Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Vaanmugil

Pages: 1 [2] 3 4 ... 9
16
Birthday Wishes / Re: Happy Birthday Limat
« on: September 26, 2023, 10:43:17 am »
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  LIMAT ( தமிழ் )🎊🎊💐🎂🎂


இன்றும் என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்க அன்புடன் வாழ்த்துகிறேன் நண்பா பிறந்த நாள் வாழ்த்துக்கள்


17
Birthday Wishes / Re: Happy Birthday NATURE LOVER
« on: September 25, 2023, 09:55:17 pm »

HI FRD NATURE LOVER


என் இனிய நட்புக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........

என் இனிய நட்பே,
இன்று நீ பூமிக்கு புதல்வனாய்
வரவு தந்த நாள்....
புதுபுது உறவுகளுக்கு
பொக்கிசமாய் உன் வரவு.....
தாயை கௌரவித்து,
தந்தையை பூரிப்பில் வைத்து....
தாய், தந்தையின் அரவணைப்பில்
வாழ்வில் இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
எதிர்த்து போரட உதித்த
இத்தினத்தை தொடர்ந்தும்,
இனி வரும் நாட்களை தொடர்ந்தும் 
சீரும் சிறப்புமாய், வாழ்வு வளமாய் .....
மகிழ்ச்சி மட்டும் என்றும் நீடித்து வாழ
அன்புடன் வாழ்த்தும் உன் இனிய நட்பு....



18
அவள் விழியில் ஐக்கியமாகி
அகதி போல் நான்.......


என் ஒத்த உசுருலதான்
உன் நினைப்ப
பதுக்கி வச்சேனடி கண்ணம்மா !!

உன் மை விழி அசைவில்
மயங்கி சொக்கித்தான்
போகிறேனடி கண்ணம்மா !!

உன் விழி சிமிட்டலில்
என்னை வீழ்த்தித்தான் 
செல்கிறாயடி கண்ணம்மா !!

உன் மின்னல் கீற்று பார்வையில்
என்னை சுடர் போல்
சுட்டெரிகிறாயடி கண்ணம்மா !!

உன் விழி பேசும்
மௌன மொழியில்
என்னை மீட்டெடுக்க
தவிக்கிறேனடி கண்ணம்மா !!

இலை மறைவில் சிந்தும்
உன் ஓர பார்வையில்
என் குருதி கொண்டு
கவி படைத்து, உளறி
கவிஞன் ஆகிறேனடி கண்ணம்மா !!

உன் கருவிழியில்
என்னை காண்கையில்
மனத்தவிப்பில்
என் மனம் தத்தளிக்கிறதடி கண்ணம்மா !!

உன் விழி புன்னகையில்
விண்ணும் மண்ணும்
விசித்திரம் காணுதடி கண்ணம்மா !!

உன் காந்த பார்வை ஈர்ப்பில்
என்னை வசீகரம்
செய்கிறாயடி கண்ணம்மா !!

உன் விழி கொண்டு
தினம் தினம்
என் மொத்த உசிரையும்
கொன்று சாய்க்கிறாயடி கண்ணம்மா !!

என் உயிர்
உன் விழியில் உலவுகிறதடி கண்ணம்மா !!

19
Festival Day Wishes / Re: Happy Vinayaka Chaturthi 2023
« on: September 18, 2023, 12:28:20 pm »
Frds Happy vinayagar chaturthi 💐💐💐

20
82வது கேள்வி:

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?


பதில்:  1) அறத்துப்பாலில் 380
               2) பொருட்பாலில் 700
               3) காமத்துப்பாலில்    250



சரியான பதில் Rijia sis 👏👏👏💐

21
Birthday Wishes / Re: Happy Birthday KIlLivAlavAn
« on: September 06, 2023, 04:51:16 pm »
HAPPY BIRTHDAY🎂🎉 KILLIVALAVAN💐💐🎂🍫🍫🍫🍫🍫🍫🎂🎂

22
82வது கேள்வி:

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?
காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எத்தனை ?

23
81வது கேள்வி:

திருக்குறளில் "கோடி " என்ற சொல் எத்தனை  இடங்களில்  இடம்பெற்றுள்ளது?



பதில் : ஏழு

24
My Place September 18th Monday



1. Ekadantaya  vakratundaya -
https://youtube.com/watch?v=ym4o5F8ncY0&si=R3fvfjmvHelXbA2W
2. Takkar                        - Nira Song

3. Kicha Vayasu 16          - Sila neram sila pozhuthu song

4. Ninaithaalae inikkum     - Azhagaai Pookkuthey song

5. Time                            - Thavikiren Thavikiren Unathu song

6. Vanamagan                  -  Yemma yae alagamma song

7. Isai                             - Isai Veesi

8. Karisakattu Poove        - Aayiram Kodi Sooriyan song

9. Kannodu Kanbathellam - Tajmahal Ondru Vandhu song

10. Then Nilavu                - Paattu Paadava Song

11. Madhil Mel Kaadhal    - Nenjorama Song


12. Multi Language Dance Mashup 2023    -

25
80வது கேள்வி:



பதில் : c ) 37

26
Birthday Wishes / Re: Happy Birthday Vels
« on: August 28, 2023, 03:24:01 pm »
Vels frd belated wishes🎉🎂

27
Birthday Wishes / Re: Mithraa Happy Birthday
« on: August 28, 2023, 03:21:36 pm »
Happy birthday Mithra sis 🎂🎂💐💐💐😍

28
துணையாய் ஓர் நட்பு.....

துன்பத்தில் தோள் கொடுக்கும்
நம்பிக்கை தூணாய், அன்பின் ஆறுதலாய்
என் தோழமைக்கு.....

என் அன்பு தோழமையே துவளாதே....
துயரம் என்று ஒருபோதும் வருந்தாதே....
துயரத்திலே வாழ்வை சிதைக்காதே.....
துயரம் ஒரு போதும் நிலைக்காதே......

துணிவை கொண்டு எதிர்கொள்ளு தோழா.....
துணிச்சல் என்று அம்பெய்து
துன்பத்தை கொன்று விடு தோழா......

தோல்வி என்று எண்ணாதே தோழா...
தோற்பது வெற்றியின்
அடித்தளம் என்று நினைவுகொள் தோழா....

நட்பு உறவாய், துணையாய், பலமாய்,
கை கொடுப்பேன் தோழா.....
உன் துயரம் துடைக்க அன்பின் அரவணைப்பில்
தோள் கொடுப்பேன் தோழா....

அன்பின் வலியில் தூக்கி எறிந்தால்
வீசப்பட்ட இடத்தில்
விதையாய் மாறி மரமாகு தோழா.....
வீசியவன் விழித்து
அஞ்சும் நாள் விரைவாகும் தோழா.....

இழந்தவை எல்லாம்
இம்மியளவு என்று எண்ணு தோழா.....
இனி மீட்டும் வரை இன்பம் ஒன்றே
ஆயுதமாய் எண்ணு தோழா......

வலி என்று வாடாதே தோழா.....
வலிமையாய் வாழ்ந்திடு தோழா.....
துன்பத்தை புதைத்திடு தோழா.....
அதில் , இன்பத்தை விதைத்திடு தோழா.....

புதிதாய் புது உலகை புகுத்திடு தோழா.....
புது விடியலை புன்னகையில் காண்போம் தோழா....


 இந்த வரிகளை என் அன்பு தோழன் "இயற்க்கையை நேசிப்பவர்" என் நட்புக்கு சமர்ப்பிக்கிறேன்....

29
Festival Day Wishes / Re: Happy Independence Day 2023
« on: August 15, 2023, 10:47:07 am »
HAPPY INDEPENDENCE DAY MY GTC LOVEABLE FRDS...

30
பிரியன் என்பவரின் கவிதை :

கவிதை எனப்படுவது......

அகிம்சையும்
ஆதரிக்கும்
ஆயுதம்...

இதை கொண்டு
எந்த முரண்பாடுகளையும்
முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம்

இளைங்கர்களுக்கு கிடைத்த
இலக்கண திறவுகோல்....

இதைக்கொண்டு
திறக்க மறுக்கும்
மனங்களையும் 
திறந்து விடலாம்...

எழுத்து வடிவில்
எழுந்து நிற்கும்
சூரியன்.....

இதை கொண்டு
இருண்டு கிடக்கும்
இதயங்களின் வாசலில்
விடியல்களின் நிழலை
விழவைத்து விடலாம்....

இந்த நீதிமன்றத்தில்
மட்டும்தான்
எல்லா பொய் சாட்சிகளும்
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன...

கவிதையால்
கவரப்பட்டவனுக்கு
இருக்கும்
இடத்தை பொறுத்து
இரட்டை பட்டம்
கொடுக்கபடுகிறது....

படித்தவனிடத்தில்
கவிதை சொன்னால்
"கவிஞன்"

பாமரர்களிடம் சொன்னால்
"கிறுக்கன்"

அன்பான காதலிடம் சொன்னால்
"விரும்பத்தக்கவன்"

அர்த்தபடாத சமுதாயத்திடம் சொன்னால்
"வேலை வெட்டி இல்லாதவன்"

மரபுக்கு மதிப்பு கொடுத்தால்
"அர்த்தமுள்ள கவிஞன்"

புது கவிதைக்குள் புகுந்தவன்
"அவசரக் கவிஞன்"

இப்படி கவிதையால்
கவரப்பட்டவனுக்கு
இருக்கும்
இடத்தை பொறுத்து
இரட்டை பட்டம்தான்
 
அன்று பக்கம் பக்கமாய்
இருந்த கவிதையெல்லாம்

இன்று டிசம்பர் மாதத்து
காலண்டர் காகிதமாய்
இளைத்து விட்டன!

அன்று
சமுகக் கவிதைகளுக்கு
காதல் கவிதைகள்
ஊறுகாய்களாய் இருந்தன....

இன்று ஊறுகாய்களே
உணவாகிவிட்டன....

இப்பொழுதெல்லாம்
LKG குழந்தையின்
சேர்க்கை செலவு மாதிரி
காதல் கவிதைகளே
அதிகம் அச்சேறுகின்றன.....

ஆனாலும் காதலிப்பவன்
பாடப்புத்தகம் படிப்பதுபோல்
அவ்வப்போது
கருத்து கவிதைகளும்
கருதரித்துகொண்டுதான் இருக்கிறது....

பழமையை மறக்காத்
பழைய இதயங்கள்
படிக்கும் என்ற
பகட்டு நம்பிக்கையில்.....


இந்த கவிதை ரொம்பவே அழகு உண்மையும் கூட கவிதையை பார்த்தால் சிலருக்கு என்னவெல்லாம் தோன்றும் என்பது அழகா சொல்லிருகாரு....இதை படிக்கும் தருணம் இதில் நான் எழுதும் கவிதை எவ்வாறு என்று சிந்தித்தேன்!... கவிஞன், கிறுக்கன், விரும்பத்தக்கவன், வேலை வெட்டி இல்லாதவன், அர்த்தமுள்ள கவிஞன், அவசரக் கவிஞன் இப்படி பல பெயர்கள் கொண்டவர்கள் கவிதை பார்ப்பவரின் நிலையை பொறுத்துள்ளது.....

Pages: 1 [2] 3 4 ... 9