POEMS - கவிதைகள் > கவிதையும் கானமும்

கவிதையும் கானமும்-039

(1/2) > >>

RiJiA:
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-039

இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

iamcvr:
"அம்மா மாதிரி"
ஆண்களை உணர்ச்சிவசப்படும் தருணங்களில் கவனித்ததுண்டா ?

நன்றாய் அக்கறைப்படும் ஆசிரியையில்;
நல்வழி காட்டும் நண்பியில்;
சோர்ந்து விழ சேர்ந்து நின்று "பாத்துக்கலாம்" என தோள் தரும் காதலியில்;
"என்கிட்ட ஏன் சொல்லல" என உரிமையோடு கோபிக்கும் தமக்கையில்;
பிறப்பிடம் விட்டு பிழைப்பிற்கு வந்த இடங்களில்
"சாப்பிட்டியா" என கேட்கும் ஒவ்வோர் குரலிலும்;
"இளைச்சு போய்ட்ட" ன்னு சமைத்து தரும் அக்காமார்களின் தூய அன்பிலும்;
அப்படியே அம்மாவின் சாயல்,
அந்நேர ஆண் மனத்தில் அசரீரியாய் கேட்கிறது.
"இவர்கள் அப்படியே அம்மா மாதிரி"
ஆம், அம்மாவை தான் காண்கிறேன் அத்தனை பேரிலும்.

அந்த "அம்மா மாதிரி" அன்பைத்தேடி தான் வாழ்க்கை முழுதும் ஓடுகிறேன்.
அன்பு காணும் இடமெல்லாம் அவளை அங்கு பொருத்தி அழகு பார்க்க
"அம்மா மாதிரி" எனும் சொற்றொடரின் செறிவு காலத்தோடு அதிகரித்தே செல்கிறது.
அம்மா அனைத்தும் ஆகி விடுகிறாள் - கடவுள் போல

ஆண்பிள்ளைகளின் முதல் காதலி அவள்.
போர்க்களம் தான் வாழ்க்கை என்ற போதும்,
கேடயமும் ஆயுதமும் தான் தேவையென்ற போதும்,
கேடயமாய் தான் நின்று
ஆயுதத்தை கையில் தந்து
படித்துக்கொள் என்றவள் அவள்.
இரும்பு கேடயமல்ல;
இரத்தமும் சதையுமாய், உரிமையும் உணர்வுமாய்
அவள் அன்பெனும் கேடயம்.

தகப்பன் அன்பு கிடைக்காத போதும்
தகப்பனும் தாயுமாய் நின்று காத்தவள்.
போர்க்கள வாழ்வில் எனை நானே பார்த்துக்கொள்ளும் போதே
இத்தனை வலிகளை கடக்கிறேன்;
அவள் எமக்காய் தனியே எத்தனை வலிகளை கடந்திருப்பாள் - அத்தனையோடும்
அவற்றை புறம் வைத்து அன்பை மட்டுமே எமக்கு கடத்தியிருக்கிறாள்.
கைம்மாறாய் எனக்கு ஒன்றே உண்டு ...
அதில் தான் அவளின் மொத்த சந்தோசமும்.
(திருக்குறள்) "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"
அத்தனை பேரிலும் நான் அம்மாவை கண்ட போதிலும்
அம்மாவை அறிந்தவர்கள் என்னில் தேடுவதும் அதுவே தான் - அம்மாவின் நற்குணங்கள்
அவர்கள் மனதில் இருந்து
"அப்படியே இவன் அம்மா மாதிரி" எனும் வாழ்த்திற்காகவே ஓடலாம்,
அது தான் வாழ்க்கை.

அனைத்து பெண்களிலும் அம்மாவை தேடியவன் - தேடலோடு
அம்மாவிற்கான என் அன்பையும் மதிப்பையும்
அம்மாவெனவே அனைத்து பெண்களிடமும் கொடுக்க நினைக்கிறேன்;
அதில் தான் அவளின் மொத்த சந்தோசமும்.
நிச்சயம் பெற்றுவிடுவேன் என் கிரீடத்தை
"அப்படியே இவன் அம்மா மாதிரி"
சி. வி. ஆர்.

Sakura:
உலகமே அடங்கிப் போய் மீண்டுமொரு முறை குழந்தயாய் சுருண்டு கொள்ளும் மூன்றெழுத்து மந்திரம் அம்மா!
தவழ்ந்து நடையிட்டு பின் தத்தி நடையிட்டும் நான் விழுந்து எழுந்த பொழுதெல்லாம்
பூரித்து மகிழ்ந்தவள் நீ.
சிறு காயம் பட்டாலும் துடிதுடித்து அடங்கும் உன் உள்ளம்
பத்து மாதம் சுமந்ததனினாலா? அல்லது உன் உயிரையே கருவாக உருக்கொண்டதினாலா?
எனக்குத் தெரியவில்லை
ஆனால் தெரிந்தது ஒன்றெனில்
அது
இன்றளவும் யாரும் நிரப்ப முடியாத இடம்.
மொத்தக் குடும்பத்திற்கும் ஒற்றை
கண்ணியாய்
விளங்குபவள் நீ..
உன் இடத்தை யார் தான் நிரப்பிட முடியும்?
'மகனுக்கு இது பிடிக்கும்,
மகளுக்கு இது பிடிக்கும்',
என நீ செய்த தியாகங்களில் வாழ்பவர்கள் அறிவார்களா
தியாகத்தின் நீட்சி தியாகம் என்பதை?
நாங்கள் வைத்த மிச்ச உணவை
உண்டு
உயிர் வாழும் உன் தியாகத்தின்
எச்சம் நாங்கள்
உன் உதிரத்தின் எச்சம் நாங்கள்,
உன் பிறவியின் எச்சம் நாங்கள்,
உண்மையில் உன் மிச்சத்தின் எச்சம் நாங்கள்.

எங்கோ தொலைதூரத்தில் இருப்பின் உன் புடவை வாசனையை
தேடும் மனதிற்கு என்ன கூறி
ஆற்றுப்படுத்துவது?
யாரோ எங்கேயோ ஊற்றும் தோசையின் மணத்தில்
உன்னை தேடும் மனதிற்கு என்ன கூறி
ஆற்றுப்படுத்துவது?
நரை கூடும் பருவத்திலும்
உன் மடி சாய தேடும் மனதிற்கு
என்ன கூறி
ஆற்றுப்படுத்துவது?
தன் ஒவ்வொரு காயத்தையும் மறைத்து தன் பிள்ளைக்காய் குடையாய்
வேராய்
மரமாய்
மடியாய்
இருக்கும் தாய்க்கு கூற நினைப்பதெல்லாம்
நீ என் மகளாய் பிறந்திட
நான் உன்னை என் சேயாய் காத்திட
வேண்டும்
அம்மா!

Passing Clouds:
அம்பை  தாங்கும் அன்னை


தனது உயிரை கொண்டு பிள்ளைகளை காப்பது அன்னையின் அன்புமட்டுமே .....

இந்த உலகத்தில் வாழ்வதற்கு இன்றியமையாதது பணம்

பாசத்தை பணம்கொடுத்து வாங்கும் உலகில் நாம் வாழ்த்து கொண்டிருக்கிறோம்

சுயநலத்தின் பிடியில் பூமிக்கு அடியில் செல்வோம் என்று தெரிந்தும்  மற்றவரிடம் நடந்து கொள்கிறோம்...

விலைமதிக்க முடியாத கரந்த பாலினை  போல சற்றும் சுயநலம் கிடையாதா அன்பு
தாயின் அன்பு மட்டுமே இந்த உலகத்தில் ....

இதை அன்னையோடு இருந்து உணராதவர் பலர்  அன்னையை இழந்து உணர்ந்தவர்கள் சிலர்...

சராசரி அன்னையின் ஆதங்கம் பிள்ளையின் எதிர்கால வாழ்கை அவனது அல்லது அவளது
பெயருக்கு பின் படிப்பின் அடையாளம் ...

எத்தனை இன்னல்கள் இந்த உலகில் ஒருவனுக்கு  கல்வி கற்க

எத்துணை இன்னல்கள் இருந்தாலும் அத்தனை அம்புகளையும் தனக்குள் வாங்கி
பிள்ளைகளை கரைசேர்ப்பது அன்னை மட்டுமே ....

பணத்தினால் வரும் அம்பு தனது சொந்தத்தினால் வரும் அம்பு  ஆசிரியரினால் வரும் அம்பு கணவர்முலமாகவரும் அம்பு  அனைத்தையும் தங்கினால் குழந்தைக்காக....

படிப்பின் அருமை தெரியாதவர் பலர் , வேலைசெய்யும் இடத்தில் கூட
படித்தவரின் நிலை ஒருபடி உயர்ந்ததும் , படிக்காதவர் வேலை  தெரிந்தும் கீழே உள்ளார் தொழிலாளியாக...

அன்னையின் கனவு மகனோ மகளோ நல்ல நிலைக்கு வரவென்றும் என்று
அதற்காக எதையும் தங்குவாள்  அன்னை

கர்ப்பத்தின் வழியை தாங்கியவளுக்கு, ஒரு பிறவியில் இரண்டாம் ஜென்மம் எடுப்பவளுக்கு ,
இந்த வலியெல்லாம் தூசிக்கு சமம் ...

மனிதனை படைத்த கடவுள் ஓய்வு பெறவே அன்னையர்களை படைத்துவிடான் போல
கடவுளின் வேளை அன்னையிடம்... படைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு பிள்ளை பிறப்பது ...

படத்தை குழந்தையினை பேணி காத்து .. பராமரித்து ..பாலூட்டி ...சீராட்டி ...தனது எல்லையற்ற அன்பினை
கொடுத்து ... படிக்க வைத்து நேரம் தவறாமல் சமைத்து புடித்த உணவு கொடுத்து... திருமணம் ஆகும் வரை
அணைத்து அம்புககளையும் சுமப்பவள் அன்னை...

எத்தனை பாசம் காட்டினாலும் வளந்த பிறகு காதல் எனும் இன்பத்தால் அன்னையை விட்டு சென்று
அவளது முதுகில் குத்துகிறார் ...

வேலைகிடைத்ததும் ஆணவம்  கொண்டு அன்னையை மதிக்காமல் அவளது முதுகில் குத்துகிறார்

திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் சென்று பாலூட்டிய அன்னையை முதுகில் குத்துகிறார்

வயதான தாயை பார்க்கமுடியாமல் அவருக்கு உபசரிக்க நேரம் தராமுடியாமல்  முதியோர் இல்லத்தில்
சேர்த்துவிட்டு  அன்னையின் இதயத்தில் குத்துகிறார்



நாம் எத்துனை கஷ்டம் வேதனை இன்னல்கள் அன்னைக்கு கொடுத்தாலும்
நம்மை பார்க்கும் பொது கேட்கும் ஒரே வார்த்தை சாப்டியா  பா !!! என்றுதான்


தன்னை பெற்ற அன்னைக்கே இந்த நிலையென்றால் மற்றவருக்கு கேள்விக்குறிதான் ??


வாழும் தெய்வத்தை காப்போம் மற்றும் மனிதநேயத்தை வளர்ப்போம் நமக்காக அம்பை சுமத்தவளை
வாழ்நாளெல்லாம் சுமப்போம் அதுவும் ஒரு சுகம் தன தோழா




என்றும் உணர்ச்சிமிக்க (சென்சிடிவ் )

நீலவானம்[/size]

My bestie:
அன்னையின் அன்பில் அரவணைக்கப்பட்ட
அனைவருமே அன்பானவர்கள்..
அறிவானவர்கள்.. அழகானவர்கள்.!நேசிக்கும் உறவுகள் யாவும்
நம் அம்மா ஆக முடியாது.

வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள்
இருந்தாலும் நாம் ரசிப்பது
நிலவை தான்..
பூமியில் எத்தனை பெண்கள் இருந்தாலும்
நம்மை நேசிப்பது பெற்ற தாய் மட்டுமே.

எல்லா பிள்ளைகளுக்கும் நல்ல அம்மா
கிடைத்து விடுகிறாள்.. ஆனால்
எல்லா அம்மாக்களுக்கும்
நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை.!

துன்பங்கள் வரும் தருணம்
தாயின் மடி சொர்க்கம்.
 இன்று என்னை இவுலகுக்கு அறிமுகம் செய்த அன்பு அம்மாவுக்கு ஆயிரம் ஆயிரம் முத்தங்கள். தாயை வணங்குவோம்
தாய்மையை போற்றுவோம்

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version