Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Vaanmugil

Pages: 1 2 [3] 4 5 ... 9
31
79வது கேள்வி:




முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.....

32
GUESS THE MOVIE NAME:



கன்னத்தில் முத்தமிட்டாள்

33
பிரியன் என்பவரின் கவிதை :

தாய் பாசம்

பட்டு சட்ட போட்டுக்கிட்டு
துட்டு கொஞ்சம் வாங்கிகிட்டு
சிட்டு போல பொம்பளைய
கட்டிக்கிட்டு வந்தானே!

பெத்தமனம் படபடக்க
வளத்தமனம் துடிதுடிக்க
கல்யாணம் கட்டி வந்து
கண்கலங்க வச்சானே!

என்னடான்னு கேட்டாக்கா
"நடந்தது நடந்திருச்சு
நடக்குறத பாரு"ன்னு
நாசூக்கா சொன்னானே!

நாவச்ச பூச்செடிதான்
நாளபின்ன பூக்குமின்னு
கண்ணுறக்கம் கேட்டு போயி
காத்துதான் கெடந்தேனே!

நேத்து வந்த புயல் காத்து
பூச்செடிய தின்னுபுட்டு
எம்முன்னே ஏப்பம்விட்டு
போகுதறக் கண்டேனே!

பொண்டாட்டி பேச்சையே
பொன்னு போல நினைச்சு
சொத்தெல்லாம் எழுதி வாங்கி
சோகத்துல விட்டானே

ஏ ஆத்தா ஏ ஆத்தான்னு
தலைமேல வச்ச மகன்
போ ஆத்தா போ ஆத்தான்னு
சொல்லாம சொன்னானே

ரெண்டு மூன பெத்திருந்தா
வண்டுபோல வாழ்ந்திருப்பேன்
சாகபோற காலத்திலாவது
சந்தோசமா இருந்திருப்பேன்!

பொத்திவச்ச பத்திரமா
ஒத்தமகன பெத்ததால
போக்கிடமே இல்லாம
புகழுகேட்டு நிக்கிறேனே!

மத்தியான நேரத்துல
காலக்கஞ்சி கேட்டதுக்கு
எப்பவுமே சோறான்னு
எடுத்தெறிஞ்சு சொன்னானே!

பத்து முழம் மல்லி வாங்கி
பக்குவமா வச்சுவிட்டு
பக்கத்துல வாடின்னு
பொஞ்சாதிய கொஞ்சினானே!

பட்டணப் பொடி வாங்க
பைசான்னு கேட்டாக்கா
வெட்டி செலவு எதுக்குன்னு
வெறுங்கைய விரிச்சானே!

அவளோட பேச்ச கேட்டு
உறவெல்லாம் அத்துக்கிட்டு
ஆத்தான்னு பாக்காம
அனாதிபோல வச்சானே!

நடக்கவும் தெம்பில்ல
பார்க்கவும் கண்ணில்ல
தலையில மயிரில்ல
ஒடம்புல முழுசா உயிரில்லா

அரளிகொட்ட அரச்சு வச்சு
கஞ்சிகூட கலந்து வச்சு
வம்படியா சாகவக்கல
வக்கணையான எம்புள்ள!

காசு கொஞ்சம் செலவழிச்சு
ஆசிரமம் அனுப்பிவிட்ட
எம்புள்ள ராசாதான்!
நாவளத்த ரோசாதான்!



34
General Discussion / Re: BLACK & WHITE
« on: August 07, 2023, 02:24:35 pm »
VaanMugiL  siss Drawing 💐💐👏👏




Sis tnq ,🥰🥰💞

35
இது என்னோட 100வது பதிவு....


எனக்குள் உன் காதல்....

மனதிலே பூகம்பமா?
மங்கையின் மனம் பேரழிவிலா?

என்னவனே!!
என்னில் நுழைந்தாயே...
எனக்குள் கலந்தாயே....
எனது உயிரிலும்,
எனது உதிரத்திலும்,
எனக்குள் நீ ஊடுருவிகிறாயே....

உன் நினைவு எமக்கு சுகமா? இல்லை சுமையா?
இம்சை என்பதா? இல்லை இன்பம் என்பதா?
ரணமா ? இல்லை ரசிக்கின்றேனா?
புரியவில்லையே,
புதிராய் இந்த ஈர்ப்பு
என்னை கொன்று வதைக்கிறதே....

என்னவனே உன் நினைவுகள்,
எனக்குள் ஈட்டி போல் எய்துகிறதே.....
உன் பார்வை ஈர்ப்பிலே காதலை
உளி கொண்டு செதுக்குகிறதே...

என்னவனே,
எனக்குள் நுழைந்த காதல்
உனக்குள்ளும் வந்ததா?
உன் காதலை மொழிவாயா?
இல்லை மௌனத்திலே கடப்பாயா?
இல்லை என்னை காத்திருப்பிலும், ஏக்கத்திலும்,
என்னை தவிப்பில் விடுவாயா?
சொல் மனமே
உன் சொல் வரும் வரை
என் உயிர் ரணமே....


36
மழையும்,  மழலை பருவமும்....

வெண்மேகம் திரண்டு கார்மேகம் சூழ,
கண் கவரும் விண்ணவனே...

விண்ணின் அதிசயமாய்
மண்ணை முத்தமிட வந்த முத்து மழை தாரகையே...

சொட்டும் மழையே !!
சுகமாய் தூறல் கொட்டும் மழையே !!

ஜில் ஜில் மழையே
சில்லென்ற தூறலில்
சிலிர்க்க வைக்கும் மழையே !!

மழை சொட்டும் வேளையில்
மழைநீர் தேக்கத்தில் ஓசை எழுப்பும் மழையே !!

சிறு மழலை பருவத்தில்
தோழமையோடு குதுகலமாய்
நடனமிட தூண்டும் மழையே !!

மழையில், மழலையின்
இளநகை கண்டு மகிழ்விக்கும் மழையே !!

மழையில், சிறு மழலையின் புன்னகையில்,
மத்தளமாய் முழங்கும் இடியோசை
அதிர்ந்து விலகும் இடியே !!

மழலையின் பேரானந்தத்தில்,
மின்னல் கீற்றில் ஒளி எழுப்பி
உற்சாகம் ஊட்டும் மின்னல் மழையே !!

மழலையின் மகிழ்ச்சியில்,
தன் அழகின் வரையறை கண்டு
ஒளிந்து கொள்ளும் வண்ண அதிசய வானவில்லே !!

மழையில், மழலையின் மகிழ்விற்கு
ஈடு இணை ஏது,
இதுவும் உலகில் ஓர் புதுமை அற்புதமே....!!


37
78வது கேள்வி

இது  எந்த  குறளின் விளக்கம்?


Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

38
GUESS THE MOVIE  NAME:



பண்ணையாரும் பத்மினியும்

39
வணக்கம் அனைவருக்கும்.....

எல்லாரும் எப்படி இருக்கீங்க  FRIENDS ,

என்னடா சம்பந்தமே இல்லாம இங்க வந்து கேட்டுட்டு இருக்கேன் நினைக்குறைங்களா.... ஒன்னும் இல்ல FRIENDS புதுசா நாமளும் நம்ம FORUM ல சில கருத்துகளையும், அவரவர் தரப்பு வாதங்களையும்,
கொஞ்சம் பதிவிடுவோம் FRIENDS.

குறிப்பாக இங்கே பதிவிடும் பதிவுகள் அனைத்தும் யார் மனதையும் புண்படுத்தாமல் நகைசுவையாக மட்டும் கருத்தில் கொண்டு பதிவிடுங்க FRIENDS.


வாங்க FRIENDS வாங்க கலந்துரையாடுவோம்......

முதலாவது தலைப்பாக :

காதல் திருமணம் சிறந்ததா? இல்லை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் சிறந்ததா?


நண்பர்களே உங்களது கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன......பதிவிடுங்கள் நகைச்சுவையாகவும், நட்பாகவும் உரையாடுவும்.....

40
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு..

Vaan sis neenga ketta qn ku indha kural crcta.. patru 6 times vandhuruku

Correct ans sis
👏👏🥰

41
77வது கேள்வி :


திருக்குறளில் ஒரே சொல் ஆறு முறை இடம்பெற்ற குறள் எது?

42
76வது கேள்வி :


host an image



Sis  AnS. C. குறிப்பறிதல்

43
நெடுந்தூர பயணம் என்னவனோடு....

வாழ்க்கை என்னும்
இலக்கில்லா பயணத்தில்
இலக்கை எட்ட
சில வரைவுகளால் வரையப்பட்ட
ஓர் காதல் பயணம்...

தொலைதூர பயணத்தில்
என் காதலோடு தொலைகிறேன் நான்.........
தீரா காதலோடும்,
என் மன முழுதும் தித்திப்பிலும்
பயணிக்கிறேன் நான்.......

ஏனோ !!
அவனோடு இருக்கும் தருணம்,
அகிலத்தில் நிசப்தம் காண்கிறேன்....
ஆரவாரம் செய்யாமல்
மனதுக்குள் சதிர் ஒன்றை எண்ணுகிறேன்...

அவனோடு இருக்கும் தருணம்,
புது உலகம் ஒன்றையும்,
புதுமை அனுபவத்திலும்,
வானம் வசப்பட்டு மும்மாரி கொண்டு
வாழ்த்துரைப்பையும் உணர்கிறேன் நான்......

அவனோடு இருக்கும் தருணம்,
இளங்காற்று வீசும் திசையில்
அசையும் சாலை ஓர மரங்கள்
ஏதேதோ ஒரு சல சலப்பு சஞ்சரிக்கிறது...
இதில், குயில்களும் குருவிகளும்
புதியதாய் இந்த காதல் பயணத்துக்கு
இசை மீட்டுகிறது...

தென்றலின் மெய் தீண்டலில்  ..
இதயத்தில் ஓர் இணக்கம் ஒன்றை ஏற்படுத்துகிறது....

என்னவனோடு,
நீண்ட தூர பயணத்தை
இனிமையாய் நீளச் செய்கிறது.....


44
தனிமை......

தனிமை என் இனிய நண்பனே,

சில சிந்தனைகள்
நினைவுக்குள் சிதையாமல் கிடப்பதை
மீண்டும் சித்தரிப்பு செய்வது தனிமை......

இது இனிமை இல்லை.....
ஆனாலும்
சில நினைவுகளை இனிமையாக்கும்,

இது வித்தியாசமானதுதான்
ஆனாலும்,
ஓர் விருப்பம்மான உணர்வு,
என்றும் நிரந்தரமான உணர்வு......

ஏனென்றால், அங்கு மட்டுமே
மனம் கவர்ந்தவரின்
நினைவையும், உறவையும்
மற்றும் சில அகிம்சையும்,
அழகாய் உணர வைக்கும்....

கடந்து போன நினைவுகளை
கண்முன் நிற்க வைக்கும்......
அந்த நினைவில் தன்னை தானே
இதழில் ஓரம் புன்னகைக்க வைக்கும்....

பொய் உறவாகினும்,
ஆறுதலும், நிம்மதியும்,
நாம் யார் என்பதை
உணர வைப்பவன் தனிமையே...

யாரில்லா போதிலும்
துணையாய் துணை நிற்பவன்
இவனே என் இனிய தனிமை.......


GOOD ONE SISS👏👏👏💐💐

Thank you sis

45
75வது கேள்வி :என்ன  குறள்?




நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

Pages: 1 2 [3] 4 5 ... 9