Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: 1 [2]
Post info No. of Likes
Re: Happy Birthday RIYANA QUEEN
May 27, 2023, 01:07:26 am
1
Re: கவிதையும் கானமும்-025 தோல்வி என்பது தண்டனை,
நாம் தொடர்ந்து செய்யும் தவறுகளுக்கு....
மறுபுறம் வெற்றி என்பது விருது
நாம் தொடர்ந்து செய்யும் சரியான விஷயங்களுக்கு
தோல்வி நம்மை விரக்தியில் தள்ளுகிறது,
வெற்றி நம்மை வானத்துக்கு உயரச் செய்கிறது,

நான் என்னைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்,
நான் வெற்றியா தோல்வியா?
எந்தப் பக்கம் என்பதை
நான்  மட்டுமே முடிவு செய்ய முடியும்...

நான் எதிர்காலத்தை நோக்கி
முன்னேறுகிறேன்,
வாழ்க்கையை பின்னோக்கி மட்டுமே
புரிந்துகொள்கிறேன்.....

திரும்பிப் பார்க்கும்போது,
கடந்த காலத் தவறுகளை
நினைத்துப் புன்னகைக்கிறேன்......

நான் வெற்றியில் அல்ல,
தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டேன்
நான் தோல்வியுற்றபோது
நான் ஒருபோதும் விலகவில்லை
ஆனால் வெற்றிபெறும் வரை தோல்வியடைந்தேன்.....

தவறுகளில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்
பாடங்கள் தவறுகள் போல் மறைக்கப்படுகின்றன
தவறுகளில் இருந்து பாடம் கற்காமல்
இருப்பதுதான் ஒரே தவறு......

தவறுகள் தோல்விக்கு வழிவகுக்கும்
தோல்வி ஆபத்தானதும் அல்ல,
வெற்றி இறுதியானதும் அல்ல,
வெற்றி உறுதியான அடித்தளத்தை
அமைப்பதன் மூலம் கிடைக்கும்......

வெற்றிக்குப் பின்னால் தோல்விகளே
இதுவே வாழ்க்கையின் ரகசியம்.......

May 28, 2023, 11:54:00 pm
2
Re: Happy First Anniversary GTC FORUM 2.0
June 11, 2023, 11:04:43 pm
1
Re: கவிதையும் கானமும்-026 காதலின் காவியம் என்றும் அழியாத ஓவியம்



காதல் ......
சற்றே கணம்,
நூலிழை தீண்டல் போல்,
உன் மைவிழி தீண்டி,
மனம் என்னும் கோட்டையை
ஆக்கிரமிப்பு செய்தாய்யடி.....

உன் மதிமுகம் காண
மணிநேரம் கணக்கில்லாமல்
மங்கையின் வாசலை
என் இருவிழி தேடலில் தவிப்பை கண்டேனடி.....

உன் விழி பேசு மொழி புரியுதடி,
நீ புருவம் உசத்தும் கோவம் அறிந்தேனடி,
இதயம் பேசும் மௌனம்
தினம் என்னை கொல்கிறதடி....

ஆராதிக்கிறேன்....
அகப்பட்ட காதலில்
ஆசைகளும், அளவில்லா தவிப்பும்,
மனமும், மதியும் ஆரவாரம் செய்யும்
அவஸ்தைகள்தான் இதுவோ?.....

என் மனதை
களவு கொண்ட பேதையே,
உன்னை கண்டதும் ஏனோ? கார்முகில் சூழ்கிறதே....
என் உயிர் வரை சூறைக்காற்றை வீசுகிறதே....
வான் மழையும் தூவுகிறதே....
இக்கணம் எம் காதலையும் உணர்கிறேனடி....

காதலுக்கோர் தாஜ்மஹால்
கட்டி வைத்தானடி....
கல்லறை என்று சொல் இருந்தாலும்
ஷாஜகான் காதலை,
காதலுக்கு அதியச சின்னமாய்
காதலின் உறவுக்கு அழியா சுவடாய்...
இன்றும் உலக வரலாற்றில் வாழ்கிறதேயடி...

இங்ஙனம் காதலின் ஆழம் அதிலே உணர்தேனடி...

அதில் என் காதலும் ஓர் இலக்கியமாய் எண்ணுகிறேனடி...

June 15, 2023, 12:41:25 pm
4