Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Vaanmugil

Pages: 1 ... 7 8 [9]
121
முதலும் நீ.....முடிவும் நீ....

எதிர்பாராமல் எனக்குள் வந்த
முதல் காதலும் நீ.....

எனக்குள் என்னவன் ஆன
முதல் உறவும் நீ......

ஏராள கனவுகளையும்,
உணர்வுகளையும் தந்த
முதல் உரிமையும் நீ......

எண்ணிலா கவிதைகளை
வார்த்தைகளால்
வடிவமைத்த கவிதை நீ.....

என்னருகில் நீ இல்லை
என்ற போதிலும்
என் மனதில் என்றும்
முதலும்......முடிவுமாய் நீ........

122
கனா.....

விழி இரண்டும் உறக்கத்தில்
மனம் மட்டும் கனவின் மிதக்கத்தில்....
நினைக்க நினைக்க இன்பம்
நினைவில் ஒரு துன்பம்
உன்னோடு நான்,
இன்பமே.....
நிஜம் இல்லை, நிழல் என்றாலும்
துணை இல்லையே,
துன்பமே.......
கனா ஒன்றே வாழ்வின் நிலையானதே......

123
தொலைதூர காதல்

தொலைதூர காதல்.....
தொலையாத காதல்......

முகம் காணாமல்,
முகவரி தெரியாமல்
தொடர்கின்ற காதல்
தொலைதூர காதல்.....

கடல் தாண்டியும்,
பல நாடுகள் தாண்டியும்,
பல ஆயிரம் மைல் தாண்டியும்
தொடர்கின்ற காதல்
தொலைதூர காதல்.....

இரு மனம் கதைக்க
வலைதளமும், கைபேசியும்
காதலின் தூதாய்
வந்த காதல்
தொலைதூர காதல்.....

கண்கள் பேசா காதல்
கை பிடித்து கதைக்கா
முடியா காதல்.....
கணம் ஒரு பொழுதும்
பிரியாத காதல்
தொலைதூர காதல்.....

பல ஆண்டுகள் கடந்தும்
சந்திக்க நாள் இல்லா காதல்
ஒரு பொழுதேனும் சந்திப்பில்
விடியாதா ?
என்னும் காத்திருப்பில்,
இரு மனங்களின் தவிப்பில்
வரும் காதல்
தொலைதூர காதல்.....

சந்திப்பில் இல்லா காதல்
சற்றும் மாறாத காதல்
இரு மனங்களின் காதல்
தொலைதூர காதல்.....
என்றும் தொலையாத காதல்....

124
பறவையை போல்,
சுதந்திரம் காண துடிக்கும் பெண் இனம்....

சிறு கூட்டுக்குள்ளே சிக்கி தவிக்கிறது
என் போன்ற பெண் இனமே....

கூண்டு பறவையாய் நானிருந்தேன்
கூச்சலிட்டு தவித்திருந்தேன்,
கூண்டை விட்டு பறக்கவே...
சுதந்திரம் எந்நாள் என்று காத்திருந்தேன்....

பெண் என்ற இனமே,
பேழை பெட்டிக்குள் அடைத்துவிட்டு,
லட்சிய பாதையை தொட துடிக்க,
லாபகரமாய் எதுவும் இல்லை,

கூறு போட்டு குத்தகைக்கு,
குமரியென பெண் கேட்க,
கூடியிருந்த சாதி சனமும்,
கூட்டத்திலே யாரோ ஒருவனாம்!
மனம்முடிக்க வந்த மணமகனாம்!
மாசியில திருமணமாம்,
மகிழ்ச்சியில் கூடியிருக்க.....

பெண் மனம் புரியலையே
பெத்தவளும் கடனிலே
காலத்தை கடத்த
கண்கலங்கி கேட்டாளே....

காலமெல்லாம்
உன்ன கரை சேர்க்க தவித்திருந்தேன்
கடவுளென வந்திருக்கான்
கழுத்த நீட்டி கட்டிகடின்னு
கை கூப்பி கேட்டாலே...

பெத்த மனம் கேட்கையில
பாவி நான் என் செய்வேன்...
என் லட்சியத்தை மூட்டை கட்டி
மூன்று முடிச்சி வாங்கிட்டேன்....

சுதந்திரமா பறக்கத்தான்
சூட்சமம்தான் செய்ய தெரியலையே
சூழ்நிலை கைதியாய் கண்ணீரீல நான் இருக்க,
நடந்ததை நினைச்சு நான் தவிக்க....

கட்டிக்கிட்ட மவராசன்,
கண்ணீர கண்டுகிட்டு
ஏனென்று கேட்காம,
என் மனம் அறிந்தானே.....
கூண்டை விட்டு பறக்கவிட்டானே...
சுதந்திரமாய்  பெண்ணின்
இலட்சிய பாதைக்கு வழி வகுத்தானே.....

125
புது உறவு......

புதிய  உறவு.....
புதியதாய் இணையத்தில்.....
பொக்கிஷமாய் கிடைத்த உறவு.....
இது சொந்தமும் இல்லை,
இது பந்தமும் இல்லை,
சொந்தமாய் உரிமைகொள்ளவும்,
பந்தமாய் தொடரவும்,
பாவி விதி அவன் விட்டு வைப்பானோ?
வினவி கொண்டு ?
ஆழ்ந்த சிந்தனையில் நான்......
உரிமை நட்பு வரை வேண்டும்,
உறுதியாய் உரக்க கூறிட வேண்டும்,
உலகம் முழுதும் வியப்பில் ரசிக்க வேண்டும்,
விமர்சனம் எழுந்தால் விளக்கம் தாராமலே.....
உறவை பார்த்து மன்னிப்பு கோருதல் வேண்டும்,
இவனே என் சொந்தமாய்,
இவனே என் பந்தமாய்,
இவனே என் நட்பின் உரிமையாய் ,
என் நண்பன் இஷான் என்கிற கண்ணனுக்கு சமர்பணம்........




126
போர் வீரன் காதல்....

களம் இறங்கி வாள் வீசி,
வகை சூடிய போர் வீரன் நான்....
அவள் பார்வை பட்ட கணம் முதல்
சிக்கி தவிக்கின்றேன்......

எதிர் நாட்டின் வீழ்ச்சியை
சில நொடியில் வீழ்த்தியவன் நான்.....
அவள் எதிரில் என் வீழ்ச்சியை
உணர்கின்றேன்.....

போரில் வாள் வீசி வேல் எய்து
வெற்றி வீரன் என்று
பேர் சூட்டப்பட்டவன் நான்......
இன்று அவள் விழியில்
நான் தோற்று சரணடைகிறேன்.....

போர்களம் சென்று
குருதியில் நீந்தியவன் நான்.....
அவள் சிரிப்பினில் செத்து பிழைக்கிறேனே....
என் காதலே....


127
என்னவளே.....

என் அன்பானவளே
என் சொந்தமானவளே,
என் கவிதைக்கு இலக்கனமானவளே,
என் ராகத்திற்கு இசையானவளே,
என் வாழ்வில் அங்கமானவளே,
என் வாழ்வுக்கு வழி காட்டுபவளே,
என் வார்த்தைக்கு வாக்கியமானவளே,
என் ஜென்மம் பிறப்பிற்க்கு விளக்கமானவளே,
என்னுள் யாவிலும் நீயடி......

ஏனடி பெண்ணே கோபம் ஏனடி !
நீ என் செல்ல பெண்ணடி !
இந்த கோபம் வேண்டாமடி,
என் உயிர் தாங்காதடி......

பெண்ணே !
கோப பார்வை பாராதடி
உன் பார்வை வில் அம்பால்
என் நெஞ்சைக் கொய்து கொல்லாதடி....

பெண்ணே பேசாமல் இராதடி !
நீ பேசா நொடி
என் உள்ளம் தினம் நோகுதடி......

பெண்ணே
நீயே என் அகிலமடி
நீ இல்லையேல்
என் வாழ்வுக்கு இல்லை அங்கீகாரமடி......

பெண்ணே
உன் கரம் பிடிப்பேனடி
பிடித்த கரம் 
என்றும் உன்னை விட்டு பிரியாதடி....

பெண்ணே நீ வேண்டுமடி.....
ஏழேழு ஜென்மும் தொடர வேண்டுமடி.....
என் ஆயுள் என்றும் உணதாகுமடி.....
உனதால் என்றும் என் வாழ்வு சிறப்பாகுமடி.....




128
வைரமுத்துவின் - காதலித்து பார்......

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...

ராத்திரியின் நீளம் விளங்கும்....
உனக்கும் கவிதை வரும்...
கையெழுத்து அழகாகும்.....
தபால்காரன் தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்...
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சஹாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

பூக்களில் மோதி மோதியே
உடைந்து போக உன்னால் முடியுமா?
அஹிமசையின் இம்சையை அடைந்தது உண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குள்ளே புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
சபையை தனிமையாக்கவும்
உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம் அடையவேண்டுமா?
ஐந்தங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்...

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!

சம்பர்தாயம் சட்டைபிடிதாலும்,
உறவுகள் உயிர் பிடிந்தாலும்,
விழித்து பார்க்கையில்
உன் தெரு களவுபோய் இருந்தாலும்,
ஒரே ஆணியில் இருவரும்
சிக்கன சிலுவையில் அரையபட்டாலும்,
நீ நேசிக்கும் அவனோ, அவளோ
உன்னை நேசிக்க மறந்தாலும்,
காதலித்து பார்!

சொர்க்கம், நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம் ..
காதலித்து பார் ..............

129
வைரமுத்துவின் - அம்மா கவிதை.....


ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஓங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?

பொன்னையாத் தேவன்
பெத்த பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒரு பிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணி ஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அது எறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறு மொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறு மொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்த தெரு மணமணக்கும்

தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்பு மேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சி ஊறும்

வறுமையில நாம பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசு பணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம் வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்த அப்பன் சென்னை வந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்
உன் ஆசமொகம் பாக்காமப்
பிள்ளை மனம் பித்தாச்சே
பெத்த மனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்ச மகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்தமாயிருச்சே!

வைகையில ஊர் முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரை சேத்து விட்டவளே
!

130
வணக்கம்  GTC FM and Gun , Lovely

முதல் முறையாக எனக்கு  சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு

கிடைத்தற்கு மிக்க நன்றி, மற்றும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக

உள்ளது......

எனக்கு பிடித்த பாடல் :
{என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் }

திரைப்படம் :

பாடகர்கள் : சுனிதா சாரதி, ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர் : கபிலன்

எனக்கு பிடித்த வரிகள் :

என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்

உண்மைக் காதல் யாரென்றால்
உன்னை என்னை சொல்வேனே
நீயும் நானும் பொய் என்றால்
காதலை தேடி கொல்வேனே
கூந்தல் மீசை ஒன்றாக
ஊசி நூலில் தைப்பேனே
தேங்காய்க்குள்ளே நீர் போல
நெஞ்சில் தேக்கி வைப்பேனே

இந்த வரிகள் கேட்கும்போது சொல்லவே வேண்டாம் ஒரு காதல் உணர்வு

கொண்டு வரும்.  Heart touching words சொல்லலாம், இந்த song ah நான்

ஒருத்தருக்கும் மற்றும்  நம்ம GTC யில் என் தோழன் தோழியர்களுக்கும்

Dedicate பண்றேன்...........Tnq


131
எனக்கெனவே நீ......

நீ என் நிஜம் என்பதா? - இல்லை
என்னை தொடரும்
என் நிழல் என்பதா?

நீ என் உயிர் என்பதா? - இல்லை
என்னுள் இருக்கும்
என் சுவாசகாற்று என்பதா?

நீ என் இமை என்பதா? - இல்லை
எனக்குள் நுழைந்து
கலைந்து செல்லும் கனவென்பதா?

நீ என் அகிலம் என்பதா - இல்லை
என்னுள் வசிக்கும்
முகில் என்பதா?

அன்பே. நீ  நான் செய்த தவமல்லவா?
என் வாழ்வில் கிடைத்த வரம்மல்லவா?
அன்பே. என்றும் எனக்கெனவே நீ,
எனக்கு மட்டுமே நீ......

132
Birthday Wishes / Re: HAPPY BIRTHDAY COFFEE BOY
« on: February 11, 2023, 12:56:15 pm »
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் COFFEE BOY  நண்பா...
💐🎂🎂🎂

134
அந்தி இரவில் நான் .....

ஆவி என்ற பெயரில் அலையும்
ஒரு அவலையின் குரல்......

ஆயுள் காலம் அரையாய் ஆனது
ஆரவாரம் செய்யாமல்
அழுக்கடைந்த வீட்டில்
அங்கும் மிங்குமாய், அவதியில்
அலைகிறேன் அந்தி இரவில் நான்....

தொட துடிக்கும் உணர்வும்
தொலைந்து போனதே.....
தூசி போல ஆகினேன்
துர்ஷ்ட மரணத்தால்
துட்சமாய் அலைகிறேன் நான் .....

மக்கள் மனம் அச்சத்தில்
மங்கை என்பதையும் மறந்து
மந்திர தந்திரத்தால்
ஆவி என்றும்,
அடங்காத பேய் என்றும்
பெயரில் அலைகிறேன் நான்......

மனம் விட்டு கதறுகிறேன்
மரணம் தந்த பாவி எவனோ?
மானிட வாழ்வை பறித்தது ஏனோ?
ஆவியாய் அலைய வைத்ததும் ஏனோ? - வேறு
அகிலமின்றி அலைகிறேன் நான்.......


Pages: 1 ... 7 8 [9]