POEMS - கவிதைகள் > கவிதையும் கானமும்

கவிதையும் கானமும்-026

(1/2) > >>

Administrator:
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-026

இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

kathija:
ஜோதா அக்பர் 💘💘
indilinrunthu naan jodha

 இந்த ஓவியத்தை பார்த்ததும் என் கண்முன்னே தோன்றிய உருவம் ஜோதா💜💜💜💜
 கத்திஜா என்ற பெயரையே ஜோதா வாக மாற்றிவிட்டேன்
 என் அக்பருக்காக💖💖💖💖
 அந்த அளவிற்கு என் மனதில் இடம்  பிடித்தவர்  அக்பர்.
 என்னை ஜோதாவாக உணர்ந்த தருணம் அனைத்து பெண்களும் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது நம்பிக்கை, காதல், அக்கறை அதை அழகாக எடுத்துக்காட்டிய ஆண்மகன் அக்பர்.
 என்னை முழுவதுமாக கவர்ந்த ஒரு ஆடவன், எப்போது அந்த முகத்தை பார்த்தாலும் இனம்புரியாத காதலும், ஒருவிதமான ஆனந்தமும் என்னில் தோன்றும், என்னை கவர்ந்தவன் அகபர்.


 காதலுடன் தொடங்குகிறேன் எனது கவிதையை:


 இருவரும் எங்கோ இருக்க
இருவரும் எங்கோ இருக்க
 காலம் ஒன்றாய் சேர்க்கும் வரை
 பெண்மையின் தன்மையை அறிய மறந்தேன்
 என்னை ஆள்பவன் யார் என்றே
 மண்ணில் பிறந்த பெண் நெஞ்சு தேடும்
 அதை மறந்து குழந்தையையாய் அலைந்தவள்
 நாளும் சிறுகுழந்தையாய் விளையாண்டவள்

 மாவீரன் என்று உன்னை உலகமே போற்ற
உன்னை காணும் எண்ணம் எழவில்லை ஏனோ!

 காலம் கனிந்தது கண்முன்னே தோன்றினான் என் வீரன்
ஒரு கணம் என் இருதயம் நின்றது!

 சிலை போல்!

 வீதியெங்கும் விளையான்று
சுட்டியாய் திரிந்தவள்

 என் மாவீரனை பார்த்து அசையா மாது ஆகினேன்

 வார்த்தை ஊமையாகும்
 வார்த்தை ஊமையாகும்
 வார்த்தையும் ஊமையாகும்

 என்று அன்று தான் உணர்ந்தேன்
 உன்திருமுகம் கண்டு

 பேசும் வார்த்தை வரவில்லை
 நடக்கும் பாதையும் புரியவில்லை
 என் செய்வேனடா

 என்று முகம் புதைத்தேன்
 என் கைகளால்

 உலகமே உன் வீரத்தால் வென்றாய்
என்னையோ உன் பார்வையால் வென்றாய்
 என்னையோ உன் பார்வையால் வென்றாய்

 எதிர்த்து வரும் பகைவர் அனைவரும் உன் காலடியில்
 என் மன்னவனோ என் காலடியில்

 என்று நினைத்து நினைத்து மகிழ
 தன்னை தாழ்த்தி

 என்னை வென்றவன்

 மக்களே உன்னை காண தவம் கிடக்க
 என் ஒரு விழி அசைவுக்கு ஏங்கும்

 என் வீரன்
 என் மன்னன்
என் கண்ணாளன்

என் நெற்றியில்
 உன் நெற்றியை வைத்து

 என்னை உன் மனதில் வைத்தாய்

 நான் பெண்ணாக பிறந்ததற்கு
 ஒரு அர்த்தம் கண்டேன்

 உன்னால்

 உன் காதலினால் நாளும் பிறக்கிறேன்
 புதிதாய்

 நீ வந்தாலே எனக்குள் ஏற்படும் மாற்றம்
 என் நிலையை என் முகம் சொல்லும்

 உலக  நாடு போற்றும் மாவீரன்
 நீ
 நாடு போற்றும் மாவீரன்
 நீ
 உற்றவளை அணைக்கும் காதலனும் நீயே
 கண்ணில் தூசி பட்டால் துடித்த காதல்
 மத்தியில்
 தூசி கூட என்னை நெருங்காமல் காத்த காவலன்
 நீ

 உன்னை எண்ணி எண்ணி
வியாகிறேனடா
 நாளும்

 என் தவம் செய்தேனோ
என் மன்னவனை அடைய

எழுதும் வார்த்தை நிறுத்த
 மனமில்லை யடா

 உன் காதலை எண்ணி

 ஏழு சென்மம் வேண்டும்
 நீ என்னோடு இது உங்கள் ஜோதா 💛💛💛💛💛

Barbie Doll:

காதல் மங்கை.. தன் மும்தாஜ்காக அவன் எழுதிய வரிகளிங்கே...

அந்தி சாயும் நேரம்..
அழகான ஆக்ரா நதியோரம்..
நித்தம் விழும் நின் நிழல் ஒன்றே..
நீங்காத என் நிஜ தரிசனம்...

மெய் நிகர் அழகே.. நீ என் மேல்..
மெல்ல விழும் மழையே..
பொய்யொன்று உரைக்கையிலே..
முகம் பொலிவிழக்க காண்கின்றேன்..

நினைவுக்குள் வருகின்றாய்..
நீங்காத ஏக்கம் தருகின்றாய்..
முகிலாடை அணிகின்றாய்..
முழுமதி முகம் மறைக்கின்றாய்..
காற்புள்ளியிட்டு உன்னை தொடர..
விழிகளாலே போரிட்டு எனை வெல்கின்றாய்...

வெண்புரவியின் மேலமர்ந்து..
வெண்ணிலாவை உனை தரிசிப்பேன்..
வெட்கப்படும் உன் முகத்தை..
வெண்மையாக வரைந்தெடுப்பேன்..

தூரிகையால் மடல் எழுதி..
மாதே உனை கவர்ந்தெடுப்பேன்..
பேரெழில், பெருஞ் சீற்றம்..
பேச்சினாலே சரி செய்வேன்..
உன்னிதழ் உதிர்க்கும்...
ஒருகோடி வார்த்தைகளால்..
உள்ளூர உருகிப் போவேன்..

பக்கம் நின்று பார்க்கையிலே..
பளிங்கு சிலை போலிருப்பாய்..
யுகயுகமாய் தொடருந்து வந்து..
யுத்தமிட துணிய வைப்பாய்..

கொண்ட கடன் காதல் ஒன்றே...
நான் கொண்ட காதலுக்கு..
கட்டிடங்கள் நிகரில்லை..
எதிர்ப்புகளற்ற காதலில் இல்லை எதுவும்..
எதிர்ப்புகள் பல கடந்த காதல் காவியமாகி ததும்பும்..

அளவில்லா நேசத்தை, ஆழிக் குமிழ் போல் மறைக்காமல்...
உலகுக்கே தெரிய வைத்து
உள்ளத்திலே உயிர் கொடுப்பேன்...

கொள்ளையடித்த உன் மனதால்..
காதல் சிறையில் எனை
அடைத்தாலும்..
உன்னத தாஜ்மஹாலை..
உனக்காக நானும் எழுப்புவேன்..

Sanjana:
என்னுள் காதல் பிறக்க காரணமும் நீயே...

முகலாய சாம்ராஜ்ஜியத்தின் புதுமை நீ
பணக்கார காதலனின் பகட்டு பெருமையும் நீ
ஏழை காதலர்களுக்கு எட்டாத கனவும் நீ
இந்தியாவில் எழுந்த வெள்ளை மாளிகையும் நீ...

இருபதாயிரம் பேர்களின் உழைப்பின் வண்ணம் நீ
இறந்த காதலர்களின் கல்லறையும் நீ
அன்பின் ஆழம் சொல்லும் ஆச்சாரியம் நீ
காதல் மட்டும் இல்லை என்றால் வெறும் கல்லறை நீ...

உலகத்தில் உள்ள எல்லா ஆண்களுக்கும் கேள்விக்குறி நீ
தூரிகை எல்லாம் உளியாக உயர்ந்த உன்னத சிற்பம் நீ
அழகின் பிரமாண்டம் சொல்லும் அதிசயம் நீ
காதலர்களின் கேள்வி குறி நீ...

இருபத்தொரு ஆண்டின் கடின உழைப்பு நீ
இருபதாயிரம் தொழிலாளர்களின் கை காணிக்கையும் நீ
இருபத்தி எட்டு வகை பாறைகளின் முழுமையான சின்னம் நீ
யமுனை நதிக்கரையின் அரணும் நீ...

காலத்தை கடந்த காவியம் நீ
பச்சோந்தியும் தோற்றுப் போகும் வண்ணமும் நீ
நானுறு ஆண்டின் பழமை சின்னமும் நீ
அல்லாவின் தொன்னுற்றொன்பது  நாமத்தை பதித்தவனும் நீ...

இன்னும் விலகாத மர்மமும் நீ
முகல் சாம்ராஜ்ஜியத்தின் அஸ்தமனம் நீ
சாதி மதம் மொழி தேசம் காதல் சேர்ந்த கலவையும் நீ
புனிதமான காதலுக்கான அடையாளம் நீ....

ஷாஜஹான் மும்தாஜ் காதலை உணர வைத்ததும் நீ
உண்மை காதல் அழியாதென உணர்த்துவதும் நீ
காதலின் பெருமை பேசவைப்பதும் நீ
என்னுள் காதல் பிறக்க காரணமும் நீ...


NOTE:
என் கவிதையில் எனக்கும் காதல் பிறக்க காரணம் தாஜ்மஹால்,ஷாஜஹான்,மும்தாஜ் என்று சொல்லி  இருந்தேன். ஆனால் நிய வாழ்கையில் எனக்கு காதலில் நம்பிக்கை இல்லை. ;D இன்றைய காலகட்டத்தில் உண்மையான காதல் என்பது பார்ப்பது மிக குறைவு. கூடுதலான காதல் எதோ ஒரு எதிர்பார்ப்புடன் தான் இருக்குதே தவிர உண்மையான அன்பு இல்லை. என் வாழ்க்கையிலும் உண்மையான அன்பை எதிர்பார்த்து ஏமாந்து போனேன்...அதனால் தானோ எனக்கு காதலில் நம்பிக்கை இல்லை போல.

எனது நண்பர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள்.உங்களை உண்மையாக நேசிப்பவர்களை ஏமாத்தாதீர்கள். பிடிக்கவில்லை என்றால் விலகிடுங்கள்..ஏமாத்தாதீர்கள்...காயா படுத்தாதீர்கள்....

வேண்டுகோளுடன்
உங்கள் சஞ்சு

Vaanmugil:
காதலின் மகத்துவம்....

படை பலம், பணம் பலம்
கொண்ட மன்னனே,
போர் கொண்டு வெற்றி வாகை சூடி 
நாட்டை ஆளும் அரசனே....

அவளை கண்ட முதல் பார்வையிலே
மூழ்கி விட்டார் காதலிலே....
மனச் சேர்வில் மணமானது ,
மகிழ்வில் வாழ்க்கை அழகானது..

தீரா காதல் கொண்ட காதலியே
தீர்க்கத்தான் வந்ததே மரணம் என்ற கொடூரனே....
ரணமாய் தவித்தாரே...
ரணத்தில் அவள் நினைவாய்
கல்லறை ஒன்றை செதுக்க திட்டமிட்டாரே.....

இன்று, அதுவே காதலின் சின்னமே,
கவிதைக்கு மெய் சித்திரமே,
காதலியின் நினைவு கோட்டையே,
காதலரின் மகிழ்வுக்கு அருங்காட்சியமே....

உலக அதிசயமே,
உயிருக்கு உயிராய் உருவான ஓவியமே,
யமுனை கரையின் அழகே,
யாவரையும் ஈர்க்கும் காதல் கோட்டையே...

அளவில்லா காதலின் நினைவால்
ஆழ்மனதில் அவதரித்த கலை கட்டிடமே,
வடிவமைப்பில் வார்த்த சிறப்பு தோற்றமே,
தன் அழகால் வசியம் செய்யும்
ஷாஜகானின் தாஜ்மஹால் மண்டபமே....

இந்தியாவின் பெருமை கட்டிடமே...
காதலின் அன்பால் நிறைந்த மகத்துவமே,
கல்லறை ஆனாலும் கால காலத்திற்கும்
முடிவில்லா தொடரும், 
முகலாய மன்னரின் காதல் சரிதமே.....

(இது கல்லறையாய் இருந்தாலும் தன் காதலை வெளிப்படுத்த ஷாஜகான் மும்தாஜ் மேல இருந்த அன்பு ரொம்பவே ஆழமானது, அழகானது...
இறந்த பின்பும் உலகறிய விட்டு சென்றுள்ளார் தன் உண்மை காதலை.....)

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version