Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Barbie Doll

Pages: 1 [2] 3 4 ... 33
16

உன் முகம் பார்த்து நான்
நலமாக இல்லை..
நாட்கள் நகராமல் நின்று விடவில்லை..
எண்ணங்கள் தேங்கி போய் விடவில்லை..
முகவரியை தொலைத்து தேடி அலைய வில்லை..
என்றெல்லாம் பேச விரும்பவில்லை..

எங்கே உன்னை தேடுவதாக நினைத்து கொள்வாயோ...
உன் ஆறுதலுக்கும், அன்பிற்கும் அடிமை என்றெண்ணி விடுவாயோயோ..
என்று மனம் பதபதைக்கிறது..

ஒருவர் மட்டுமே தான் வாழ்க்கையா என்ன..?
முடிந்து போன வாழ்விற்கு முதலுதவி எதற்கு??
நான் ஒன்றும் கடந்து செல்ல முடியாத அளவு அன்பை வைத்து விடவில்லை உன்மேல்..
என் மகிழ்ச்சியான முகமே நீ காணும் என் நிரந்தர முகமாக இருக்கும்..


17

இலகுவான ஆறுதலை தரும் பயணங்கள்..
சக மனிதர்களையும் சகஜமாக பழக வைக்கும் பயணங்கள்..
எதிர்பார்ப்பின்றி உதவிக் கொள்ளும் பலநூறு மனங்களின் அன்புகள்...

இரசிக்க வைத்த பயணம் வாழ்வை புரட்டி போட்ட நிமிடங்களாக மாறிய கொடூரம் ஏனோ...

விழிகள் பார்க்க மறுக்கும் உறவுகளின் உருக்குலைந்த முகங்கள்..
எங்கும் எதிரொலிக்கும் மரணவோலத்தின் நடுவிலே தாயை தேடி அலையும் சிறுமியின் கால்தடங்கள்...

சில்லறையாக சிதறி போன உடலுடன் உடைந்து போன எத்தனை எத்தனை கனவுகள்...

பாத்து போய்ட்டு வாங்க..
போனதும் ஃபோன் பண்ணுங்க..
நல்லா சாப்பிடுமா..
நேரத்துக்கு தூங்குடா..
சீக்கிரம் வந்துடுங்க..

இது போன்ற எத்தனை பாசங்களை சுமந்து சென்றிருக்கும்..
வார்த்தைகளும் தடுமாறுது வலிகளை விவரிக்கையில்..


18

""சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன..
சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்றன...""

எத்தனை மென்மையான வரிகள்..
விபத்தில் கண்டெடுக்கப்பட்ட கவிதையே..
உன் கரங்கள் ஏங்கி கவிதையும் கண்ணீர் வடிப்பது காதில் விழவில்லையோ..

ஓசையடங்கி போன 275 உயிர்களின் கடைசி பயணமா இது..
அங்கீகாரம் தேடி..
காதலை தேடி..
கடமையை தேடி..
கனவுகள் தேடி..
பயணித்த மனங்களின் ஏக்கம்.. நிறைவேறா கானல் நீராக போனதேனோ...

இதயத்தின் ஒரு பக்கம் ஊசிக்களால் துளைத்தெடுத்தது போன்ற ஆழமான வலியாக உணர்கின்றேன்.. கவிதை வரிகளும் கவிஞனும் மாண்டு கிடக்கும் மண்ணை கண்டு...

19
General Discussion / Re: BLACK & WHITE
« on: May 29, 2023, 09:45:56 pm »
Barbie doll the Poet 😍❤️

These are my fav lines

Anita sis  தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி (lots of love sis) ❤️

20
28.05.2023 கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்கான பின்னூட்டம்

• நிகழ்ச்சி கேட்க முடியாமல் போனதால் பின்னூட்டம் முழுமையாக என்னால் எழுத முடியாது..

• இந்த வார கவிதை தலைப்பு காதல் பிரிவு.. கவிதைகள் அனைத்தும் வாசித்தேன்.. RiJiA sis குரலில் கேட்க முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் உள்ளது..

• Katija அவர்களின் கவிதையில் Possesive பற்றி அவர் எழுதிய வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ..

• Anita Sis மறுபடியும் உங்கள் கவிதையில் எதார்த்தமான வரிகள் நிறைந்துள்ளது மிக அருமை..

• Yash உங்கள் கவிதையை.. பிரிவு என்றில்லாமல் நேர்மறையாக கையாண்ட விதம் ஆச்சரியப் பட வைத்தது..

21


புதிர் போன்ற வாழ்க்கையும் ஒரு புதிரடா..!
அறிய முற்பட்டும், அறிய முற்படாமலும்.. தோற்று போன புதிர்கள் எண்ணிக்கையே வெற்றிக்கு நிகரடா..!

நாளை என்றும் நம் நம்பிக்கையே ..
நடப்பதை நாளும் எதிர்நோக்கிடாமல்..
இதுவே நடக்கும் உலகை உருவாக்கு..
தொடரும் நொடிகள் நமக்கானது.. !
அதில் தொடர்ந்து செல்லும் பாதை பல முட்களானது..!

வெறுமனே கிடைப்பதில் இல்லை நிம்மதி..!
போராடி கிடைப்பதில் உள்ளது வெகுமதி..!!
சிரிப்புக்கான தேடலில் பல அழுகை இருக்கும்...!
நிம்மதிக்கான தேடலில் பல துன்பம் இருக்கும்...!

வெற்றியின் ஆரம்பமே தோல்வியில் தொடங்கும் பல புதிர்கள் தானடா..!
புதிர்கள் விலகும் நேரம் வெற்றி பயணத்தின் தொடக்கம் தானடா..!

வலிகளிலே தேங்காமல் வாழ்க்கை பயணத்தில் எதிர்‌ நீச்சல் அடிப்போம்..!
வாழ்வில் ஒளிந்திருக்கும் அத்தனை சுவாரசியங்களையும் ரசிக்க தோல்விகள் பல கடந்தே பயணிப்போம்..!

அடடா தோற்று விட்டேனே.. இனி என்ன இருக்கிறது? என எதிர்மறை எண்ணங்களில் துவண்டு போகாமல் கற்றும் கடந்தும் போக தோல்விகளில் கற்றுக் கொள்வோம்..!

தனித்துவங்களின் உச்சம் வெற்றி..!
ஆயிரம் விளக்குகளின் ஒளி வெற்றி..!
எண்ணற்ற கதைகளின் முடிவு வெற்றி..!
கிடைக்கும் நாள் தெரியாமல் ஒட வைப்பதும் வெற்றி..!

வெற்றிகள்.. பல தோல்விகளினாலே பிறக்கிறது.. !!

என் பேனாவின் எழுத்துக்களும் வெற்றியை நோக்கிய தேடலுடனே பயணிக்கிறது.. !!
திகட்டாத தேடல் இந்த வெற்றியின் தேடல்...!!
என்றோ ஒருநாள் இந்த வெற்றியும் நமக்கானதாகும்..!!
நம்பிக்கையுடன் பயணிப்போம்..

22

கள்ளமில்லா காதல் மொழியால், கனவுகளுக்குள் புகுந்து கொண்டான்..!
விண்மீன் ஒளியாய், வெட்கம் விலக்கி விழிகள் முழுதும் நிறைந்து கொண்டான்..!

காதல் கவிதையாக, மனமுழுதும் மழைச் சாரலை பொழிய வைத்தான்..!
பார்வையினால் பேசி பேசி, பேச்சினாலே பேதை மனதை வென்றெடுத்தான்..!

நாழிகையும் நாள் கடந்து போனது.. உலகம் மறந்து, உள்ளம் மயங்கி, ஒருவன் அன்பில் திழைத்த நொடி..!
மச்சில் ஏறி கூச்சல் போட்டு.. என் மகிழ்ச்சி இவன் தான் என, மையல் கொண்டேன் மனதில் கண்டபடி..!

கண்ட கனவின் இனிமை உடைந்து, கனவுகளுக்கு தடையும் விதித்தேன்..!
கண்கள் உறங்க, உள்ளம் மட்டும் உறங்க மறுத்து, நினைவுகளாலே வதைக்க கண்டேன்..!

எதிரும் புதிருமாய், அமர்ந்து கொண்டு தனிமை சிறையை தந்துவிட்டாய்..!
சுற்றும் முற்றும், தேடி நிற்க நம்பிக்கை முறித்து கதற வைத்தாய்..!

காதல் தர்க்கம் என்றால் அது காற்றோடு போய்விடும்.. !
ஆனால் வாழ்க்கை தர்க்கம், இடைவெளியை விதைத்து போனது..!

பேச மறுத்தாய் நீ பேச மறுத்தாய்..?
பேச்சிலே விஷமதை தோய்த்து வைத்தாய்..!

தலையணை நனைத்த, கண்ணீர் துளிகள் என் காதலை சொல்ல மறுக்கிறது..!
கோபங்கள் நியாயமற்றதாய் போகும் போது, சமாதானங்கள் அங்கு தேவையற்றதாய் ஆகிறது..!

அடக்குமுறையின் அநீதியை, கண்முன்னே உணர்கின்றேன்..!
இலகுவான காதல், இன்று கழுத்தை இறுக்க காண்கின்றேன்..!

நம்பிக்கைகள் நமத்து போனால், நரைத்து போகும் எவ் உறவும்..!
மரியாதைகள் தூரம் நின்றால், மனமுடைந்து போவோம் அனுதினமும்..!
புரிதலில் பிழையிருந்தும், விட்டுக் கொடுத்து பிரிவை தவிர்க்க போராடியும்..!

இங்கே பிரிவுக்காக பாசம் மறந்து சீற்றத்தினை பரிசளித்தாய்.. !
காயம் கொடுக்காமல் விலகுகிறேன்..!
காதலுடன் காத்திருக்கிறேன்..!

நுனிக் கிளையில் ஊசலாடும் நம் காதல் ..??
மூச்சு‌ முட்ட உணர்கின்றேன்..! இயலாமையால் உடைகின்றேன்..! இணக்கமில்லா இவ்வுறவில் சீற்றம் மட்டும் மிச்சமிருக்க.....

உன் சந்தோஷத்தின் வழி தேட உன்னை விட்டு விலகி நிற்பேன்...
நீ இருந்த இதயத்தில்,.. நீ மட்டுமே இருப்பாய் என்ற உறுதியுடன்...!

23
21.05.2023 கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்கான பின்னூட்டம்

• கவிதை தலைப்பு எல்லோர் வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கும் இசை பற்றியது.. இசை பற்றி போட்டி போட்டு எழுதுவார்கள் என்ற கணிப்பு இருந்தது. அது போல 2 நாட்களில் 7 கவிதைகள்..

• கவிதை எழுத என்னை ஊக்கப் படுத்திய Gtc ஐ என்றும் நான் மறக்கமாட்டேன்..

• RiJiA sis உங்கள் குரலில் என்றும் என் கவிதைகள் ஒலிக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.. நீங்கள் கவிதை வாசித்த விதம் மிகவும் அழகு..

• RiJiA sis இனிமையான பாடலுடன் நிகழ்ச்சியை தொடங்கியது அருமை.

• அனைத்து கவிதைகளும் மிக அருமை Forum வழியாக அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

• Kitty sis இசை மற்றும் தாயின் இதயத் துடிப்பையும் ஒருமித்து எழுதிய தங்கள் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது..

• Anita sis உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. கவிதையில் உங்கள் எதார்த்தமான வரிகள் மிக அழகு.(lots of love sis).

• Editing மிகவும் அழகாக இருந்தது.. பாடல்கள் மிக அருமை Coffee Boy  அவர்களுக்கு நன்றிகள்.

24

மெத்த படித்த மேதைகளும், மெய்சிலிர்க்கும் பாடலொன்றை இசைமீட்ட கேட்கின்றேன்..! இசைக்கென்ற இனமுண்டோ? இதய ராகம் ஒன்றல்லவா அதன் மொழி..!

சலனமில்லா இருதயத்தில், சரணமது கேட்கையிலே சரணாகதி அடைகின்றேன்..!
இசையே போதுமென்று, இன்னிசையில் தஞ்சமடைந்தேன்..!

பட்டிக்காட்டில் ஒலித்தாலும்.. பாட்டுக்கொரு அர்த்தமுண்டு...! பட்டணத்தில் ஒலித்தாலும்.. பல்லவியில் புரிதலுண்டு..!

இசையின் பிறப்பிடம் இயற்கையென்பேன்..!
வாழ்வியலில் ஒன்றி போன, இசைக்கும் இயற்கைக்கும், பிரிவென்பதில்லை என்பேன்..!

இசையின்றி இல்லை இங்கே எவர் வாழ்வும்...!
இளவயதும் வயோதிகமும் விதிவிலக்கல்ல  இசை முன்னே யாவும்...!

 ஆராரோ தாலாட்டில், அழகாக அறிமுகமாகும் நம்மிடம்...! உறக்கத்திலும் தாயை போல தாலாட்டும் உறைவிடம் ..!

உருவமற்ற உணர்வலை..!
உற்சாகம், உவகை, காதல், கடமை , கோபம், நல்லது, கெட்டது , நட்பு, சொந்தம் என அனைத்திலும் பிரதிபலிக்கும் இதன் அலை...!

மொழிவளம் மெருகேறும் இசைவழி குரல் கேட்டால்..!.
ரணமான மனக் காயமும்,  மயிலிறகாய் மாறிப்போகும் இசைப் பாட்டால்...!

பிறப்பில் தொடங்கி, இறப்பிலும் தொடரும் இசை காதல்..!
ஒருமனதாக ஒலிக்கும் ஒற்றை காதல் இசை. .!
ஒப்பீடுகள் இல்லா ஓசை இசை..!

 புல்லாங்குழலில் புதைந்திருக்கும் இசை கேட்டு, பூக்காத செடியிலும் பூ மலரும்..!
வானத்தில் வளர்பிறையும் நீடிக்கும் வசந்த கானமதை கேட்டால்..!

மானுடர் அறியா நம் மனநிலையும், மறக்காமல் தெரிந்து கொண்டு பின்தொடரும் மாயக் கள்வன் இசை..!

யாதொரு வரம்புமின்றி, மாறி மாறி இசை மீட்டி, மனதை மயங்க வைக்கும் வசியக்காரன்.!

காதலர்களின் காவலன் இசை..!
காதல் சண்டைகள், சமாதானம், என அனைத்திலும், களமாடும் இசையின்றி, காதலும் இல்லை காதலர்களுமில்லை..!

நிஜமான நிழலாக நம்முடனே பயணிக்கும்..  இந்த இசையோடு இயைந்த காதல்.. என்றுமே நமக்கான காதல்..!

இந்த வாழ்வே சங்கீதமாய் மாறிப் போனால் தான் என்ன.?
இசையை மிஞ்சிய ஏதேனும் இவ்வுலகிலுண்டோ..? என்ற

கேள்விக்கான விடையாக.. இசைஞானியின் இனிய இசையுடன் இந்த இரவும் மெல்ல நகர்கிறது விடியலை நோக்கி...

25
பரிசு இல்லா, பதக்கம் இல்லா,
பந்தயக் குதிரை உழைப்பாளி!
பசிக்காக, பல தடைகள் உடைப்பான், நிச்சயமாக அவன் தொழிலாளி!

ஏறிய விலைவாசியும், ஏறாத சம்பளமும், ஏட்டிக்குப் போட்டியாய் நின்றாலும்..,
இயந்திர உலகில், தொழில்கள் பல செய்யும் உழைப்போரை யாவரும் மறந்தாலும்..,

உழைப்புக்கு குறைவான ஊதியமே, உலகம் கொடுத்தாலும்..,
அவன் உயர்வுக்கு வழிகாட்ட, உலகமே கொஞ்சம் மறந்தாலும்..,

முண்டியடித்து முன்னேற முயலும், உழைக்கும் மனிதனின் ஊக்கம் தான்.!
அழகாய் சிரிக்கும், அத்தனை பொருளிலும், ஒளிந்திருக்கும் அவன் ஏக்கம் தான்.!

சுருங்கிய தோலும், சுருசுருப்பாக  நாளும் உழைப்பை   கொடுக்கிறதே.,!
காத்திருக்கும் ஓட்டுநரின், காலச்சக்கரமும் கடல்கடந்து காசை நோக்கி ஓடியதே.,!

பசியும் பட்டினியும் தன்னில் கொண்டு, விரல் வலிக்க விளைச்சலை கொடுக்க, விவசாயத்தை கையிலெடுத்தவரே.!
நெய்து நெய்து நொந்து போன, நெசவாளரும் மனதால் பட்டுடுத்த ஏங்கி தவிப்பாரே.!

துப்புரவாளரின் துயரம் தன்னை துச்சமென நினைந்து, ஊர் தூர நின்று இகழுது.!
விண்ணை தொடும் கட்டிடங்களும் அவன் உழைப்பை, தலை நிமிர்ந்து நோக்குது.!

துணிக்கடையில் துவண்டு போன கண்களில் கண்ணீரும் வற்றி கிடக்குது.!
தெருவோர கடைகளும் தொய்வின்றி உழைத்து, சில நூறுக்காக ஏங்குது!.

கை வலிக்க கணிணியில் போராடும், நவீன உழைப்பாளிகள் மனமும் வாடுது.!
உலக பொருளாதாரத்தின், ஊன்று கோலாய்  இருப்பார்கள், என்றே உலகம் நம்புது.!

 தெளிவான மனித இனமோ, தேவையற்ற இடங்களில் பணத்தை அள்ளி வீசுது.!
காவலாய், ஏவலாய் மாறி போன கவலை தான் கடைசியில் மிஞ்சுது.!

சுற்றி நிற்கும் சயநலக் கூட்டமோ தூற்றி பேச கேக்குது.!
சுருக்கென்ற வார்த்தை பேச சூழ்நிலை தான் இங்கே தடுக்குது.!

இயலாமையை மறைப்பானே,
இயன்ற வரை உழைப்பை கொடுப்பானே,!
கடின உழைப்பில் கவலைதனை மறப்பானே ,
உழைப்பே உயர்வென சமாதானம் கொள்வானே.!

 அலுப்பை மறக்க உழைப்பை கொண்டாடும் நாளும் நம்பிக்கை தாங்கி வந்ததிங்கே.!

உரிமை குரலில் உயிரை கொடுத்து உதயமானதே இந்த மே தினமே.!
போராடி பெற்ற எட்டு மணி நேரம் எட்டாக் கனியாக நேரம் கடந்து போகுது அனுதினமே.!

உணர்வற்ற சிரிப்பும் முகத்திலே முனங்கலுடன் வந்து மலருது.
ஊதியத்துடன் விடுமுறை என்று வெறுமனே மனம் கொண்டாடுது.

முதல் போட்ட முதலாளியின் முகம் மலர வைத்த தொழிலாளி..!
உழைப்பை உறிஞ்சி உயிரை குடிக்காமல் உயர்வை வழங்குமா இந்நாளில்?
 
வியர்வை சிந்தும் தொழிலாளி வர்க்கம் ..!
அமைத்து கொடுப்போம் அவன் வாழ்வில் சொர்க்கம்..!

அடிமட்ட தொழிலாளியின் அசராத உழைப்புக்கு மே தின நல்வாழ்த்துக்கள் .!

 

26
23.04.2023 கவிதையும் கானமும் நிகழ்ச்சிக்கான பின்னூட்டம்

• திருமணம், வெட்கம் தலைப்பு ஒரு புது விதமாக சிந்திக்கும் தலைப்பு.

• இந்த முறை கவிதை Editing எனக்கு மிகவும் பிடித்திருந்தது. Coffee BoY அவர்களுக்கு பாராட்டுக்கள்.

• RiJiA Sis கவிதை எழுதியவர்களுக்கான உங்கள் முன்னுரை அருமை. User - ஐ பற்றி எப்படி இவ்வளவு புரிந்து கொண்டு எழுதுறீங்க என்று எனக்கு தெரியவில்லை. உங்கள் முயற்சி நன்றாக தெரிந்தது Sis.

• நிகழ்ச்சி எப்பொழுதும் போல உங்கள் இனிமையான குரலில் கவிதைக்கு அழகு சேர்த்தது.

• தேர்வு செய்த பாடல்கள் மிகவும் அருமை.

• இந்த முறை புதியதாக நிறைய பேர் கவிதை எழுதினார்கள். Dhiya, KaThijA  (Best wishes)

• கவிதை நிகழ்ச்சி வாரம் தோறும் வந்தால் கூடுதல் மகிழ்ச்சி.

• Vaanmugil sis அழகா பேசினீங்க.

27
Games - விளையாட்டு / Re: LIKE / DISLIKE
« on: April 23, 2023, 08:25:36 am »
Like


Amusement park

28
Games - விளையாட்டு / Re: User below me...
« on: April 23, 2023, 08:24:53 am »
No


User below me like Eye makeup

29
Games - விளையாட்டு / Re: THIS OR THAT
« on: April 23, 2023, 08:21:55 am »
Mango Lassi


Butique or Aquarium

30
Games - விளையாட்டு / Re: Letter Words - A -Z
« on: April 23, 2023, 08:20:39 am »
H: Hello everyone

Pages: 1 [2] 3 4 ... 33