General Category > Beauty Tips - அழகு குறிப்புகள்

மனசு

(1/1)

AnJaLi:
மனசு

மருத்துவ உலகில் மனசு என்பது மூளையின் ஒரு பகுதி என்பதை கண்டறிந்த பின்னர் மன ரீதியான நோய்களுக்கு மாபெரும் தீர்வு காணப்பட்டது. கண்ணால் காண முடியாத பல அறிய சக்திகளில் மனசின் சக்தி மகா சக்தி என்றால் மிகையாகாது.

மனதின் நினைவுகளால் மனிதனின் ஆன்மா பல காலம் வாழ முடியும் என்பது இன்னும் சில ஆண்டுகளில் நிரூபணம் ஆகப் போகும் மருத்துவ அறிவியலின் மாபெரும் கண்டு பிடிப்பாக இருக்கப் போகிறது.

ஒரு மனிதனின் குணம் என்பது பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கம் காரணமாக அமைகிறது, ஆனால் மனதின் நினைவுகள் பல்வேறு காரணங்களால் வேறுபடுகிறது, மனதின் பல்வேறு நினைவுகளில் அதன் முழுமையும் ஒரு குறிப்பிட்ட நினைவிலேயே நின்று மனதின் ஆழத்திலிருந்து வெளிப்படுத்தப்படும் எண்ணங்களின் ஒருமித்த நோக்கம் அம்மனிதனின் உயிர் உடலிலிருந்து பிரிந்த பின்னும் தொடர்கிறது.

காண முடியாத பல அறிய அற்ப்புதங்களில் இத்தகைய சக்தியும் ஒன்றாக கருதப்படும் காலம் மிக விரைவில் அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படும் போது மனிதனின் மூளையின் அபூர்வ சக்திகளை மனிதனால் விளங்கி கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடிந்துவிடும்.

இதனால் உடலில் உயிரிருக்கும் ஒரு மனிதனின் எண்ணம் பல கோடி மைல்களை சில நொடிகளில் கடந்து செல்லும் ஆற்றல் கொண்டவை என்பதும் நிரூபிக்கபட்டுவிடும். முன்னோர்களில் பலர் தவமிருந்து பெற்ற பல அறிய சக்திகளின் உண்மை புரிந்துவிடும், ஏற்றுகொள்ளபட்டு விடும்.

பேய் பூதம் என்று பயந்து கொண்டிருக்கும் நமக்கு பேய் பூதம் என்ற உருவமற்ற சிலவற்றிற்கும் மனிதனின் எண்ணத்தின் பலனாக ஏற்ப்படும் நிகழ்வுகளுக்குமான வித்தியாசம் என்னவென்பது புரிய வரும். இந்நிலையில் கடவுள் என்பதன் அர்த்தம் அல்லது அனர்த்தம் என்னவென்பது தெளிவாகிவிடும்.

மனிதன் தான் வாழும் நாளில் அவன் செயல்படும் விதங்களிலிருந்து மாறுபட்ட அல்லது தற்போதைய சராசரி வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, இதுவரையில் நாம் கேள்விபட்டிராத வாழ்க்கை முறைகளை தேர்ந்தெடுக்க வழி பிறந்துவிடும், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதற்கான முழு விளக்கம் நிருபிக்கபட்டுவிடும். இதனால் மனிதன் தற்ப்போது வாழ்ந்துவரும் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறைகளை தேர்ந்தெடுப்பான்,

கடந்தகால வாழ்க்கை அர்த்தமற்றது என்பதும் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் செயல்பாடுகள் அறியாமையினால் நிறைந்திருந்தது என்பதையும் வருங்கால சந்ததியினர் முழுமையாக ஏற்றுக்கொள்ள பல அறிய வாய்ப்புகளை அறிவியல் முன்னேற்றம் ஏற்படுத்திக் கொடுத்துவிடும் என்பது நிச்சயம்.

மனசும் அதில் ஏற்ப்படும் நினைவுகளும் எண்ணங்களும் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவும், நிர்வகிக்கவும் உதவும் மிகப் பெரிய ஆயுதமாக விளங்குகிறது. மனிதனின் சுற்றுப்புறம் என்பது மனிதனின் இயற்கையான குணத்திற்கு சவாலாய் அமைவதும் வாழ்க்கை முறையை தலைகீழாய் மாற்றி அமைத்து விடுவதும் உண்டு, அது மிகவும் துரதிஷ்டவசமானது.

குழந்தை பருவம் முதல் வயோதிகம் வரையிலான வாழ்க்கையில் குழந்தை பருவம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதன் காரணம் , குழந்தைபருவம் என்பது மண்போன்றது, எண்ணங்களும் நினைவுகளும் இயற்கையாக மண்ணிலிருந்து விளைந்துவரும் இளம் செடியை போன்றது, இதில் சுற்றுப்புறமும் சூழ்நிலைகளும் அந்த செடி விளையும் நிலமானது களி மண்ணினால் ஆனதா அல்லது கற்பாறைகள் நிறைந்ததா அல்லது வெறும் மணலா என்பதுதான் மனிதனின் இயல்பான குணங்களிலிருந்து முற்றிலும் வேறு அல்லது வித்தியாசமான எண்ணங்களையும் நினைவுகளையும் ஏற்படுத்தி வாழ்க்கையை மாற்றி அமைத்து விடுகிறது.

மனசின் வலிமை பற்றி நாம் முழுமையாக அறிந்தால் வாழும் வாழ்வை வளமாக்கிகொள்ள முடிகிறது என்பது நிச்சயம். அர்த்தமுள்ள வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது. அதன் மூலம் நாம் அடையும் பலனைப்பற்றி மற்றவர் சொல்லி தெரிந்து கொள்வதைவிட அதை அனுபவிக்கும் போது அதன் மகத்துவம் விளங்கும்.

Navigation

[0] Message Index

Go to full version