Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: 1 [2]
Post info No. of Likes
கவிதையும் கானமும்-026 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-026


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

June 12, 2023, 09:43:34 pm
1
Re: கவிதையும் கானமும்-026
காதல் மங்கை.. தன் மும்தாஜ்காக அவன் எழுதிய வரிகளிங்கே...

அந்தி சாயும் நேரம்..
அழகான ஆக்ரா நதியோரம்..
நித்தம் விழும் நின் நிழல் ஒன்றே..
நீங்காத என் நிஜ தரிசனம்...

மெய் நிகர் அழகே.. நீ என் மேல்..
மெல்ல விழும் மழையே..
பொய்யொன்று உரைக்கையிலே..
முகம் பொலிவிழக்க காண்கின்றேன்..

நினைவுக்குள் வருகின்றாய்..
நீங்காத ஏக்கம் தருகின்றாய்..
முகிலாடை அணிகின்றாய்..
முழுமதி முகம் மறைக்கின்றாய்..
காற்புள்ளியிட்டு உன்னை தொடர..
விழிகளாலே போரிட்டு எனை வெல்கின்றாய்...

வெண்புரவியின் மேலமர்ந்து..
வெண்ணிலாவை உனை தரிசிப்பேன்..
வெட்கப்படும் உன் முகத்தை..
வெண்மையாக வரைந்தெடுப்பேன்..

தூரிகையால் மடல் எழுதி..
மாதே உனை கவர்ந்தெடுப்பேன்..
பேரெழில், பெருஞ் சீற்றம்..
பேச்சினாலே சரி செய்வேன்..
உன்னிதழ் உதிர்க்கும்...
ஒருகோடி வார்த்தைகளால்..
உள்ளூர உருகிப் போவேன்..

பக்கம் நின்று பார்க்கையிலே..
பளிங்கு சிலை போலிருப்பாய்..
யுகயுகமாய் தொடருந்து வந்து..
யுத்தமிட துணிய வைப்பாய்..

கொண்ட கடன் காதல் ஒன்றே...
நான் கொண்ட காதலுக்கு..
கட்டிடங்கள் நிகரில்லை..
எதிர்ப்புகளற்ற காதலில் இல்லை எதுவும்..
எதிர்ப்புகள் பல கடந்த காதல் காவியமாகி ததும்பும்..

அளவில்லா நேசத்தை, ஆழிக் குமிழ் போல் மறைக்காமல்...
உலகுக்கே தெரிய வைத்து
உள்ளத்திலே உயிர் கொடுப்பேன்...

கொள்ளையடித்த உன் மனதால்..
காதல் சிறையில் எனை
அடைத்தாலும்..
உன்னத தாஜ்மஹாலை..
உனக்காக நானும் எழுப்புவேன்..

June 13, 2023, 01:49:59 pm
1
Re: கவிதையும் கானமும்-026 என்னுள் காதல் பிறக்க காரணமும் நீயே...

முகலாய சாம்ராஜ்ஜியத்தின் புதுமை நீ
பணக்கார காதலனின் பகட்டு பெருமையும் நீ
ஏழை காதலர்களுக்கு எட்டாத கனவும் நீ
இந்தியாவில் எழுந்த வெள்ளை மாளிகையும் நீ...

இருபதாயிரம் பேர்களின் உழைப்பின் வண்ணம் நீ
இறந்த காதலர்களின் கல்லறையும் நீ
அன்பின் ஆழம் சொல்லும் ஆச்சாரியம் நீ
காதல் மட்டும் இல்லை என்றால் வெறும் கல்லறை நீ...

உலகத்தில் உள்ள எல்லா ஆண்களுக்கும் கேள்விக்குறி நீ
தூரிகை எல்லாம் உளியாக உயர்ந்த உன்னத சிற்பம் நீ
அழகின் பிரமாண்டம் சொல்லும் அதிசயம் நீ
காதலர்களின் கேள்வி குறி நீ...

இருபத்தொரு ஆண்டின் கடின உழைப்பு நீ
இருபதாயிரம் தொழிலாளர்களின் கை காணிக்கையும் நீ
இருபத்தி எட்டு வகை பாறைகளின் முழுமையான சின்னம் நீ
யமுனை நதிக்கரையின் அரணும் நீ...

காலத்தை கடந்த காவியம் நீ
பச்சோந்தியும் தோற்றுப் போகும் வண்ணமும் நீ
நானுறு ஆண்டின் பழமை சின்னமும் நீ
அல்லாவின் தொன்னுற்றொன்பது  நாமத்தை பதித்தவனும் நீ...

இன்னும் விலகாத மர்மமும் நீ
முகல் சாம்ராஜ்ஜியத்தின் அஸ்தமனம் நீ
சாதி மதம் மொழி தேசம் காதல் சேர்ந்த கலவையும் நீ
புனிதமான காதலுக்கான அடையாளம் நீ....

ஷாஜஹான் மும்தாஜ் காதலை உணர வைத்ததும் நீ
உண்மை காதல் அழியாதென உணர்த்துவதும் நீ
காதலின் பெருமை பேசவைப்பதும் நீ
என்னுள் காதல் பிறக்க காரணமும் நீ...


NOTE:
என் கவிதையில் எனக்கும் காதல் பிறக்க காரணம் தாஜ்மஹால்,ஷாஜஹான்,மும்தாஜ் என்று சொல்லி  இருந்தேன். ஆனால் நிய வாழ்கையில் எனக்கு காதலில் நம்பிக்கை இல்லை. ;D இன்றைய காலகட்டத்தில் உண்மையான காதல் என்பது பார்ப்பது மிக குறைவு. கூடுதலான காதல் எதோ ஒரு எதிர்பார்ப்புடன் தான் இருக்குதே தவிர உண்மையான அன்பு இல்லை. என் வாழ்க்கையிலும் உண்மையான அன்பை எதிர்பார்த்து ஏமாந்து போனேன்...அதனால் தானோ எனக்கு காதலில் நம்பிக்கை இல்லை போல.

எனது நண்பர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள்.உங்களை உண்மையாக நேசிப்பவர்களை ஏமாத்தாதீர்கள். பிடிக்கவில்லை என்றால் விலகிடுங்கள்..ஏமாத்தாதீர்கள்...காயா படுத்தாதீர்கள்....

வேண்டுகோளுடன்
உங்கள் சஞ்சு

June 13, 2023, 11:32:50 pm
1
Re: கவிதையும் கானமும்-026 காதலின் மகத்துவம்....

படை பலம், பணம் பலம்
கொண்ட மன்னனே,
போர் கொண்டு வெற்றி வாகை சூடி 
நாட்டை ஆளும் அரசனே....

அவளை கண்ட முதல் பார்வையிலே
மூழ்கி விட்டார் காதலிலே....
மனச் சேர்வில் மணமானது ,
மகிழ்வில் வாழ்க்கை அழகானது..

தீரா காதல் கொண்ட காதலியே
தீர்க்கத்தான் வந்ததே மரணம் என்ற கொடூரனே....
ரணமாய் தவித்தாரே...
ரணத்தில் அவள் நினைவாய்
கல்லறை ஒன்றை செதுக்க திட்டமிட்டாரே.....

இன்று, அதுவே காதலின் சின்னமே,
கவிதைக்கு மெய் சித்திரமே,
காதலியின் நினைவு கோட்டையே,
காதலரின் மகிழ்வுக்கு அருங்காட்சியமே....

உலக அதிசயமே,
உயிருக்கு உயிராய் உருவான ஓவியமே,
யமுனை கரையின் அழகே,
யாவரையும் ஈர்க்கும் காதல் கோட்டையே...

அளவில்லா காதலின் நினைவால்
ஆழ்மனதில் அவதரித்த கலை கட்டிடமே,
வடிவமைப்பில் வார்த்த சிறப்பு தோற்றமே,
தன் அழகால் வசியம் செய்யும்
ஷாஜகானின் தாஜ்மஹால் மண்டபமே....

இந்தியாவின் பெருமை கட்டிடமே...
காதலின் அன்பால் நிறைந்த மகத்துவமே,
கல்லறை ஆனாலும் கால காலத்திற்கும்
முடிவில்லா தொடரும், 
முகலாய மன்னரின் காதல் சரிதமே.....

(இது கல்லறையாய் இருந்தாலும் தன் காதலை வெளிப்படுத்த ஷாஜகான் மும்தாஜ் மேல இருந்த அன்பு ரொம்பவே ஆழமானது, அழகானது...
இறந்த பின்பும் உலகறிய விட்டு சென்றுள்ளார் தன் உண்மை காதலை.....)

June 14, 2023, 02:01:43 pm
1
Re: கவிதையும் கானமும்-033 கற்பணை குடும்பம்


"அன்னையிடம் நீ  அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் "

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காதது

அன்னையின் பாசம் தந்தையின் நேசம்

பாசம் இன்று கலப்படமாகிப்போனது

பணம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான பாசம்

அவர்களுக்கு உபயோகம் இருக்கும் வரைதான் இருக்கும் அந்த கலப்படமான விசுவாசம்
 
இந்த விசுவாசம் பாசம் மறந்துவிடும் காலப்போக்கில்

நம்மிடம் ஒன்றும் இல்லையென்றால் புதைத்திடுவார் அவர்களின் காலுக்கு அடியில்

ஆனால் துளிகூட களங்கமில்லாத எதையும் எதிர் பாராத அன்பு

தாயின் அரவணைப்பில் தந்தையின் அக்கரையில் தான் உள்ளது

வெண்சங்கு சுட்டாலும் வெண்மைதரும் அதுபோல

அவர்களை நாம் உதாசீன படுத்தினாலும் ஒரு துளிகூட மாறாத அன்பு பெற்றோரின் அன்பு

அந்த அன்பு பசுவின் மடியில் இருந்து வரும் பாலை விட தூய்மையானது

நீல வானத்தின் எல்லையை விட பெரியது

எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதை  ஒரு நொடியில் போக்கிவிடும்

அன்னை மடியும் தந்தையின் அறிவுரையும்

தலை சாய்க்க மடியும் இல்லை அறியுரை கேட்க என்னக்கு பாக்கியமும் இல்லை

உங்கள் கை கைகோர்த்து நடக்கத்தான் ஆசை எனக்கு  அம்மா அப்பா

ஆனால் கடவுளுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை உங்களை அழைத்து சென்றுவிட்டான்

உங்களின் அன்பையும் அறியுரையும் கேட்க ....

உங்கள் இருவரோடும் கைகோர்த்து போக என்னக்கு ஆசை அம்மா என் அப்பா

அதனால் கற்பனையாக வரைத்தேன் சுவரில் ............. கற்பனையோடு வாழ்கிறேன் உங்களோடு

அப்பொழுதும் என்னையே பார்க்கிறாய் அம்மா ஐ லவ் யு மா



ப்ளஸ் உங்க அம்மா அப்பாவை கஷ்டப்படுத்தாதீங்க இல்லாத போதுதான் அவங்க கஷ்டம் தெரியும் ...




நீலவானம்

November 30, 2023, 10:46:26 am
1
Re: கவிதையும் கானமும்-033 தனிமையில் தவிக்கிறேன்.!

நான் பிறக்க பத்து மாதங்கள் உங்களை தவிக்க வைத்ததாலோ இன்று நான் உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கி தனிமையில் தவிக்கிறேன்..!
என்னை செல்லமாக தொட்டு தூக்கி உன் நெஞ்சோடு அனைத்து என் துயர் துடைக்க  தாயின் கைவிரல்கள் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..!
நான் துவலும் போதெல்லாம் என் தலை கோத என் தோலை தட்டி கொடுக்க தந்தையின் விரல்கள் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..!
என் பசியரிந்து பாலூட்ட தாயின் மார்பும்    நான் துயில் கொள்ள தந்தையின் மார்பும் இன்றி தனிமையில் தவிக்கிறேன்..!
விக்கல் வருகையில் மற்றவர்கள் யாரோ நினைக்கிறார்கள் என்று கூறுகையில் என் வெறுமையை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
என் பிறந்தநாளை  கொண்டாடவில்லை என்றாலும் என் பிறந்தநாள் எதுவென்றே அறிவாமல் தனிமையில் தவிக்கிறேன்..!
உங்கள் வரவை நோக்கி தனிமையில் தவிக்கும் எனக்கு நித்திரையில் வரும் சொப்பனத்திலாவது வருவீர்களா என்று எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
என்னை விட்டு தொலை தூரம் சென்ற தாய் தந்தையே உங்களை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
என் மனதின் வேதனைகளும் குறையவில்லை என் கண்ணீரும் நிற்கவில்லை என் மன கவலை போக்க நீங்கள் இல்லாமல் தனிமையில் தவிக்கிறேன்..!
செப்பாய் இருக்க வேண்டிய என் தேடல்கள் மட்டும் தங்கமாய் ஜொலிப்பதை எண்ணி தனிமையில் தவிக்கிறேன்..!
போகுமிடம் தங்குமிடம் அனைத்திலும் தனிமையிலே தவிக்கிறேன்..!

என் தனிமையை மறைக்க வரைந்தேன் ஒரு ஓவியம் அதில் என் தாய் என்னை பார்த்து புன்னகைப்பதில் உணர்ந்தேன் அவள் அன்பின் காவியம்..!


என்றும் உங்கள் நட்💐க்களுடன்

November 30, 2023, 01:58:38 pm
1
Re: கவிதையும் கானமும்-033 தாயை பிரிந்த கன்றானேன் !
தவித்து தனியாய் நின்றேனே !
என் தலையைக் கோதும் என் தாயின் விரல்கள் எங்கே ?
என் தனிமையை துரத்தும்
என் தந்தை விரல்கள் எங்கே ?

தரணி ஆளப் பிறந்த மகன் நான் தானென்றே !
தவறாது என்னை தலையில் வைத்தாடும்
தந்தையே !
தனியாய் நின்று தவிக்கும் உங்கள்
தலைச்சன் பிள்ளை
நான் தானே !

தறிகெட்டு ஓடியாடும் எனக்காய்
கறி கூட்டு பல சமைத்து
நறி வருது கத சொல்லி
நாலு வாய் சோறு ஊட்டும்
நல்ல தாய் நீதானே !

தேர் பாக்க போகையில
தேம்பி நான் அழுகையில
தேயாத நிலவு நான்தானுன்னு
என்னைத் தேற்றும் தெய்வங்களே !

உங்கள் முன்பிருக்கும் என்னைக்
கண்ணிருந்தும் நீங்கள் காணலையே !
உங்களிடம் வந்து வாய் பேசும் என்னை
நீங்கள் வாய் திறந்து
கூப்பிடலையே !
ஓயாமல் அழுகும் என்னை கண் சாயமல்
காத்து நின்ற காவல் தெய்வங்களே !
அடுப்பு கரியில் நான் வரைந்த
அழகு காவியம் இதுவென்று தெரிந்தும்
உங்கள் கரம் பற்றி
ஊமையாய் நிக்கிறேனே !
இங்கே ஊமையாய் நிக்கிறேனே !

November 30, 2023, 07:35:45 pm
1
Re: கவிதையும் கானமும்-033 இது ஓவியமா இல்லை
மொழியின்றி பேசும் காவியமா?
ஒன்றும் புரியவில்லை?
சுவற்றில் கிறுக்கிய கிறுக்கல்களை
உயிரின் பந்தமாய் நினைத்து
 வியக்கிறாய்!
அந்த நிலையை கடந்து
செல்ல
தெரியமல் தவிக்கிறாய்!
ஏனோ ஒரு சிலருக்கு மட்டும் இப்படி
அமைகிறது  வாழ்க்கை!
அதனால் அவர்கள் மனம் கடந்த
செல்ல முடியாமல் தவிக்கிறது உலகை!

சுவற்றில் அதை தீட்டியது ஒரு சிறுவன்
அல்லது சிறுமியாக கூட இருக்கலாம்!
ஆனால்,
நீயோ?
அதை மனதில் வேதனை தூண்டும்
கிருமியாக நினைத்து தவிக்கிறாய்!
ஒரு ஓவியமே!
ஒரு சிறுவனுக்கு  ஏக்கம், தவிப்பு,
சோகம் மற்றும் தேடல் தருமானால்,
இந்த உலகம் அவனுக்கு என்ன என்ன
தருமோ!
இனியாவது,
நாம் அனைவரும் ஒற்றுமையாய்
இணைந்து வாழ்வோம்!
உலகில் யாரும் தனித்த மனிதன் இல்லை
என்று
குரல் கொடுப்போம்!,
மனிதநேயத்தோடு!.

December 01, 2023, 06:59:40 pm
1
Re: கவிதையும் கானமும்-033   சில நேரம் கற்பனை கூட காவியமாகும் .....                                       
இந்த ஓவியமே, காவியமும் பாடும்!         
இது யார் தீட்டிய ஓவியமோ?   
உன் மனதில் என்னும் எண்ணங்களை  பூட்டிடுமோ?

 உன் மனதை உலகிற்கே காட்டிடுமோ  காட்டிடுமோ ? ..
 அதை காணும் நபர்களின்  உள்ளங்களை வாட்டிடுமோ?                 

அந்த ஓவியதுடன் நீ செய்வது விந்தையோ ?....                                 
உனக்கு தாய் தந்தை இல்லையோ?
விடியும் பொழுதெல்லாம் உனக்கு பசியின்  தொல்லையோ?
நீ காண்கின்ற பொழுதெல்லாம் வறுமையின் எல்லையோ?
உன் வருத்தத்திற்கு எல்லாம் முடிவே இல்லையோ?

தாய் தந்தை இழந்த பிஞ்சு குழந்தை
உன்  முதல் தனிமை.

நீ யார் என்பதை உணரவும்
உலகத்துக்கு உணர்த்தவும்
உதவியாய் இருக்கும் இந்த முதல் தனிமை.

தாய் தந்தை இழப்பால் தளராதே
இவ்வுலகை வெல்லும் வழியை தேடு.

உன் ஒவ்வொரு நற்செயலிலும்
உன் பெற்றோர் உடன் இருப்பதாய் எண்ணிக்கொள்
அந்த மனவலிமையால் இந்த உலகினை வெல்

நீ வெற்றிகொள்ள இந்த உலகமே இருக்கிறது
 என்ற எண்ணம் கொள்
தலை மகனே கலங்காதே
தனிமை கண்டு வருந்தாதே!!

December 03, 2023, 12:24:39 pm
1