Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 2 [3] 4 5 ... 7
Post info No. of Likes
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#026 வணக்கம் SM Team......

நான் கேட்க விரும்பும் பாடல்,  எனக்கு பிடித்த பாடல்,

திரைப்படம்                   : மதில் மேல் காதல்
பாடல்                             : நெஞ்சோரமா நீ என்ன செய்யிற
இசையமைப்பாளர்      : நிவாஸ் கே. பிரசன்னா
பாடியவர்கள்                 : பிரதீப் குமார் மற்றும் மால்வி சுந்தரேசன்


எனக்கு பிடித்த வரிகள் :

உன்னோடு நான் பேச பேச
பேசும் நேரம் ஓடுதே நிற்காமல் வேகமா......

என்னவோ செய்கிறா நெஞ்சையே கொய்கிறா
கூடவே என்னையும் கூட்டி போகுறா
கூர்மையா பார்த்துதான் கூறு போடுற.......


இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல், இந்த பாடலை GTC
நண்பர்கள் அனைவருக்கும் dedicate pandren......எல்லாரும் கேட்டு enjoy பண்ணுங்க

இந்த பாடலை சங்கீத மேகம் நிகழ்ச்சியில் கேட்க, எனக்கு இந்த தருணத்தை
கொடுத்த GTC FM க்கு மிக்க நன்றி.....சங்கீத மேகம் team -க்கும் மிக்க நன்றி....

May 01, 2023, 12:05:34 am
1
Re: Happy Birthday ISHAN  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இஷான் 💐🥰❤🎂🍫🎆🎇
May 15, 2023, 10:39:46 am
2
Re: Happy Birthday RIYANA QUEEN Happy Birthday RIYANA QUEEN SiS......


May 27, 2023, 01:20:46 am
1
Re: கவிதையும் கானமும்-025 முன்னோரின் கூற்றுபடி....
தோல்வியே வெற்றிக்கு முதல் படி....

தோல்வி என்பது வாழ்கையின் நியதி,
வெற்றி என்பது தோல்வியின் இறுதி,

தோல்வி இல்லையேல்
வாழ்வில் சுவாரஸ்யம் ஏதும் இல்லை...

தோல்வியை கற்றுக்கொண்டு
தோல்வியின் உந்துதலில்
பெற்றுக்கொள்வது வெற்றியே......

தோல்வியை தழுவ
பொறுமை அவசியம்,
தோல்வி என்ற போதிலும்,
துவளாத மனம் அவசியம்......

விடா முயற்சியே
வெற்றியின் ஓர் அங்கம்....
வீழ்ந்தாலும் தொடர்வது
மன உறுதியின் ஓர் அங்கமே....

வெற்றி இலக்கை அடைய
தோல்வி என்ற பாதையையும்,
தன்னம்பிக்கையும், மன வலிமையையும்
வெற்றியின் ஊக்கமே.....

வரலாற்று கதைகளில்
கஜினியின் படையெடுப்பு
17 முறையும் தோல்வியாம்....
விடாமுயற்சியின் தூண்டுதலால்
18 ஆம் முறை வெற்றியாம்....
என்று வரலாறு கூறுகிறது....

வீழ்பவன் எழ தன்னம்பிக்கை என்ற
கையை நீட்ட வேண்டும்
வெற்றி என்ற பாதைக்கு சாமரம்
வீச வேண்டும்....

தோல்வியை தோற்கடிப்பவன்
வெற்றி வீரன் ஆகிறான்.....

தோல்வியின் முடிவுரை
வாய்ப்புறுகையின் (வெற்றியின்) முதல் உரை.....

May 28, 2023, 11:00:23 pm
2
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... அவள் பார்வையில்......



உன் விழிக்கொண்டு வலை வீசுகிறாயே
உன் விழி வலையில்
என் மனசு சிக்கித் தவிக்குதுடி மானே....

நீ புருவம் சுழித்து பார்க்கையில்
உன் புருவ சுழிப்பில்
என் கர்வம் யாவும் காணாமல் போகிறதடி மானே...

நேர் வகிடெடுத்த
நெற்றியின் புருவ நடுவில்,
சிறு புள்ளியைப்போல்
வட்ட நிலவாய் உன் பொட்டழகில்
நான் மெய்மறந்து போனேன்டி மானே....

வாக்கியம் கொண்டு
வர்ணிக்க வார்த்தைகள் இல்லையடி மானே....

என்னை உன் பார்வை வசியம் செய்து
என்னை உன் வசமாக்கி கொல்கிறதடி மானே...

ஆனாலும், ஒற்றை வரியில் கூறுகிறேனடி
நீ தேவ தேவனின் அரசவையில் இருக்கும்
அழகு தேவதையடி பெண்ணே....

May 28, 2023, 11:32:50 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... அவனோடு அழகிய தருணம்.....



அழகான நேரம் அவனோடு பயணித்த தருணம்...
என்னவனின் கை இடுக்குகளில்
என் கை கோர்த்து...

ஓர் நடை பயணம் நானும் அவனும்,
எத்தனை ஜென்ம போராட்டமோ,
அவன் அருகில் நான் இருக்க,
வரமாய் கிடைத்த நாள்.....

வாழ்த்து கூற வான் தேவர்கள் வந்திருந்தால்
வரம் தந்த கருணை கடலே
உன் பாதம் தொட்டு வணங்குகிறேன்
வாழ்க்கைதுணை என,
என்னவனை கண்டதில்
என் ஆயுள் வாழ்வை முழுவதையும் சமர்ப்பிக்கிறேன்.....
என்று சரணடைந்திருப்பேன்....

May 28, 2023, 11:45:27 pm
1
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... ஓர் பெண்ணின் உறுக்கம்

எங்கிருந்தோ வந்தான்,
எண்ணமெல்லாம் நீயே என்றான்,
என் உறவாய் நீ இரு என்றான்,
பேச்செல்லாம் தேன் என்றான்,
தித்திப்பாய் நீ என்றான்,
எப்பவும் நான் உனக்குன்னு சொன்னான்,
என் உசுரே நீதான் என்றான்,
சொன்னதெல்லாம் உண்மையின்னு நான் இருக்க
அப்போ உருகி போன என் உசுரு
இப்போ ஊசலிலே தள்ளாடுது
சொந்தம் எல்லாம் ஒதுக்கி வச்சேன்
சொந்தமா நீ மட்டுமே நான் இருந்தேன்
இப்போ ஒத்தையில விட்டுபுட்டு,
கண்ணீருல மிதக்கவிட்டு,
கண்ணாலம்னு மடல காட்டிபுட்டு,
கடைசியில என் உசுரையும் கொன்னுபுட்டு போனானே......




June 09, 2023, 08:02:11 pm
2
Re: Happy First Anniversary GTC FORUM 2.0 HAPPY First Anniversary TO GTC FORUM
June 11, 2023, 11:08:43 pm
1
Re: கவிதையும் கானமும்-026 காதலின் மகத்துவம்....

படை பலம், பணம் பலம்
கொண்ட மன்னனே,
போர் கொண்டு வெற்றி வாகை சூடி 
நாட்டை ஆளும் அரசனே....

அவளை கண்ட முதல் பார்வையிலே
மூழ்கி விட்டார் காதலிலே....
மனச் சேர்வில் மணமானது ,
மகிழ்வில் வாழ்க்கை அழகானது..

தீரா காதல் கொண்ட காதலியே
தீர்க்கத்தான் வந்ததே மரணம் என்ற கொடூரனே....
ரணமாய் தவித்தாரே...
ரணத்தில் அவள் நினைவாய்
கல்லறை ஒன்றை செதுக்க திட்டமிட்டாரே.....

இன்று, அதுவே காதலின் சின்னமே,
கவிதைக்கு மெய் சித்திரமே,
காதலியின் நினைவு கோட்டையே,
காதலரின் மகிழ்வுக்கு அருங்காட்சியமே....

உலக அதிசயமே,
உயிருக்கு உயிராய் உருவான ஓவியமே,
யமுனை கரையின் அழகே,
யாவரையும் ஈர்க்கும் காதல் கோட்டையே...

அளவில்லா காதலின் நினைவால்
ஆழ்மனதில் அவதரித்த கலை கட்டிடமே,
வடிவமைப்பில் வார்த்த சிறப்பு தோற்றமே,
தன் அழகால் வசியம் செய்யும்
ஷாஜகானின் தாஜ்மஹால் மண்டபமே....

இந்தியாவின் பெருமை கட்டிடமே...
காதலின் அன்பால் நிறைந்த மகத்துவமே,
கல்லறை ஆனாலும் கால காலத்திற்கும்
முடிவில்லா தொடரும், 
முகலாய மன்னரின் காதல் சரிதமே.....

(இது கல்லறையாய் இருந்தாலும் தன் காதலை வெளிப்படுத்த ஷாஜகான் மும்தாஜ் மேல இருந்த அன்பு ரொம்பவே ஆழமானது, அழகானது...
இறந்த பின்பும் உலகறிய விட்டு சென்றுள்ளார் தன் உண்மை காதலை.....)

June 14, 2023, 02:01:43 pm
5
Re: வான்முகிலின் கவிதை சுவடுகள்.... நினைக்காத நேரமில்லை.......

நினைக்காத நேரமில்லை,
உன் நினைவுகள்
எனக்குள் என்றும் பாரமில்லை,

பார்க்காத தூரமிருந்தும்
பழகிய நாட்கள் என்னுள்
மிதந்து தளும்புகிறது,

கதைக்காத நேரமெல்லாம்
என் கை பேசியும்
ஓய்வில் ரணமாய் எண்ணுகிறது,

உறங்காத நேரமெல்லாம்
கனவாக உன் வரவை
தினமும் ஏங்குகிறது,

அழுகின்ற நேரமெல்லாம்
உன் தோள் ஒன்றை,
ஆறுதலாய் தேடுகிறது

எப்போதும்
உன் பார்வை என்மீது
என்று நானறிவேன்,

ஆனால் நானோ,
என்றும்,
இந்த கிறுக்களில்
உன்னை தேடுவேன்.....
இப்படிக்கு உன்னை மறவாதவள்......

June 18, 2023, 12:02:09 am
2