Advanced Search

Author Topic: திருக்குறள்  (Read 59578 times)

December 07, 2022, 12:27:11 pm
Reply #165

RiJiA

Re: திருக்குறள்
« Reply #165 on: December 07, 2022, 12:27:11 pm »
Hi Aslan...முயற்சிக்கு  பாராட்டு 👏ஆனால் பதில்  தவறு..37வது  கேள்வி  மற்றும்  விடை  பாருங்க  இந்த  கேள்விக்கான  பதில்  நீங்கள்  சுலபமாக கண்டுபிடிக்கலாம்🙂

December 09, 2022, 10:04:03 am
Reply #166

RiJiA

Re: திருக்குறள்
« Reply #166 on: December 09, 2022, 10:04:03 am »
40வது கேள்விக்கு ஒரு குறிப்பு ..

அந்த திரைபடத்தில் கதாநாயகி பெயர் வசந்தி.

December 09, 2022, 10:10:33 am
Reply #167

AslaN

  • Hero Member

  • *****

  • 1060
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #167 on: December 09, 2022, 10:10:33 am »
திரைப்படம் : 36 வயதினிலே

 

December 09, 2022, 10:17:08 am
Reply #168

RiJiA

Re: திருக்குறள்
« Reply #168 on: December 09, 2022, 10:17:08 am »
AslaN   பாராட்டுக்கள்....👏👏திருக்குறள் குறிப்பிடுங்க..

December 09, 2022, 10:20:09 am
Reply #169

AslaN

  • Hero Member

  • *****

  • 1060
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #169 on: December 09, 2022, 10:20:09 am »
கொஞ்சம் கடினம் தான் முயற்சி செய்கிறேன் RIJIA 😊

December 09, 2022, 10:25:45 am
Reply #170

RiJiA

Re: திருக்குறள்
« Reply #170 on: December 09, 2022, 10:25:45 am »
Aslan நீங்கள்  கண்டு  பிடித்த திரைப்பட பெயரிலே  இருக்கு அந்த  திருக்குறள் குறிப்பு. 37வது  விடை  பாருங்க  புரியும் 🙂
« Last Edit: December 09, 2022, 10:27:39 am by RiJiA »

December 09, 2022, 04:47:13 pm
Reply #171

AslaN

  • Hero Member

  • *****

  • 1060
    Posts
  • Total likes: 50

  • Gender: Male

  • மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது

    • View Profile
Re: திருக்குறள்
« Reply #171 on: December 09, 2022, 04:47:13 pm »

விடை:-

குறள்-36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

மு.வரதராசன் விளக்கம்:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.


December 09, 2022, 10:29:09 pm
Reply #172

RiJiA

Re: திருக்குறள்
« Reply #172 on: December 09, 2022, 10:29:09 pm »
வாழ்துக்கள் AslaN சரியான பதில்👏👏

⭐விடை: திரைப்படம்  பெயர்> 36 வயதினிலே


குறள்-36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

December 12, 2022, 03:02:48 pm
Reply #173

RiJiA

Re: திருக்குறள்
« Reply #173 on: December 12, 2022, 03:02:48 pm »
41வது கேள்வி:

கிலே  கொடுக்கப்பட்டுள்ள  விளக்கம் கலைந்திருக்கு அதை சரி  செய்து பின் அந்த விளக்கத்துக்கான  குறளை பதிடவும்.

விளக்கம்:

செய்யும்  வாழ்நாளுக்கான  அந்த மற்றவர்களுக்குச்  பலன் நல்லவைதான் வாழ்நாளில்
« Last Edit: December 12, 2022, 03:04:28 pm by RiJiA »

December 14, 2022, 02:39:12 pm
Reply #174

Sanjana

Re: திருக்குறள்
« Reply #174 on: December 14, 2022, 02:39:12 pm »
விடை:

வாழ்நாளில்  மற்றவர்களுக்குச் செய்யும் நல்லவைதான், அந்த வாழ்நாளுக்கான பலன்.

குறள்-38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.


மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
வாய்த்த நாள் வீணாகாமல் நல்லது செய்தால் அது ஒருவருக்கு வாழ்நாள் வழியை மூடும் கல்.

December 14, 2022, 04:43:28 pm
Reply #175

RiJiA

Re: திருக்குறள்
« Reply #175 on: December 14, 2022, 04:43:28 pm »
SUPER SISS..சரியான பதில்💐பாராட்டுக்கள்👏👏

⭐விடை:

வாழ்நாளில்  மற்றவர்களுக்குச் செய்யும் நல்லவைதான், அந்த வாழ்நாளுக்கான பலன்.

குறள்-38

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

December 15, 2022, 07:57:38 pm
Reply #176

RiJiA

Re: திருக்குறள்
« Reply #176 on: December 15, 2022, 07:57:38 pm »

42வது கேள்வி:

இந்த புகைப்படம்  எந்த  குறளக்கானது?

December 16, 2022, 12:41:24 am
Reply #177

Sanjana

Re: திருக்குறள்
« Reply #177 on: December 16, 2022, 12:41:24 am »
விடை:

குறள் 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.


மு.வரதராசன் விளக்கம்:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.


சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
அழிக்கும் குணம்,அளவற்ற ஆசை,கடுங் கோபம்,வன்மையான வார்த்தை இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம்.


December 16, 2022, 02:02:24 pm
Reply #178

RiJiA

Re: திருக்குறள்
« Reply #178 on: December 16, 2022, 02:02:24 pm »
சரியான  பதில் SISS SUPERB 💐👏👏

⭐விடை:

குறள் 35:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

December 17, 2022, 11:47:18 am
Reply #179

RiJiA

Re: திருக்குறள்
« Reply #179 on: December 17, 2022, 11:47:18 am »
43வது கேள்வி:


1)____________=ஒழுக்க நெறிகளுடன்

2)____________=வீட்டு வாழ்க்கையை

3)____________=என்று பெருமையைப் பெறுகிறவன்

4)____________=சிறப்புற வாழ்ந்து காட்டுகிறவன் ஆவான்

5)____________=மற்றபடி தகுதி, பகுதி, செல்வம், கொண்டு சமுதாயத்தில் உயர்ந்துள்ள மற்றவர்களை விடத்
தலைமையானவன்


ஒரு  குறளில் வரும்  ஒவ்வொரு  சொல்லுக்கும் உள்ள  விளக்கம்  இது..காலியான  இடத்தை  நிரப்பி, முழு  குறளை பதிவிடவும்.