Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Damien666

Pages: [1]
1
 
கண்ணாமூச்சி
 -ஜெயகாந்தன்


'ஐ லவ் யூ' என்று தன் காதலைத் தைரியமாகத் தான் காதலிக்கும் ஒருத்தியிடம் சொல்வதே அவளுக்குத் தான் செய்யும் மரியாதை என்பதே இந்த ஆண்களுக்கு ஏன் தெரியவில்லை?

அவள் அதற்குச் சம்மதிக்காவிட்டால் தங்களுக்கு அது ஒரு அவமானமென்று ஆண்கள் கருதுவதே சரியென்றால் அவ்விதமே ஓர் 'அவள்' கருதுவது எவ்விதம் தவறாகும்? அந்த 'அவமானத்திற்குத் தயாராகாத காதல் என்ன காதல்? அந்த அவமானத்திற்கு ஓர் அவனே தயாராகாவிட்டால் ஓர் அவன் எப்படித் தயாராக முடியும்?

உண்மையான காதல் சம்பந்தப்பட்ட இன்னொருவரின் சம்மதத்திற்குக் காத்திருக்காது. ஏனெனில் சம்பந்தப்பட்ட இன்னொருவரின் சம்மதம் பெறப்பட்ட பிறகே அது பிறக்கிறது.

மனசின் பாஷைகளை வாய் வார்த்தைகளா மொழி பெயர்த்துவிட முடியும்?

தொடர்ந்து படிக்கவும்...https://www.valaitamil.com/jayakanthan-kanna-moochi_1740.html

2
அக்கினிப் பிரவேசம்

- ஜெயகாந்தன்

அவளைப் பார்க்கின்ற யாருக்கும்.
எளிமையாக அரும்பி,
 உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும்.
புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும்.
அதுவும் இப்போது மழையில் நனைந்து,
ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப்போய்,
 பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக்கொண்டு சின்ன உருவமாய் குளிரில் குறுகி,
 ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில்,
அப்படியே கையிலே தூக்கிக்கொண்டு போய்விடலாம்போலக் கூடத் தோன்றும்...

தொடர்ந்து படிக்கவும்...https://azhiyasudargal.blogspot.com/2010/12/blog-post_31.html

3
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன.

-எழுத்தாளர் சுஜாதா

4
சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா
 -ராஜேஷ்குமார்
( சிறுகதை )

நியூயார்க் நகரம் அந்த சாயந்தர வேளையின் சாம்பல் நிற இருட்டைத் தின்று விட்டு நியான் விளக்கொளியின் வெளிச்ச உபயத்தால் ஒரு செயற்கைப் பகலுக்கு தயாராகிக்கொண்டிருந்தது,

இருபத்து மூன்று மாடிகளோடு, ஒரு கண்ணாடி, செவ்வகப் பெட்டி போல நின்றிருந்த 'ஹோட்டல் ஹெவன் டச் இன்டர்நேஷனல் ஹோட்டலின் ரூஃப் கார்டன் ரெஸ்டாரென்டில் நானும் கயலும் பக்கம் பக்கமாய் உட்கார்ந்து காரட் வெள்ளரி ஸ்டஃப் செய்யப் பட்டிருந்த ப்ரெட் சீஸ் ரோலை செல்லமாய் முன்பற்களில் கடித்து, அதை கடைவாய்க்கு அனுப்பி நிதானமாய் அரைத்து ஃப்ரஷ் ஜூஸ் உதவியால் விழுங்கிக்கொண்டிருந்தோம்.

நீங்கள் மைண்ட் வாய்ஸில் நினைப்பது சரிதான். கயல் என் காதலி.

நான்?'

வரத், அப்பா எனக்கு வைத்த முழுப் பெயர் வெங்கடரமணா சுந்தர வரத ராஜன். யார் என்னை 'வரத்' என்று கூப்பிட்டாலும் கிடைக்காத போதை, கயல் கூப்பிட்டபோது எனக்குக் கிடைத்தது.

நான் அவளைக் காதலிக்க ஆரம்பித்து போன திமிஷத்தோடு 4,320 மணி நேரம் முடித்துவிட்டது. ஒரே ஐடி. கம்பெனியில் எதிர் எதிரே உட்கார்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, எங்களுக்குத் தெரியாமல் கிடைத்த இடைவெளியில் பச்சைப் பசேல் என்று காதல் செடி துளிர்த்துவிட்டது. நான் அடித்த மொக்கை ஜோக்குகளுக்குக்கூட கயல் விழுந்து விழுந்து சிரித்ததால், அந்தக் காதல் செடி இப்போது செழிப்பாய் ஒரு மரம் போல் வளர்த்துவிட்டது.

ஒவ்வொரு வார இறுதியிலும் இந்த 'ஹெவன் டச்' ஹோட்டலுக்கு வந்து சிக்கன் பர்கரையும் சீஸ் ரோலையும் வயிற்றுக்குக் காட்டாவிட்டால், அமெரிக்கா எங்களுக்கு இருண்ட கண்டமாய் தெரியும்.

இன்றைக்கும் இந்த ஹோட்டலில் அந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டிருந்தோம்...


இதுவல்லவா பொன்மாலை நேரம்❤️
இருப்பினும் திருப்புமுனைகள் உள்ளன... தொடர்ந்து படிக்கவும் https://www.vikatan.com/literature/arts/128656-rajeskumar-short-story



5
அழகு என்றால்
 நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ
எனக்குத் தெரியாது.
என்னை பொறுத்தவரை
 ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால்
அது ரொம்ப அழகாகத்தானிருக்க வேண்டும்...

தொடர்ந்து படிக்கவும்...
https://www.valaitamil.com/agraharathu-poonai_1762.html

Pages: [1]