Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - EWA

Pages: 1 2 3 [4]
46

முடி உதிர்வு, அடர்த்தி குறைவு, வழுக்கை, நரை முடி, இப்படி முடியில் மட்டுமே எக்கசக்க பிரச்சினைகள் இருக்கிறது. முடியில் ஏற்பட கூடிய இந்த பிரச்சினைக்கு நாம் தான் முதல் காரணமாக உள்ளோம். முடியை சரியாக பராமரிக்காமல் இருத்தல், தேவையற்ற உணவுகளை சாப்பிடுதல், அளவுக்கு அதிகமான வேதி பொருட்களை முடியில் பயன்படுத்துதல் போன்றவை தான் முடியில் ஏற்பட கூடிய எல்லாவித பிரச்சினைகளுக்கும் காரணம்.

இதை சரி செய்ய ஏதேதோ வழிகளை தேடும் நாம் இயற்கையில் உள்ள வழிகளை மறந்து விடுகின்றோம். இயற்கை ரீதியாகவே முடியின் எல்லாவித பிரச்சினைகளுக்கும் தீர்வை வழி விடலாம். அதுவும் இந்த கருப்பு எண்ணெயை வைத்து முடியின் அனைத்து பிரச்சினைக்கு தீர்வை கண்டு விடலாம். இதை பற்றி இனி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

கருப்பு எண்ணெய்யா?

இது வரை பலரும் இந்த வகை கருப்பு எண்ணெயை கேள்வி பட்டிருக்க மாட்டீர்கள். இது வெறும் கருஞ்சீரகத்தில் இருந்து தயாரித்த எண்ணெய் தான். இதை வைத்து நம்மால் எல்லாவித முடி பிரச்சினைகள் மற்றும் முக பிரச்சனைகளை தீர்வுக்கு
கொண்டு வந்து விடலாம். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் தான் இதன் மகிமைக்கு காரணம்.

வழுக்கைக்கு

வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் முடி வளர வைக்க இந்த குறிப்பை செய்து பாருங்கள். இதற்கு தேவையான பொருட்கள்
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
கருஞ்சீரக எண்ணெய் 2 ஸ்பூன்
ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் ஆலிவ் எண்ணெய்யை கருஞ்சீரக எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2முறை செய்து வந்தால் வழுக்கை விழுந்த இடத்தில் மீண்டும் வேகமாக முடி வளரும்.

முடி வளர்ச்சிக்கு

முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியாக வளர இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதற்கு தேவையானவை...
தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன்
கருஞ்ஜீரக எண்ணெய் 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 1/2 ஸ்பூன்
ஆமணக்கு எண்ணெய் 1 ஸ்பூன்
தேன் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை

முதலில் மேற்சொன்ன எல்லா எண்ணெய்களையும் ஒன்றன் பின் ஒன்றான நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை இறுதியில் கலந்து முடியின் வேர்களில் தடவவும்.
20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் அல்லது ஷாம்பூ பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி சட்டென வளரும்.



Thanks&Regards:

EWA

47
Festival Day Wishes / Re: HappY Women's Day 2019
« on: March 09, 2019, 02:42:21 am »
“Empower woman, empower the human community. The base on which the world stands is a women.”


Thanks&Regards:

EWA

Pages: 1 2 3 [4]