POEMS - கவிதைகள் > கவிதையும் கானமும்

கவிதையும் கானமும்-032

(1/2) > >>

Administrator:
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-032

இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

SÄM:
Hi my dears,
SAM here
எனது கவிதை:
 

                உயிர்நாடி

மாயோளின் மனம் கவர்ந்த மானிடனாய்
அவளின் உள்ளங்கியோடு,
உறவாடிய எனது உள்ளம்.....
துளைகளின் தீண்டலால் துளிர்த்தது,
கடந்திடாத கனங்களை எண்ணி சிறகடித்தது.
விறளியின் விரல்கள் ,இதயத்தை மீட்ட.....
இசையாய் இயம்பியது அவளது பெயரை.
வாழ்க்கையை வர்ணஜாலமாக்கிய
வாணவில்லின் விரல்களை......
விலக்க விரும்பாமல் விம்மிய விணாடிக்கு,
பரிசளித்தேன்..... பாவையின் கரம்பற்றி.
செம்பியின் சிகப்பு நெகப்பூச்சை,
சிந்தையில் ஏந்தினேன்......
செம்மைநிறத்தின் பொருள் நிருத்தமாதாலால்...
சற்று ஐயத்தை தூவிய ஆடவளுக்கு,
உறவாடுவதைக்காடிலும்....
உறவை விடாது காப்பேன் என உறுதியளித்தேன்.


Limat:
என்னவளின் இதய துடிப்பில் சொர்க்கம் கண்டேன்!!!!

அழகிய மாலை வேலை
அந்த கடற்கரை மணலில்
இதமாய் வீசிய குளிர்காற்று
இருமேனி இடைவெளி குறைத்தது

என்னவள் என் கரம் இறுக்க பிடித்து
உன்னை மிகவும்  பிடிக்கும் என்றால்
நான் அம்மு வின் நெற்றியில் முத்தமிட்டு
நீ என்றி நான் இல்லை என்றேன்

முழு நிலவின் தரிசனம் முழுமையாக
அம்முவின் கண்ணில் ஒரு ஏக்கம் கண்டேன்
உடலும் உணர்வுகளும் ஒன்றான நிமிடங்களில்
இதழ்கள் இணைய இதயம் துடித்தது

என்னவள் தலை என் மார்பில் புதைத்தால்
நான்  இருகரத்தால் அவள் முகம் தூக்கி
அவள் விழிகளை வினாடிகள் ரசித்து
இதழ்கள் இணைய இமைகள் மூடிக்கொண்டது

காந்தவிசை தோற்கும் ஒரு ஈர்பால்
இறுக்கமாய் இணைந்திருந்த இதழ்கள்
ஈர் உயிர் ஓர் உயிரான நொடி துளிகள்
இமை வழி கசிந்தது கண்ணீர் துளிகள்

சொர்க்கம் மண்ணிலா விண்ணிலா என்று
கற்பனையில் தவித்த எனக்கு
சொர்க்கம் என்னவளின் இதய துடிப்பில் என்று
அவளது அணைப்பாள் என்னை உணர வைத்தால்....

Ruban:
நானும் என் தோழயும் இருவரும் ஒன்றாய்
ஒரு அழகான மாலை வேளையில்
அழகான பூக்கள் நிறைந்த தோட்டத்தில்
இருவர் மட்டுமே இருக்கையில்

அழகிய நினைவுகள் வந்து வட்டமிட
அதை ரசித்தபடி என் தோழியிடம் பேசிக்கொண்டே
அவள் கையை பிடித்தபடி  நேரம்
செல்கயில் ஒரு தனி இன்பம் அவள்
என் தோழியாய் என்னோடு இருக்கையில்

இந்த உலகம்கூட சிறியது தான்
அவள் அன்பின் முன்
அவளே என் உலகமாக இருக்கிற போது
எதற்கு வெறுலகம் எனக்கு
என் அன்புக்கு உருவம் கொடுத்தவள்
அவளே என் அன்பு தோழியுமானவள்

அன்புக்கு நிகர் ஏதும் இல்லை
தேழிக்கு நிகர் யாருமில்லை
அவள் என்னோடிருக்கையில்
எனக்கு நிகர் ஒருவருமில்லை
என்று தோன்றவைக்கும் அவள் அன்பு

அன்பும் என்னோடிக்கிறது
அரவணைப்பும் என்னோடிருக்கிறது
அன்பும் அரவணைப்பும் இருந்தால்
ஒருவனுக்கு அகிலமும் அவன் காலடியில் இருக்கும்
அன்புக்கும் அரவணைப்புக்கும் அவளே அர்த்தம் தந்தவள்.

Passing Clouds:
இதய துடிப்பின் ராகம்


பெண்ணே உணர்வுகளில் உள்ளடக்கியது தான் மனிதனின் வாழ்கை

உன்னோடு எனக்கு இருக்கும் உணர்வை பற்றியதுதான் இந்த கவிதை

உன்னை கண்ட நாளில் தோன்றிய உணர்வு அது அன்பா ? காதலா ? என்று புரியாத உணர்வு

உணர்வை எனது இதயத்தின் துடிப்பில் உணர்கிறேன் பெண்ணே

ராகங்கள் பதினாறும் உள்ளாகியது இதயத்தின் துடிப்பு

உன்னை காணும்போது பார்த்த ஆனந்தத்தில் எனது இதயம் துடிப்பது ஆனந்த ராகத்தில்

உன்னை காணாமல் இருக்கும்போது துடிப்பது  சோக ராகத்தில்

இன்பமும்  துன்பமும்  கலந்ததுதான் வாழ்கை பெண்ணே ,

ஆனால் துன்பம் நீ என்றால் இன்பமாக அதையும் ஏற்றுக்கொள்கிறது எனது இதயம்

தூரத்தில் நின்று ஏன் இடைவெளியை உருவாக்குகிறாய்

அருகில் வா பெண்ணே எனது  இதயத்தில் கை வைத்து கேள்

லப் டப் லப் டப் என்று துடித்த இதயம் உனது பெயரை அல்லவா

முணுமுணுத்து துடிக்கிறது இப்பொழுது புரிகின்றது பெண்ணே

எனது இதயத்துடிப்பின் ராகம் நீ என்று !!!


நீல வானம்

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version