POEMS - கவிதைகள் > கவிதையும் கானமும்

கவிதையும் கானமும்-037

(1/2) > >>

Administrator:
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-037

இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.[/color

Shree:


இது அவளின் மனம்....

நேசத்தின் பிடியில் குறையாமல்....

நாட்களோடு தொடர்ந்த ஒர் பொழுது
எது ஏது என்று அறியாமல்....

நீங்காது நின்றே போனது
அதன் ஆழம் தெரியாமல்....

சொல்லித்தான் புறியுமோ அதன் ஆழம்
அவ்வளவு கொடிதா என்ன?

சொல்லி விட வேண்டும் என்றது எண்ணம்
மனமோ கூறாமல் அதன் நேசத்தை சேர்த்து வைத்தது....

ஏங்கியதா என்றால், இல்லையே
எதற்கு அந்த எக்கம்
என்னோடு தான் உள்ளது என்றது....

சேர்த்து வைத்த மனதிற்கு, அதன் தூரம் தெரியவில்லை
ஆனால் பாரத்தின் அளவு குறையகூடுமா?

நகரத் தொடங்கியது நாட்கள்
நேசம் குறையாத நினைவலைகளோடு....

நாட்களின் பாகங்கள் நிஜங்களாய் மீழுமோ
மீண்டாலும் நிஜங்களோடு சேர்க்காமல்
நினைவோடு மட்டுமே கடந்து போக என்னும்....

ஆனாலும் அந்த நேசத்தின் அளவு குறையாது
மறைத்தும் தன் அன்பை வெளிப்படுத்தும்....

ஏன் என்று தான் கேட்டு பாருங்கள்
கூறத் தெரியாமல் நடிப்பது போல் துடிக்கும்...

ஏனெனில் அது அவளின் மனம்....


Passing Clouds:
💕💕💕காதலின் சின்னம் கைகளில் 💕💕💕

வானின் தூரம்போல, காற்று படர்ந்திருப்பதைப் போல
கடலின் ஆழம்போல, சூரியனின் வெப்பத்தை போல
காதலும் உள்ளது இந்த உலகத்தில்.

நீ கையால் காதலின் சின்னம் காட்டுகிறாய்
ஆனால் உனது முகத்தை மறைத்துக் கொண்டு

சிந்தேன் ஏன் என்று என்னையே கேட்டுக்கொண்ட தருணம்

உனது வெட்க்கம் கண்டு சூரியன் உறைந்து போய்விடும்  என்றா?
இல்லை காற்று தன் பாதையை மாற்றி உன்னையே சுற்றும் என்றா?

நீ வெட்க்கப்பட்டு ஒளிந்தது  பட்டுப்போன மரம், என்ன ஒரு மாயம்
துளிர் விடுகிறது பெண்ணே!!!

என்ன ஒரு அதிசயம் இயற்கையின் இன்னிசை நிகழ்ச்சி நீ வெட்க்கபட்டதால் அரங்கேரியது
காற்று இன்னிசை அமைக்க மரங்கள் அனைத்தும் ஆனந்தத்தோடு ஆடுகின்றதே  பெண்ணே !!!

உன்னைப் பூவோடு ஒப்பிடமாட்டேன் ஒருநாள் பூ உதிர்ந்துவிடும்
உன்னை நிலவென்று சொல்லமாட்டேன் ஒரு நாள் முழுவதும் இருக்கமாட்டாய்
உன்னை எனது நிழல் என்று சொல்லமாட்டேன் ஒளி இல்லையென்றால் பிரிந்துவிடுவாய்
பெண்ணே நீ எனது இதயத்தின் ஓசை நான்  இரு(ற)க்கும் வரை என்னோடு இருப்பாய் !!!

உனது இதயத்தைக் கைகளில் காட்டி எனது இதயத்தை உன்னோடு  சேர்த்தாயே பெண்ணே
கத்தியின்றி இரத்தமின்றி பரிமாறப்பட்ட இதயம் காதல் எனும் அறுவைசிகிசையில் !!!

மீண்டும் பிறந்தோம் காதளர் என்னும் குழந்தையாக உனக்கு நான் எனக்கு நீ என்று !!!

ஒளிந்து கொண்டது போதும் பெண்ணே இயற்கை ரசித்த உனது வெட்கத்தை
நானும் ருசிக்க ஆசைப்படுகிறேன்!!!

இன்றுமட்டும் அல்ல வாழ்நாள்முழுவதும் ❤❤❤



என்றும் காதலுடன்

💙💙💙நீல வானம் 💙💙💙

Sudhar:
மரம் பேசுகிறது உனக்காக நான் இருக்கேன் என் சுவாசத்தை எடுத்து கோல்,
உன் மூச்சை ஸ்வாசி... நீ உயிர் உள்ளவரை நான் இருப்பேன்.
மனிதனை பார்த்து மரம் சொன்னது.
மனிதன் சொன்னான் மரமே இவுளுகில் ஆச்சரியம் என்றால் நீ,
காலத்தில் அழியாதது மரம்,
ஏன் என்றால் தண்ணீர் உள்ள வரை மரத்திற்கு வாழ்க்கை. மரம் இருக்கும் வரை மனிதனுக்கு வாழ்க்கை.
மனிதனால் மரம் வாழவில்லை, மரத்தால் மட்டுமே மனிதன் வாழ்கிறான்..
மூச்சு விட சுவாசம் தேவை ஆகையால் நான் மரத்தை நேசிக்கிறேன்.
மரத்தை சுவாசிக்கிறேன்
மரத்தை காதலிக்கிறேன்.
மரத்துடன் வாழ்கிறேன்...
மரத்திற்கு மட்டுமே நிற்க, நடக்க, வாழ, பாதுகாக்க மரங்கள் தேவை படுகிறது.
மரத்திற்கு மட்டுமே அழகு உள்ளது வாடினாலும், துளிர்த்தாலும்.
மரத்தை நேசிப்போமே
மரத்தை பாதுகாப்போம்....
மரத்தை காதலிப்போம்...

Sivarudran:
மரமாகிப் போனேன் நான் - ஆம்
அவள் என்னை கட்டி அணைத்து
காதல் சொல்கையில் தானே மரமாகிப் போனேன் நானே !
நான் துளிர்விட நினைக்கையில் அவள் என்னை தொட்டுவிட்டாள் !
என் உடம்பில் கிளைகளும் இலைகளும் முளைத்து முறுக்கேறியது
அவள் என்னை மூளை சலவை செய்கையில் !
அவள் தொட்ட இடம் துளிர்விட்டது !
களிறு போல் என் தோல் தடித்து போனது !
காதல் சொல்லி என் பக்கம் வந்த கன்னியவள் கைப்பட்டதும் -ஆம்
களிறு போல் என் தோல் தடித்து போனது !
அவளின் வேர்வைத் துளி பட்டு நிலத்தில் நான் வேர் விட்டுப் பாய்ந்தேன் !
இச்சையோடு அவள் என் அருகில் வர
என் உடம்பில் பச்சையம் பல கோடி கூடியது!
காயாத சருகுகள் என்னில் பல உண்டு
அவள் தன் காதல் சொல்லியதால்!
வாடாத கிளைகள் என்னில் பல உண்டு
வண்ணக்கிளி அவள் என்மேல் வாழ்ந்து வருவதால் !
உதிராத பூக்கள் என் மேல் பல உண்டு -அவள்
உள்ளத்தை அள்ளி என் மேல் வைத்த காரணத்தினால் !
வெம்பாத பழங்கள் என்னில் பல உண்டு
வெட்கப்படும்
 பாவை- அவள்
 என் மேல் விருப்பம் கொண்டதால் !
ஆசை மங்கை அருகில் இருக்க ஆயுள் கூடி போன மரமானேன் நான்-  ஆம்
ஆண்டெல்லாம் வளர்ந்து செழிக்கும் மரமாகி போனேன் நான் !
யாரும் என்னை வெட்டிவிடாமல்
 என்னை கட்டி அணைத்து காலமெல்லாம் காத்து நிற்கும்  இவளோடு
என் காலமும் காதலும் நாளெல்லாம் நகர்ந்து கொண்டிருக்கிறது !

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version