Advanced Search

Author Topic: திருக்குறள்  (Read 61075 times)

October 18, 2022, 10:52:52 pm
Reply #105

Sanjana

Re: திருக்குறள்
« Reply #105 on: October 18, 2022, 10:52:52 pm »
NAAN INI INKE VARALAINKO......EPO VANTHALUM ANS SOLIDURANAKLE.....HIHIHI :-[ 8)

(am not serious.....just kidding)

October 19, 2022, 01:07:20 am
Reply #106

RiJiA

Re: திருக்குறள்
« Reply #106 on: October 19, 2022, 01:07:20 am »
26வது கேள்வி:

திருக்குறள் பகுதியில்  அதிகாரம் 2-ல் உள்ள   11 ,12 ,13 அதில் எதோ  ஒரு குறளில் உள்ள  ஏதோ ஒரு செல்லுக்கு  உணவு , நீர் என்று பொருள்படும்.அது  என்ன சொல்  எந்த  குறள்?
« Last Edit: October 19, 2022, 12:49:41 pm by RiJiA »

October 19, 2022, 06:57:27 pm
Reply #107

Arjun

Re: திருக்குறள்
« Reply #107 on: October 19, 2022, 06:57:27 pm »
நீங்கள் ஒரு சொல் என்று குறிப்பிட்டு இருப்பதால் 11  வது  திருக்குறளை எடுத்து கொள்ளலாம்.

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

அமிழ்தம் என்ற சொல்லுக்கு சாவா மருந்து  என்றும் பொருள் கொள்ளலாம். மனிதன் உயிர் வாழ நீர் மற்றும் உணவு அவசியம். இங்கு கேள்வி ஒரு சொல் என்று இருப்பதால் இந்த திருக்குறள் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஏற்ற பதிலாக இருக்கலாம்.



உணவு மற்றும் நீர் இந்த இரண்டிற்கும் மழை அவசியம். ஆதலால் இங்கு மழையை அமிழ்தம் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

நன்றி (Credit to) : தேவநேய பாவாணர் உரை

குறள் 13: இந்த திருக்குறளும் உணவு மற்றும் நீர் குறித்து பேசுகிறது.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி

« Last Edit: October 19, 2022, 06:59:03 pm by Arjun »

October 20, 2022, 11:30:09 am
Reply #108

RiJiA

Re: திருக்குறள்
« Reply #108 on: October 20, 2022, 11:30:09 am »
சரியான  பதில்  Arjun பாராடுக்கள் 👏 👏


விடை :

1)சொல்: தானமிழ்தம்

குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று

October 20, 2022, 07:53:15 pm
Reply #109

RiJiA

Re: திருக்குறள்
« Reply #109 on: October 20, 2022, 07:53:15 pm »
closest shell fuel station

27வது கேள்வி:திருக்குறள் பகுதியில் அதிகாரம் 2-ல் இந்த  புகைப்படம்  எந்த  குறளுக்கு பொருந்தும்?

October 20, 2022, 08:22:02 pm
Reply #110

Sanjana

Re: திருக்குறள்
« Reply #110 on: October 20, 2022, 08:22:02 pm »
பதில்:

குறள் 16: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது


மு.வ விளக்கம்: வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

சாலமன் பாப்பையா விளக்கம்: மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

கலைஞர் விளக்கம்: விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

October 21, 2022, 02:57:00 pm
Reply #111

RiJiA

Re: திருக்குறள்
« Reply #111 on: October 21, 2022, 02:57:00 pm »
சரியான  பதில்  SanJaNa  siss  பாராட்டு 👏👏


⭐விடை :குறள் 16: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது.

October 22, 2022, 09:49:33 am
Reply #112

RiJiA

Re: திருக்குறள்
« Reply #112 on: October 22, 2022, 09:49:33 am »
28வது கேள்வி:

திருக்குறள் பகுதியில்  வரும்  அதிகாரம் 2-ல்  குறள் 16,17,18 -ல் இவற்றில் வரும் குறளில்  ஒரு  சொல்லுக்கு பறவைகளுக்கு எ‌ன்று  பொருள்...அது  என்ன  சொல் மற்றும்  திருக்குறளையும் குறிப்பிடவும்..
« Last Edit: October 22, 2022, 09:51:12 am by RiJiA »

October 22, 2022, 12:13:25 pm
Reply #113

Sanjana

Re: திருக்குறள்
« Reply #113 on: October 22, 2022, 12:13:25 pm »
பதில்:   வானோர்  (am not sure, because  வானோர் means தேவர்கள்)

குறள் 18: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மு.வ விளக்கம் மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது
சாலமன் பாப்பையா விளக்கம் மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது
கலைஞர் விளக்கம் வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

October 24, 2022, 09:55:04 am
Reply #114

RiJiA

Re: திருக்குறள்
« Reply #114 on: October 24, 2022, 09:55:04 am »

SanJaNa  siss வாழ்த்துக்கள் உங்கள்  பதில்  சரிதான்...வானோர்க்காக என்று  Google  search le  பறவைகளுக்காக  என்று  பொருள்  வந்தது... அதனால் தான் கேள்வி அப்படி கேட்டேன்.... உங்கள்  பதிலும்  சரியான  பதில்தான்...வாழ்துக்கள் 👏👏


விடை:

சொல்:வானோர்

குறள்:குறள் 18: சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
« Last Edit: October 24, 2022, 06:35:53 pm by RiJiA »

October 28, 2022, 08:35:54 am
Reply #115

RiJiA

Re: திருக்குறள்
« Reply #115 on: October 28, 2022, 08:35:54 am »
29வது கேள்வி:

கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்.
இது ஒரு நவீன கால கவிஞரின் பாடல் வரிகள். தமிழில் இது போல 1000 பாடல்கள் இப்போது இருக்கிறது.

ஆனால், இப்போது இருக்கும் கவிஞர்களுக்கு எல்லாம் முன்னோடியான நம்முடைய புலவர் திருவள்ளுவர் இதே பொருள் படும்படி பல 100 ஆண்டுகளுக்கு முன்னே திருக்குறளை எழுதியிருக்கிறார். அது என்ன திருக்குறள்?
« Last Edit: October 28, 2022, 08:43:55 am by RiJiA »

October 28, 2022, 02:49:03 pm
Reply #116

Sanjana

Re: திருக்குறள்
« Reply #116 on: October 28, 2022, 02:49:03 pm »
பதில்:   குறள் 1100

கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல.


மு.வரதராசன் விளக்கம்:
கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.


சாலமன் பாப்பையா விளக்கம்:
காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.


சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
கண்ணோடு கண் இணையாக பார்த்து உறவாடினால் வாய்ச்சொற்கள் பயன் அற்றுப் போகின்றன.


English Couplet 1100:
When eye to answering eye reveals the tale of love,
All words that lips can say must useless prove.


Couplet Explanation:
The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers).

October 29, 2022, 09:41:01 am
Reply #117

RiJiA

Re: திருக்குறள்
« Reply #117 on: October 29, 2022, 09:41:01 am »
ச‌ரியான  பதில் sanjana siss...SUPERB👏👏
வாழ்துக்கள் siss💐💐


⭐விடை:பதில்:   குறள் 1100

கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல.

October 31, 2022, 10:25:08 am
Reply #118

RiJiA

Re: திருக்குறள்
« Reply #118 on: October 31, 2022, 10:25:08 am »


30வது கேள்வி:

இந்த  புகைப்படத்திற்கு தொடர்புடைய   திருக்குறள் எது? மற்றும் இந்த ஓவியம்  வரைந்தவர்  யார்? 🙂

October 31, 2022, 11:03:42 am
Reply #119

Arjun

Re: திருக்குறள்
« Reply #119 on: October 31, 2022, 11:03:42 am »
கேள்வி 1 :

அதிகாரம் 2 – வான்சிறப்பு
குறள் 20:

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு

மு.வ விளக்கம்

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்

கேள்வி 2 :

திருக்குறள் ஓவியம் : ஓவிய ஆசிரியர் செ. நடராஜன், நல்லூர், விஜயாபுரம்