POEMS - கவிதைகள் > படித்து ரசித்த கவிதைகள்

தமிழ்மொழி

(1/3) > >>

SuNshiNe:
என் தாய்மொழி


தங்க தமிழே தரணி புகழ் செம்மொழியே
தென்றல் தேரேற்றி உன்னை அழைத்து வரும்
தேவர் குலம் சேர்ந்து வந்து வாழ்த்துரைக்கும்
மின்னல் அழகே மிளிர்கின்ற மென்தமிழே
கன்னல் கரும்பாய் காதி்ல் இனிக்கின்ற
கவிதை பல கோடி தந்தாய் வாழ்த்து
தங்க தமிழே தரணி புகழ் செம்மொழியே
கவி சொல்லும் அரங்கில் நிறைவாய்
கற்றோர் கைகளிலே என்றும் தவழ்வாய்
பண்ணிசையாய் நெஞ்சம் குழைப்பாய்
பாமர மக்கள் பாடும் நல்லிசையாய் நிறைவாய்
மேகலையாய் சிலம்பாய் அணிசெய்தாய்
திருக்குறளாய் திகழ்ந்தாய் தித்திக்கும் தேவாரமாகி
எத்திக்கும் ஒலித்தாய் செந்தமிழே இன்று கணனி ஏறி
கலக்குகின்ற மின்தமிழே என்தமிழே
என்றும் மாறா இளமை பூண்டு
கவிஞர் வார்த்ததையிலே நின்று வளர்.

Sanjana:
Naan padithathil pidithathu....

SuNshiNe:
சிறப்பு சஞ்சனா !!
தமிழ் -- நம் அடையாளம்

SuNshiNe:
என் தாய்மொழி

எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே

என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே

கன்னித் தமிழாம் கனியின சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்

இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

SuNshiNe:
தமிழ் மொழி சிறப்பு ...!
உயிர் நாவில் உருவான
உலகமொழி
நம் செம்மொழியான
தமிழ் மொழியே.......

மென்மையும் தொன்மையும்
கலந்த தாய் மொழியே
நீ தானே தனித்து தவழும்
தூய மழலை தேன் மொழியே.....

இலக்கண செம்மையில்
வரம்பே இல்லா
வாய் மொழியே....

மும்மை சங்கத்தில்
முறை சாற்றும்
இயற்கை மொழியே....

இலக்கண பொருளின்
அணிச்சிறப்பாய் அளவெடுத்த
செய்யுள் மொழியே
நம் தாய் மொழியாம்.....

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version