POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

AnJaLi Kavithaigal

(1/7) > >>

AnJaLi:
ஊனம் இல்லாமலே
பிச்சை எடுப்பவர்களுக்கும்,
மற்றவரை பார்த்து
பரிகாசம் பேசுவோர்க்கும்
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.

கொலை செய்து வாழ்பவர்களுக்கும்
கொள்ளை அடித்து வாழ்பவர்களுக்கும்
கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கும்
மதவெறிகொண்ட மதவாதிகளுக்கும்
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.

பல ஆயிரம் தலைமுறைகளாக
அரும்பாடுபட்டு உருவாக்கித்தந்த
பண்பாட்டையும், கலாசாரத்தையும்
நாகரீகம் என்ற மோகத்தால்
ஒரே ஒரு நுற்றாண்டில்
மின்னலைவிட வேகமாக அழித்துவிட்டோமே
நமக்கெல்லாம் தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.

பேரும், புகழும் கிடைக்குமென்றால்
எதை வேண்டுமானாலும்
விட்டுக்கொடுக்கிறார்கள்,
பணம் கிடைக்குமென்றால்
அந்த பேரையும், புகழையும்
விட்டுக்கொடுக்கும் மனிதர்களுக்கு
தோன்றவில்லை
என்ன இந்த வாழ்க்கை என்று.-பிறகு
எப்படி உருப்படும் இந்த உலகம்!

AnJaLi:
கண்ணீ­ர் புகைக்கும் கலங்காத கண்கள்
உலகையே சுமக்க தடித்த தோள்
கனைமரம் போன்றே கைகள்
வாள்முனை போல் விரல்கள்
வைர வலிமை கொண்ட இதயம்
தூரத்தின் வலி உணரா கால்கள்
அகிலம் அளந்த அறிவு
ஆழம் அறியும் பார்வை
இவையெல்லாம் ஆசையெனில் அது பேராசை
இவையாவும் என் கனவல்ல ..!
என் ஆசை ஒன்றுதான்
அது நீ மட்டும் அறிந்த உண்மைதான் -என்
கனவு மெய்பட வேண்டும்!

AnJaLi:
ஊனம்


ஓவியம் வரைகையில்
தூரிகை உடைந்ததோ?
பிரம்மனுக்கு!


--------------------------

ஏழ்மை


பள்ளிக்கூடத்திற்கு
செங்கல் சுமக்கும்
சிறுமி

---------------------------

நவீன பேய்!


நவீன மனுஷனுக்கு
பேய் பிடிச்சிருக்கு
கைபேசி உருவில்

AnJaLi:
இமைகளின் சுமைகளை
இறக்கிக்கொண்டு
இருக்கின்றேன்
முடியவேயில்லை
ஆனால் வடிந்து விட்டது ...!

என் விழிகள்
வறண்டுவிட்டன...?
பாலைவனக்
கானல் நீர் போல்
தூரத்து நம்பிக்கை
துரத்துகிறது...!
வலிகள் தான்
வாழ்க்கைத்துணை ...?!
இடிபாடுகளுக்கிடையில்
இதயம் ...!?
விடியல்கள் மடிந்து
கொண்டு இருக்கின்றன...!?
சுகங்கள்
சொல்லாமலே செல்கிறது
சாவுக்கு வந்ததைப்போல்...!?
உணவு
உறுத்தலாகவே இருக்கிறது ...!?
நினைவு
நடுக்கத்தின் சதுக்கத்தில்
அலைந்து கொண்டிருக்கிறது ...!?
இரவு உணர்வுகளை
கொறித்துக் கொண்டிருக்கிறது
கொஞ்சம் கொஞ்சமாய் ...!?
தவிப்பு
களிப்பில் கூத்தடிக்கிறது ...!?

AnJaLi:
ஒவ்வொரு நாளும்
ஓராயிரம் முறை
எழுதுகிறேன்
"இறைவா நன்றி"
"இறைவா நன்றி"
என்று

இது எனக்கு
தரப்பட்ட‌
தண்டனையல்ல‌
உனை எனக்குதந்த
அவனுக்கு நான் செய்யும்
நன்றிக்கடன்.

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version