Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: கவிதையும் கானமும்-043 நான் நானாய் வாழ்ந்த நாட்கள் …..

கைபேசியும் , காணொளியும் என்னை களவாடி…
எல்லாம் இருந்தும் நான் ஒரு வெற்றிடம்... ….
ஏல்லோரும் இருக்க நான் மட்டும் தனிமையில்...

எனோ ..இன்று traffic  நெரிசல் இல்லை …
auto  பஞ்சு  பொதிகளாய்   குழந்தைகள் காணவில்லை ..
பள்ளி சிறை சாலைகள் மூடி கிடந்தன.…
ஓஒ...கோடை விடுமுறை….

என் எண்ணம் எனும் சிறகுகள் பறந்தன …என்
பள்ளி என்ற ஆனந்த சரணாலயத்திற்கு ….

sunscreen  இல்லாத  முகங்கள்... 
குடை விரித்து வெயிலுக்கு கருப்புகொடி காட்டியதில்லை …
வியர்வை அழுக்கு அருவருப்பாய் வெறுத்ததில்லை  …

ஆலமரங்கள் பள்ளிக்கு கூரை..
குருவிகளும் காக்கைகளும் எங்களோடு தமிழ் படித்தன ..
கழுத்தில் பட்டை இல்லாத பைரவர்கள் ….
உலக நாடுகள் போட்டி போடும் விண்வெளியில்
எங்க காத்தடியும் ….ஒரு ராக்கெட்….

காத்தாடி …செய்வதும்
ராக்கெட் இன்ஜினியரிங் தான் …

அளவுகளும் கோணங்களும் வளைவுகளும்
சரியாய் அமையாவிட்டால் மண் நோக்கி விழும்
ராக்கெட்டை போல் …
காத்தடியும் சரியும்...

காற்றின் வேகம் , மாஞ்சா நூலும்….
நேர்த்தியாய் அமைய …
கழுகாய் உயர பறக்கும் காத்தாடி ……

Harry Potter ,  PUBG … தெரியாத  நாங்கள் …என்றும்
BOSS BABIES…..

திடீரென்று ஒலித்த கைபேசி …

நிகழ் காலத்திற்கு வந்த ………. என் மனதில்

நிதர்சனமான நிற்கும் …

நான் நானாக வாழ்ந்த நாட்கள்.……





May 30, 2024, 01:32:23 pm
2