Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: 1 2 [3] 4 5
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-017 விரல்களில் அபிநயம்
விழிகளில் நவரசம்
உன்னிடம் உள்ளதடா
விடிகிற வரையிலும்
மடியில் உறங்கிட
என் மனம் தவிக்குதடா...

என் இதய கதவைதிறந்து
கனவை தீர்மானிப்பவனே
உன் புன் சிரிப்பில்
என் வாழ்க்கையை அலங்கரிப்பவனே
இறுக்கமான ஒரு அணைப்பு
நீ கொடுத்த காயமும் மறந்து போகும்டா ...

சுவாச காற்றைப் போல காதலை
ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கணும்டா
தூக்கம் தொலைந்து எடை குறைந்து
நான் என்னவோ ஆகிறேன்
என் உயிரின் அணுவினில்
காதலை விதைத்தவனே...

எனக்காக நீ இருக்கிறாய் என்று
மரணம் வரை உனக்காகவே
தொடரும் என் வாழ்வின் பயணம்
உன்னிடம் கேட்பதெல்லாம்
என் ஆயுளின் இறுதிவரையிலும்
எனக்கு மட்டுமே அன்பை
தந்து விட்டுப் போ...

என் கரம் பிடித்து
என்னை அணைத்து
உன் காதலை உணரவைத்தாய்
வாழ்வின் எல்லை வரை
உன்கரம் பற்றி
உனக்கு உறுதுணையாய்
நான் வருவேன் உன் துணையாய்...


February 14, 2023, 08:22:32 am
1
Re: கவிதையும் கானமும்-018
தன் குஞ்சுகளுக்காக இரை தேடி
விடியலில் புறப்பட்ட பட்சி
சிறகு விரித்து பறந்து சென்று
கண்பார்வையை தரையில் பதித்து
கண்டு பிடித்த உணவினை
அலகினால் கொத்தி எடுத்த இரையினை
கொண்டு செல்ல முன்
இரக்கமற்ற கயவர்களின் தடத்தினுள் அகப்பட்டு
கூண்டினில் சிக்கியதே
மனிதம் இல்லாத மனிதனின் கண்களில் தென்பட்டு சிறைபட்டதே…

பறவைகள் வாழிடங்களை சூரையாடினோம்
நிர் நிலைகளை வற்றவிட்டோம்
இயற்கை வளங்களை அழித்தோம்
வானையும் மண்ணையும் அளந்த பறவைகளை
இரும்புக் கூண்டுகளில் அடைத்தோம்
அழகான சிறகுகளை விரிப்பதை மறக்கடித்தோம்
இனிய தேவ கானத்தை இசைக்காமல்
சாவு கானத்தை தினம் இசைக்க வைத்தோம்
தனிமையில் வாடிய பறவையின் வதனம் தினம் பார்த்தோம்...

மனிதநேயம் உள்ள கையினால் விடுபட்டு
கூண்டு பறவையின் சிறகு
காற்றை கிழித்துக் கொண்டு
இருப்பிடத்தை நோக்கி சுதந்திரமாக பறந்ததே
இதுவே உண்மையான மாற்றம்
பிற உயிரினத்தின் மனதை வெல்வதற்கு
சிறைபிடிக்கவோ தேவை இல்லை
அவற்றை சுதந்திரமாக வாழ விட்டாலே போதும்….

சிறகடித்து பறந்த அந்த பட்சி
சுதந்திரமாக பறக்கும் காட்சி பார்த்தோம்
அகதியாக இருக்கும் எம் உறவுகளின் நிலைமையை உணர்ந்தோம்
இப் பறவைகளின் சிறை கதவுகளின் விடுதலையும்
எம் இனத்தின் விடுதலையும் ஒன்றே 
நாமும் சுதந்திர பறவையாக பறக்க தவிக்கிறோம்
விடியலுக்காக காத்திருக்கின்றோம்...

February 21, 2023, 04:50:17 pm
1
Re: கவிதையும் கானமும்-019 நட்பின் நேரம்

மென்மையான இரவு நேரம்
காடுகள் ஓய்வெடுக்கும் நேரம்
பனியில் நிலா உலா வரும் நேரம்
தேவதைகள் பனி புல்லில் ஓய்வெடுக்கும் நேரம்
தேவதைகள்  மிகவும் அற்புதமாக நடனமாடும் நேரம்…

குட்டி தேவதை தனிமையில் அமர்ந்திருக்கும் நேரம்
மின் மினி அவ்வழியே வருகை தரும் நேரம்
மின் மினி வெளிச்சம் தரும் நேரம்
தேவதை முகம் பிரகாசிக்கும் நேரம்
இருட்டாக இருந்த தேவதை  மனம் ஒளி பெறும் நேரம்
இருவரும் இணையும் அழகான நேரம்…

இருவரின் சுக துக்கங்களை பரிமாறும் நேரம்
இருவரும் அன்பை பரிமாறும் நேரம்
இருவரின் மனதில் மகிழ்ச்சி உண்டாகும் நேரம்
இருவரும் நட்பு கொண்டாடும்  நேரம்
நிரந்தரமா என தெரியாத நட்பு உறவாடும் நேரம்…

அதிகாலையில் கதிரவன் ஒளிவீசும் நேரம்
இருவரும் மனமின்றி விடைபெறும்  நேரம்
இது நட்பின் மௌன நேரம்
காலத்துக்கு அழியாத நட்புடன் பறந்து செல்லும் நேரம்
இருவரின்  நட்பு சிறந்ததென போற்றும் நேரம்
நட்புக்கு இலக்கணமாக அமையும் நேரம்
நட்பு என்றுமே நிலைக்கும் என உணர்த்தும் நேரம்…

என்றும் நட்புடன் உங்கள் சஞ்சனா












March 10, 2023, 02:17:51 am
1
Re: கவிதையும் கானமும்-020 CONGRATS TO GTC FM AND GTC.. KAVITHAIYUM GAANAMUM REACHED ITS 20.TH PROGRAM.🎶🎤🎵💐💐💐
CONGRATS TO ALL POETS OF KG 💐💐💐
கவிதையும் கானமும் குழுவினருக்கு வாழ்த்துகள்
( RJ RIJIA, RJ MIST, COFFEE BOY, OMICRON,DISCOVERY, ISHAN)💐💐💐💐💐💐💐💐💐



இலையுதிர் காலம் தனது சாயலை காட்டியது
வானம் அதன் சாம்பல் நிறத்தை சூட்டியது
கார்மேகம் அலை அலையாக வந்து செல்கிறது
காற்று புதிய தெளிவுடன் வீசுகின்றது
நாள் முழுவதும் தொடர்ந்து மழை பொழிகின்றது
பூமியில் இருந்து புனிதமான வாசனை வெளிப்படுகிறது….

லேசான நடுக்கத்தை நான் உணர்கிறேன்
என் இடது கையை யன்னல் வழியாக வெளியே அசைக்கின்றேன்
என் தோலில் இனிமையான ஒலி கேட்கிறேன்
ஒவ்வொரு துளியும் என் கையில் இசை மீட்டுகின்றது
ஒரு கணம் எனக்கு அமைதி வழங்கப்படுகின்றது
அது நொடிகள் தான் ஆனால் அது மணிநேரமாக உணர்கிறேன்….

இனிமையான இப்பயணம் ஆரம்பிக்கும் தருணம் இது
மனதில் எதோ பல நினைவுகள் ஊசலாடும் தருணம் இது
காலத்தால் அழியாத காதலின் நினைவுகள் மனதை வதைக்கும் தருணம் இது
இருவரும் அன்று மழையில் சந்தித்தது நினைவுக்கு வரும் தருணம் இது
மனதில் பல்லாயிரம் கேள்விகள் எழும் தருணம் இது
விடை தேடி மனம் எங்கோ தொலைகின்ற தருணம் இது….

கண்களில் நீர் சொட்டியது
அது என் மறுகையை உரசியது
ஒரு கையில் மழைத்துளி இசைபாடியது
மறுகையில் கண்ணீர்த்துளி வலி கூட்டியது
காதலின் வலி மனதுக்கு புரிந்தது
எப்போது இந்த பயணம் முடியுமென மனம் ஏங்கியது….

"சின்ன சின்ன மழை துளிகள்" என்ற பாடல் வரிகள் மனதில் ஒலிக்க
அமைதியான ரயில் பயணம் தொடர
மீண்டும் நான் மழையை ரசிக்க
மழையின் நன்மையை உணர
என் மனதோ சற்று லேசாக
உணர்ந்தேன் என் வாழ்க்கையின் அர்த்தத்தை....


வாழ்க்கை எனும் ரயில் பயணத்தை தொடர்ந்தபடியே
சஞ்சனா(Sanju)😘.


March 21, 2023, 04:09:59 am
1
Re: கவிதையும் கானமும்-021 நாணம்...

மணநாள் செய்தி கேட்டு
மனம் பூரித்த நொடி
மணமகன் வருகை பார்த்து
மனம் மலரும் நொடி
மணமகள் நாணம் கொண்டு
இருமனம் இணையும் நொடி….

அழகான பட்டுடுத்தி
ஆபரணம் பல பூட்டி
கூந்தலில் மலர் சூட்டி
பார்வையில் எதிர்பார்ப்பை காட்டி
முகத்தில் நாணம் சூட்டி
மனதில் நாணம் தீட்டும் நொடி….…

தோழிகள் கேலி செய்ய
உறவினர் வாழ்த்தி வணங்க
நாதஸ்வர இசை கேட்க
பெற்றோர் மனநிறைவோடு ஆசிர்வதிக்க
பெண்ணின் மனதில் புது உணர்ச்சி எட்டி பார்க்க
அவள் மனதில் நாணம் குடியேறும் நொடி …

மனதோடு பல கனவுகள்
உதட்டோடு சிறு புன்னகை
கன்னங்களில் ரோசா வர்ணம்
முகத்தில் ஒரு புது மலர்ச்சி
விழிகளிலே புதுவித நடனம்
இதுதான் பெண்ணின் நாணமோ?...

அவள் மனதின் பூரிப்புதான் நாணமோ?
இல்லை அவளின் ஏக்கம் தான்  நாணமோ?
அவளின் எதிர்பார்ப்புதான் நாணமோ?
இல்லை அவளின்  உணர்ச்சிதான் நாணமோ?
பெண்ணின் அடையாளம் தான் நாணமோ?
ஆம், என்றும் பெண்ணின் அடையாளமே நாணம்!!!!




குறிப்பு:
இப்படியான ஒரு தருணம் எல்லா பெண்ணுக்கும் வந்திருக்கும் இல்லை எதிர்காலத்தில் வரலாம்...நாம் எல்லோரும் அத்தருணத்தில் முதல் சூட்டி கொள்வது நாணம் எனும் வெட்கத்தையே...

April 08, 2023, 07:51:59 am
1
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11


Dear Friends,

GTC FM has decided to broadcast songs handpicked by GTC Users , So that users get a chance to share their taste of music with listeners....We name the this event as "Nenjil Nindra Raagangal"

Let music bind us further in our journey of friendship.

------------------------------------------------------------------

HOW TO PARTICIPATE?
To decide the slot order that will be telecast, the interested users may find a place by typing "My Place"  in the Nenjil Nindra Raagangal Thread.

HOW MANY SONG YOU CAN REQUEST?
Maximum of 12 Songs.

IN WHICH ORDER SONG REQUESTS WILL BE PLAYED?
The slots will be arranged based on first come first serve basis & Each Day only one user's  songs will be played in GTC Fm.


April 16, 2023, 08:59:36 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 NNR OF GTC ADMINS   17.04.2023
April 17, 2023, 10:51:25 am
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #11 MY PLACE  15.05.2023
April 18, 2023, 01:05:41 pm
1
Re: கவிதையும் கானமும்-022 Gtc  நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்.

உழைப்பால் நாம் உயர்ந்திடுவோம்,
உலகையே மாற்றிடுவோம்....



 உழைக்கும் கரங்கள்...

இரண்டு வர்க்கம் இனி இல்லை
எழுந்து வா சிவந்து நிற்கும் நெஞ்சத்தோடு
நடக்க போவது புது யுகம்
நீ விதைத்த வியர்வைகள்
கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்தை
கர்ப்பம் தரிக்க வைத்தாய்
உழைக்கும் கரங்களால்…
 
காலம் நமதென்று கதவு திறக்கும்
உழைப்பாளிக்கு சிறந்த வழி வகுக்கும்
அவன் கரங்கள் இருக்கும் விலங்குகள்
அனைத்தையும்  உடைக்கும்
சில அதிகாரத்தை முடிக்கும்
உலகை ஆளும் கரங்களே
உழைக்கும் கரங்கள்…

கற்கள் சிலையானதும்
கற்பனை சிந்தனை இலக்கியமானதும்
விளைநிலம் செழிக்க வேளாண்மை செய்ததும்
காடுகள் திருத்தி நாடானதும்
தொழிற்சாலைகள் படைத்து ஏழ்மை ஒழித்ததும்
கற்காலத்தை நகர்த்தி கணினி யுகம் ஆனாதும்
உழைக்கும் கரங்களாலே…

இயந்திரம் இயங்க மென்பொருள் இல்லை எனில்
இளமையும் முதுமையும் மனிதனுக்கு
நரகமாய் மட்டுமே நகர்ந்திருக்கும்
உழைப்பு தான் மனிதனின் முதன்மை அடையாளம்
உழைப்பை மறப்பது சுவாசத்தை மறப்பதற்கு சமன்
உழைக்கும் கரங்களை மறப்பது உயிரை விடுவதற்கு சமன்...





April 28, 2023, 12:27:58 am
1
MY FEEDBACK AFTER 10 MONTHS THANK YOU ALL...

I JUST THOUGHT I SHOULD GIVE A FEEDBACK AFTER 10 MONTHS IN GTC :

I AM REALLY HAPPY TO BE A PART OF GTC FAMILY...SPECIAL THX TO OUR ADMINS Coffee BOY and DJ Ishan.....

MY APPRECIATION TO ALL ADMINS, COMMANDERS AND HOSTS...YOU ALL ARE DOING YOUR BEST.KEEP ALLWAYS SUPPORTING GTC !!!

AM REALLY HAPPY TO HAVE A LOT OF GOOD FRIENDS NOW HERE IN GTC. ESPECIALLY SHAA ANNA(Sorry bro, en kavalai, tention ellame unkidda than kodduven..epadi nee athellam thankikiriyo theriyalai enaku 8) ), APPU KUTTY ( Ipo mostly naan unkudavum Shaa kudavum than chat panurenu ninaikiren 8)) and Coffee  Boy( Sorry for all the tortures  ;D). I LOVE YOU ALL MY FRIENDS(NAMES SONNAL LIST ROMBA LONG AHIDUM---also thx enai sahichukidathuku ;D). AND I ALSO MISS SOME OF SENIOR FRIENDS,WHO ARE NOT HERE ANYMORE .

I STILL LOVE CHATTING A LOT  AND TO SPEND MORE TIME WITH YOU GUYS..BUT NOW ITS TIME TO SLOW DOWN AND SPEND  SOME TIME WITH OTHER THINGS(like my Profession and further studies) ....THANK YOU FOR THE WONDERFULL TIME ....

WITH LOVE
SANJU

May 13, 2023, 02:21:26 pm
1