Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-039 உலகமே அடங்கிப் போய் மீண்டுமொரு முறை குழந்தயாய் சுருண்டு கொள்ளும் மூன்றெழுத்து மந்திரம் அம்மா!
தவழ்ந்து நடையிட்டு பின் தத்தி நடையிட்டும் நான் விழுந்து எழுந்த பொழுதெல்லாம்
பூரித்து மகிழ்ந்தவள் நீ.
சிறு காயம் பட்டாலும் துடிதுடித்து அடங்கும் உன் உள்ளம்
பத்து மாதம் சுமந்ததனினாலா? அல்லது உன் உயிரையே கருவாக உருக்கொண்டதினாலா?
எனக்குத் தெரியவில்லை
ஆனால் தெரிந்தது ஒன்றெனில்
அது
இன்றளவும் யாரும் நிரப்ப முடியாத இடம்.
மொத்தக் குடும்பத்திற்கும் ஒற்றை
கண்ணியாய்
விளங்குபவள் நீ..
உன் இடத்தை யார் தான் நிரப்பிட முடியும்?
'மகனுக்கு இது பிடிக்கும்,
மகளுக்கு இது பிடிக்கும்',
என நீ செய்த தியாகங்களில் வாழ்பவர்கள் அறிவார்களா
தியாகத்தின் நீட்சி தியாகம் என்பதை?
நாங்கள் வைத்த மிச்ச உணவை
உண்டு
உயிர் வாழும் உன் தியாகத்தின்
எச்சம் நாங்கள்
உன் உதிரத்தின் எச்சம் நாங்கள்,
உன் பிறவியின் எச்சம் நாங்கள்,
உண்மையில் உன் மிச்சத்தின் எச்சம் நாங்கள்.

எங்கோ தொலைதூரத்தில் இருப்பின் உன் புடவை வாசனையை
தேடும் மனதிற்கு என்ன கூறி
ஆற்றுப்படுத்துவது?
யாரோ எங்கேயோ ஊற்றும் தோசையின் மணத்தில்
உன்னை தேடும் மனதிற்கு என்ன கூறி
ஆற்றுப்படுத்துவது?
நரை கூடும் பருவத்திலும்
உன் மடி சாய தேடும் மனதிற்கு
என்ன கூறி
ஆற்றுப்படுத்துவது?
தன் ஒவ்வொரு காயத்தையும் மறைத்து தன் பிள்ளைக்காய் குடையாய்
வேராய்
மரமாய்
மடியாய்
இருக்கும் தாய்க்கு கூற நினைப்பதெல்லாம்
நீ என் மகளாய் பிறந்திட
நான் உன்னை என் சேயாய் காத்திட
வேண்டும்
அம்மா!

March 08, 2024, 12:01:32 am
2