரியாத, புரிந்து கொள்ள முடியாத
எத்தனையோ வித்தியாசமானவை
என்னுள் என்னை சிதைத்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் தெரிந்து வைத்திருப்பவை போல் எத்தனையோ மடங்கு
என்னுள் தேக்கி வைக்கப் பட்டிருக்கிறது….

ஓர் வெள்ளம் கடந்த படகாய்,
புயல் கடந்த மரமாய், பேரலை கடந்த தீவாய்,
பேரிடர் கடந்த நிலமாய், என் இடர் கடந்த மனம்
கரை சேர்ந்திடும் மடி அங்கேதான்.
நீயென்ற ஓர் சாயலைத் தான் இங்கே
ஆசீர்வாதமாய் தரச் சொல்லி கேட்டிருந்தேன்.

நான் மீண்டும் சொல்லிச் சிரித்து விட்டு
இதையெல்லாம் கடந்து ஏதோவொரு
கடல் நோக்கி பயணிக்கத் துவங்கி விடுகிறேன்.
ஏதோவொரு புன்னகை முகத்திற்காக ஓடத் துவங்கி விடுகிறேன்.

ஏதோவொரு சிரிப்புச் சத்தத்திற்காக நடக்கத் துவங்கி விடுகிறேன்.
ஏதோவொரு பாடல் குரலுக்காக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுகிறேன்.
என் தேங்கிப் போன எத்தனையோ இடுக்குகளை மறக்கடித்து வாழ வைக்க
எப்போதும் ஓர் அலாதியான காதல் உள்ளது.
அதுபோதுமென்று உன்னை நினைத்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் உன் நியாபகத் தீவில்
நான் தனியே உலவி நிதானமடைவதை விட
பெரிய நிம்மதியைத் தேடித் தேடித்
தொலைந்து கொண்டே தான் இருக்கிறேன்.

நீயென் அமைதிக்கான இடம் ♥

26
Own Poems - சொந்த கவிதைகள் / வாழ்🎭
« on: December 23, 2022, 05:24:35 am »
நான் இவ்வாழ்வின்
அகன்ற விதிகளுக்குள் இருந்து
அகப்படாதவாறு நகர்ந்திட, எத்தனிப்பதில்லை.
அதன் ஓட்டத்தில்
ஓர் அங்கமாகவே இருந்துவிட்டுப் போகத்தான்
பழகிக் கொள்கிறேன்.

என்னை தாங்கிக் கொள்வதற்கான கரங்களை
எப்போதும் நான் எதிர்ப்பார்த்ததில்லை.
எனக்குத் தெரியும்...!
எப்போதும் அவர்கள்
நான் நினைக்கின்ற போதெல்லாம் அருகிருந்து என்னை
அள்ளிக் கொள்ளப் போவதில்லை.

என் சுமைகளை
நீங்கள் கொஞ்சம்
சுமந்து கொள்ளுங்கள் என்றெண்ணி...!
பகிர்ந்தளித்து ஆறுதல் பெற்றதில்லை.
அவைகளை நான் மட்டும்தான்
சரி செய்ய வேண்டும்
என்பதற்காகத்தான்,
வாழ்வு என்மேல்
அவைகளை சுமத்தி இருக்கிறது.

இயல்புகளிலிருந்தோ
நியதிகளிலிருந்தோ
விலகிச் செயல்பட்டு,
செயற்கைகளுக்குள்
என்னை நானாகவே
திணித்துக் கொண்டதில்லை.
எனக்கு ஊர்ஜிதமாகத் தெரியும்...,
எத்துனைதான் பலத்த நடிப்புக்களை அரங்கேற்றினாலும்,
அதன் எல்லையில்
என் அடிப்படைக் குணங்களைத்தான்
இவ்வாழ்வு என்னிடம் வேண்டி நிற்கும்.

அனுதாபங்களை
பெற்றுக் கொள்வதில் எல்லாம்
எனக்கு சற்றும் உடன்பாடில்லை.
அவர்களுக்கும் அதே அனுதாபத்தை
அளிக்க நேர்கையில்...!
நான் அதில் தவறிழைத்து விட்டால்,
என்மீதான அபிப்பிராயத்தில்
சலனம் சற்றேனும் உண்டாகிவிடும்.

இதற்காகத்தான் சொல்கிறேன்...!
வாழ்வின் அவ்வப்போதைய
நிகழ்வுகளோடு, யதார்த்தத்தை ஏற்று,
ஓர் பாலைவனப் பயணியாய்
நடை போடுங்கள்.
ஏனெனில்...!
வாழ்வின் உபசரிப்பு
மிக வித்தியாசமானவை,
விநோதமானவை.
இடர்களின் நடுவே
பயணிக்கத்தான் அதிகம் நேரும்..

புன்னகை செய்!
ஏனெனில் உன் கவலைகளைக் கொண்டு
இந்த உலகினை மாற்றிவிட இயலாது்….
என்ற கலீல் ஜிப்ரானின் வரியொன்றில்,
எப்போதும் நான்துல்லியமாய் லயித்துக் கிடக்கிறேன்…..

27
அதன் பிறகு
கடந்து விட்ட மொத்த விசயங்களையும்
ஏதோ ஒன்றின் நிகழ்வாகவோ,
பொழுதுபோகாத பூமியின் தற்செயலாகவோ
பாவிக்கத் துவங்கியிருப்போம்.

அதன் பிறகு
அதீத அன்பு, ஆத்ம திருப்தி, கடுங்கோபம், பெருந்துயர்
என்று எதிலும் ஆட்படாத் தன்மையில் தனித்திருக்கவோ,
தியானித்திருக்கவோ தயாராயிருப்போம்.

அதன் பிறகு
முக்கியஸ்தர்களுக்கும், மரியாதைக்குரிய
பெரிய மனிதர்களென்ற சிலருக்கும்
சாதாரணர்கள் என்ற தோரணையிலான
பார்வையைக் கொடுத்திருப்போம்.

அதன் பிறகு
பெயர், புகழென்று ஓடித் திரியும்
வெண் சட்டைக் கார யோக்கியஸ்தர்களுடனான
சிறு விலகலை அத்தியாவசியமாக கடைபிடித்திருப்போம்.

அதன் பிறகு
எது எவ்வளவு பாதித்தாலும் வலிக்காமலோ,
அல்லது வலிப்பதை வெளிக் காட்டாமலோ
முடிந்தளவு அகக் கூறாய்வின் பக்குவத்திற்கு
அதனை இரையாக்கியிருப்போம்.

அதன் பிறகு
பணமென்று ஓடித் திரிந்த மனநிலை சாந்த மடைந்திருக்கும்
அல்லது அதுவே போதையாகி வெறியேறி பணத்தீயில்
விளையாட ஆசை வந்திருக்கும்.

அதன் பிறகு
முரட்டுத் தோள்களும், மிரட்டும் பாவணையும்
சற்றே கீழிறங்கி யாரென்றே தெரியாத ஏதோவொரு
குழந்தையின் அழுகையை நிறுத்த சிரிக்கத் தயாராயிருப்போம்.

அதன் பிறகு
சிலர் சாக நினைப்பார்கள்.
சிலர் சலிக்க சலிக்க வாழ்ந்து
செத்து விட நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
சிலர் வாழ்ந்து விட நினைப்பார்கள்.

அதன் பிறகென்பது
வாழ்வில் எதன் பிறகாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால்,
வாழ்வையே இரண்டாய் பிளக்கும்
பிரளயம் எல்லோர் வாழ்விலும் சாதாரணமான
அதிசயமாய் நிகழ்ந்து விடுகிறது.

அதன் பிறகு எல்லாம் மாறும் ❣️

28
எங்கிருக்கிறாய்?
எப்படி இருக்கிறாய்?
அப்படியே தான் இருக்கிறாயா?

என் காதல் உன்னிடம்
இன்னும் நலமாய் இருப்பதாக
நான் நம்பலாமா?
இந்தக் கேள்வியை மட்டும்
தவிர்த்து விடுகிறேன்.
காலத்தால் மாறாத மனிதர்களா?
எனும் பயம் அப்பிக் கொள்கிறது.

நீ சொல்லிச் சென்ற காரணிகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாயா?
அவ்வப்போது என்னை
மீட்டிப் பார்ப்பதற்கான
ஏதோவொன்றை கையில் ஏந்தி
என்னைக் கொஞ்சம்
உன்னோடு சேர்த்து
முகர்ந்து பார்த்துக் கொள்கிறாயா?
என் நியாபகத்தை
ஏற்படுத்தித்தரும் அளவுக்கு
என்னை உன் வசம் வைத்திருக்கிறாயா?

என்னை நீங்கிப் போனதன் பிற்பாடு அசாதாரண நிலையை உணர்ந்திருக்கிறாயா?
என்னாயிற்று உனக்கென
பிறர் கேட்கும் கேள்விகளை
சாதாரண புன்னகையோடு கடக்க முயன்றிருக்கிறாயா?
உறங்கவே பிடிக்காத
தலைவலி கொண்ட ஜாமங்களை நிர்ப்பந்தத்தோடு சகித்திருக்கிறாயா? கத்திக்கதறி அழ வேண்டும் போலிருப்பதை சொல்லி அழக்கூட,
நாதியற்ற தனிமைகளில் உழன்றிருக்கிறாயா?

இந்த அழைப்பேசி அழைப்பாவது
நீயாக இருந்திடக் கூடாதா? என்று, அவசரகதியில் உன் குரல் கேட்க ஓடோடி வந்து பார்த்து விட்டு...!
நீயில்லை என, நானேமாந்ததை
உறுதி செய்த பிற்பாடு,
வெறுப்பின் உச்சத்தை அடைந்து திரும்பியிருக்கிறாயா?

இத்துனை கேள்விகளுக்குமாக சேர்த்து
"ஆம்"
என மட்டும் சொல்லிவிட்டுத் திரும்பவாவது, நீ என்றாவது மறுபடி
என் முன் நிற்க வேண்டும்!

நீ வந்த வாசத்தின் தடத்தினை
இன்னும் ஒரே ஒரு முறை
பரிசளித்துவிடேன்!
மீதி சில ஆண்டுகளையும்
உன் காதலோடு கரைத்து,
காலமாகிப் போவதற்கு!

காண்பதிலெல்லாம்
உன் பிம்பங்களை நிரப்பிப் பார்த்து
ரசித்து விட்டு,
அதையள்ளி முகர்ந்து கொண்டே
உன்னோடு நகலொன்றில்
வாழ்கிற வாழ்க்கையை எண்ணி...!
"எத்துனை மதி மயங்கிய நிலையில் நானிருக்கிறேன்"
என நினைக்கையில்,
கண்ணீர் நிரம்பி வழியும்.
அப்போதும் கூட...!
"அழாதே நானிருக்கிறேன்"
என்ற உன் பழைய குரலைத்தான்
என் உணர்வுகள் தேடி அலைகிறது.

ஒரு தருணம்
எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்


29
ஒருத்தர் ஒங்களுக்கு தர்ற கேரக்டர் ரீதியான
கிரடிட்டுகளை நம்பி அதுதான் ஒங்களோட
கேரக்டர்னுல்லாம்ந ம்பிக்கிட்டிருக்காதீங்க. . .
ஏன்னா.!
காலம் கடந்த பெறகு செலநேரம்
அதே நபர்களால அந்த கிரடிட்டுகள் பறிக்கப்படலாம்!
கொறச்சி மதிப்பிடப்பலாம்!
தூற்றுதலுக்கு கூட நீங்க ஆளாகலாம்!
அவங்கவங்களுக்குன்னு
நியாயங்கள் மார்ற நேரம்,
மனநில வேறுபட்ற நேரம்,
எதிர்படுகின்ற மனுஷங்களோட இயல்புகள்
மேலதான் மொதல்ல கைவைப்பாங்க.

உன்ன மாதிரி என்னய புரிஞ்சிக்கிட்ட
யாரும் இல்லன்னு சொன்னவங்க,
நீ புரிஞ்சி கிழிச்சது போதும்னு சொல்லி அழவச்சதில்லயா?
உன்னயப்போல ஒருத்தர பார்த்ததே
இல்லன்னு வியந்து பேசினவங்க,
உன்னய எல்லாம் சந்திச்சதே
என் சாபம்னு முகத்துக்கு நேரே திட்னதில்லயா?

எத்தனை காலம் ஆனாலும்
நீ இப்டியே இருன்னு நம் இயல்பை
ஆரம்பத்துல அங்கீகரிச்சவங்க,
ஏன்தானோ தெரில நீ இப்டி இருக்கன்னு
எரிச்சலோடு கேட்டு சோகப்படுத்தினதில்லயா?
ஒருகாலத்துல மனசுக்கு அவ்ளோக்கு
நெருக்கமாக இருந்த மனுஷங்க,
இன்னிக்கு "ஏனென" கேக்கக் கூட
நேரம் ஒதுக்க முடியாதவர்களாக
மாறிப் போகலயா.?

எப்பவுமே எந்த உறவின் ஆரம்பத்துலயும்
அவுங்கள சீக்கிரம் கவர்ந்துடனும்,
அவுங்களோட துரிதமா நெருங்கிடனும்,
என்ற காரணத்துக்காக எல்லாம்
அதிகம் மெனக்கெட்டு உங்களோட
மொத்த நல்ல பக்கங்களை மட்டுமே வெளிப்படுத்தாதீங்க!
அப்றம் அந்த பாசிடிவ்களை
அன்றாடம் நிறுவ முயற்சி செஞ்சிட்டே இருக்கனும்.
திட்டுவேன்! கோவப்படுவேன்! எரிச்சலடைவேன்!
சிலதை தாங்கிங்க மாட்டேன்!
போன்ற Opesit எண்ணங்களை
திடீர்னு ஒருநாள் வெளிப்படுத்துறப்ப,
உங்களுக்கு ஏலவே தரப்பட்ட கிரெடிட்கள்
எல்லாம் வீணாப்போகும்.
அழும் அளவுக்கு
கேள்விகள் கேக்குறது கூட பரவால.
ஆனா! ஏற்கனவே உயர்த்திப்பேசிய விஷயங்களை,
தாழ்வுபடுத்தி பேசறப்ப
"இவ்ளோதானா இவ்ளோ காலம்
நம்ம மேல உள்ள அபிப்பிராயங்கள்"
அப்டின்னு மனுஷன் நொந்து உடஞ்சிட்றான்…..

30
உன்ன ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல?
உன்ன இனியும் கஷ்டப்படுத்த விரும்பல!
என்னாலதான் உனக்கு அதிக கஷ்டம்!

அன்பின் இப்படியான சுயபலிக்கு
சற்றும் நெருடலின்றி தன்னை
உற்பத்திக் கொண்டு,
உங்களை நேசித்துவிடுகின்றவர்கள் கிடைத்தால்
இறுகப் பற்றிக்கொள்ளுங்கள்.!
அவர்களின் அன்பானது,
உங்கள் அளவில் விசாலமானது.
இது இயலாமையில் நேர்வதல்ல.
வேறு எவரிடமும் தன்னை இப்படியாய்
குற்றப்படுத்திக் கொண்டு நிற்காத அவர்கள்,
உங்களிடம் நிற்கிறார்கள் எனில்!
நீங்கள் அவர்களுக்கு அத்துனை முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.
வேறு யாருக்கும் இச்சந்தர்ப்பத்தை அவ்வளவு
எளிதில் வழங்கியிருக்க மாட்டார்கள்.
முரண்டோடு தர்க்கம் செய்து,
"நீ என்ன ரொம்ப காயப்படுத்துற"
அப்டின்னு சொல்ல முடியுமான நிலைல கூட,
"நான் உன்ன ரொம்ப காயப்படுத்துறேன்ல" அப்டிங்குற வார்த்தைல கிடைக்குற,
அன்பின் பெறுமானம் அளவற்றது.

நாமே தவறுகள் இழைத்தாலும்
அதனை பெரிதுபடுத்திக் கொண்டிராமல்,
முந்திக் கொண்டு வந்து,
சுயமரியாதை அத்தனையையும் விட்டு,
இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்..!
அவர்கள் உலகுக்குள் உங்களின் வருகையை
எப்போதும் அனுமதிக்கக் காத்திருப்பவர்கள்.
காரணமேயின்றி உங்களை
மன்னித்துக் கொண்டேயிருக்க விரும்புபவர்கள்.
உங்களின் அத்துனை பலகீனத்தையும் ஏற்றுக்கொள்ள காத்திருப்பவர்கள்.
வேறு எவருக்கும் வழங்காத நியாயங்களை,
உங்கள் விடயத்தில் மட்டும் சரியெனவே கருதுபவர்கள்.
உச்சநிலை குருட்டுத்தனத்தோடு
உங்களை அங்கீகரிப்பவர்கள்.

இப்டில்லாம் பண்ற ஒருத்தர்
நமக்கு வாய்த்தும், நாம அவுங்கள
தவற விட்றோம்னா!?
இந்த வாழ்க்கையை கொண்டாடத் தெரியாத துர்ப்பாக்கியவான் நம்மளவிட
வேற யாரும் இல்ல.
இதுக்கு மிச்சம் லைப்ல ஒன்னுமே பெருசா இன்பமா இருக்கப்போறதில்ல.

சிலர் எங்களுக்கு எவ்ளோ பெரிய அங்கீகாரத்தை
வழங்கிட்டு இருந்திருக்காங்கன்னு,
அவுங்கள தொலைச்சப்றம் தான்
வாழ்க்கை நமக்கு சில நேரம் கற்றுத் தரும்.
நம்ம மனச புரிஞ்சிக்கிட்ட யாரையும்
மிஸ் பண்ணிடாதீங்க!
மேற்கொண்டு அந்த இடத்துக்கு தகுதியான எவரும்
வாழ்க்கைல வராமலே கூட போகலாம்! சொல்றதிக்கில்ல……


Pages: 1 [2] 3 4