GTC FORUM

POEMS - கவிதைகள் => கவிதையும் கானமும் => Topic started by: Administrator on January 30, 2023, 08:24:31 pm

Title: கவிதையும் கானமும்-016
Post by: Administrator on January 30, 2023, 08:24:31 pm
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.


இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-016


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.

(https://globaltamilchat.com/forum/upload1/KG/kk016.jpg)

மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
Title: Re: கவிதையும் கானமும்-016
Post by: Barbie Doll on January 30, 2023, 09:57:55 pm



மரங்கள் பின்னோக்கி நகர்கின்றன..!
கட்டிடங்கள் பின்னோக்கி நகர்கின்றன..!
மனிதர்கள் பின்னோக்கி நகர்கின்றனர்..!


என் ஆசைகள், கனவுகள், பிடித்தங்கள் அனைத்தும் பின்னோக்கி நகர்கின்றன..!
என் இன்பங்கள், துன்பங்கள் யாவும் பின்னோக்கி நகர்கின்றன..!!

நான் மட்டும் முன்னோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கின்றேன்..!!

எங்கு செல்கிறேன் நான்?..
எதை தேடி செல்கிறேன் நான்..?

உடல் விட்டு ஆன்மா மட்டும் பயணிப்பது போன்ற உணர்வு என்னுள்..!

ஒருவேளை நான் இறந்து விட்டேனோ.. ?
இத்தனை குழப்பத்துடன் நான் எங்கு செல்கிறேன்..?
அமைதியை தேடி செல்கிறேனா..?
நிம்மதியை தேடி செல்கிறேனா..?

அய்யோ..! கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் புலப்படவில்லையே..!!

என் அம்மா எங்கே?
என் அப்பா எங்கே?
என் உறவுகள் எங்கே?
எனக்கு பிடித்த உணவு எங்கே?
உடை எங்கே?

நான் தனித்து விடப்பட்டுள்ளேன்..!!
யாரும் என்னை தேடவில்லையா..? யாருக்கும் நான் பேசுவது கேட்க வில்லையா..?

நான் என்ன செய்வேன்.. ?
இந்த இருட்டு என்னை பயமுறுத்துகிறது.. !!

அதோ.. ஒரு வெளிச்சம்..!!
ஆம் நான் வந்து விட்டேன்..!!

இந்த வெளிச்சம் என்னை அமைதி படுத்துகிறது..!
இது எனக்கான இடம் என உணர வைக்கிறது..!!

நுழைவு வாயிலை நெருங்கி விட்டேன்.. !!
என்னை வரவேற்க யாருமில்லை!!

இருந்தும் எனக்கு பிடித்துள்ளது..!!
நான் ஆவலாக உள்ளேன்..!!

செல்கிறேன் நான்...!!
எங்கு செல்கிறேன் என்று புரிந்து கொண்டேன்..!!

இது என் மரணத்திற்கான நுழைவு வாசல்..!
என் ஆழ்ந்த அமைதிக்கான நுழைவு வாசல்..!
எதுவும் வேண்டாம் எனக்கு..!
எதிலும் நாட்டமில்லை எனக்கு..!

பயந்து விடாதே மனிதா..!
நிஜத்தை விட நிழல்கள் அவ்வளவு உன்னை துன்புறுத்தாது..!!

பிறப்பிலும் எதையும் சுமந்து வரவில்லை..!
இறப்பிலும் எதையும் சுமந்து செல்லவில்லை..!

மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் உணர்கிறேன்..!

இந்த வாழ்க்கை எனக்கு கொடுத்த அத்தனை அனுபவங்களுக்கும் நன்றியுடன் விடை பெறுகிறேன்...!!!

Title: Re: கவிதையும் கானமும்-016
Post by: AniTa on January 31, 2023, 02:05:46 am
நிலவின் வெண்ணிற ஒளியில்
அலைகளின் ஓசையில்
மனல்களின் மீது நான்,
அது ஒரு நிசப்தமான சூழல்...
நாய்களின் ஊளையுடன் ....

மானிடர்களின் இடர் இன்றி வேகமாக
தொட்டு சென்றது காற்று,
காற்றின்கிடையே ஓர் அழைப்பு
""" அனிதா """
அழைப்பை ஏற்கும் முன், மனம்
பரீசலித்தது அந்த குரலை...

ஆண்மை நிறைந்த கம்பீரமான
குரல்...
பெண்களை ஈர்க்கும் தொனியில்
என்னை அழைத்தது...
முகம் பார்த்து ஈரக்கப்படும் முன்னே,
அந்த குரல் ஈர்த்தது என்னை.

அடுத்த வினாடி கடக்கும் முன்
திரும்பிப் பார்த்தேன்...
கைகளால் கோதிவிட்ட தலைமுடி,
அழகிய நெற்றி,
கண்டிப்பாக அவை கத்தி போன்ற
கண்கள் தான்...
என் இதயம் குத்தி நின்றதே,
நேர் மூக்கு,
தடிமமான உதடுகள்,
மெல்லிய புன்னகைகளுடன்...
அடடா,
கவர்ச்சியான முகம்... 😍

யார் நீங்கள் என்ற என் வினா
முடிவதற்குள், என்
இடை பற்றி அணைத்தது
அவன் கை,
ஜில்லென்ற அவன் கை,
நெருக்கத்தில் இருந்தும் அவன்
சுவாசிப்பதை உணரமுடியவில்லை.
மூச்சு காற்றின் தொடுதலும் இல்லை,
சில திகில் நிமிடங்கள்...

என் பயத்தை ரசித்தவன் போல்,
என் காதருகே அவன் சொற்கள்...
""உன்னை காதலிக்கும் ஓர் ஆத்மா "" 😱
என்று கூறி கண்முன்னே கரைந்தது
அவன் உருவம்....
மனதில் பயம் பீடித்துக் கொண்டது,

சுதாரிக்கும் முன்னே,
கால்கள் விரைந்து செல்ல முற்பட்டன
என் கால்களை எதோ பற்றின,
அது ஒரு மானுடனின் கைகள்,
பயத்தின் கூச்சல்கள் பல, ஆனால்
மௌனமாய் வெளிப்பட்டன...

அச்சத்தின் உச்சம் கடவுள் நாமங்களை
உச்சரித்தது என் நா...
கால்கள் விடுபட்டன,
வாகனம் இருந்த திசை நோக்கி ஓடின.
சாலையில் வாகனம் வேகத்தில் செல்ல,
மனமோ பின்னோக்கி சென்றது
அந்நிகழ்வுக்கு...

ஆவியுடன் சந்திப்பா  !!!
இதயம் துடிப்பு நின்று
உறைந்தது போல் ஓர் உணர்வு.
இதில், அந்த ஆவியை
வர்ணிக்க வேற செய்தேனே....!

ஆவி ஆனாலும் அழகன் தான் ! 😍
பயம் கலந்த சிரிப்புடன்
நான்....

உலகில் எல்லாவற்றையும் உணர்ந்து,
ரசித்து கவிதை எழுதிய என்னால்
ஓர் ஆவியையும் ரசிக்க முடியும்
என்று உணர்த்திய அந்த
ஆவி அழகனுக்கு என் நன்றிகள்  ❤️

Title: Re: கவிதையும் கானமும்-016
Post by: kittY on February 02, 2023, 06:17:02 pm
வெண்ணிற ஆடையிலலே காற்றோடு கலந்து..
தனிமையிலே தொலைந்து..
உதிரமில்லா இதயத்தின் புலம்பல் கேட்கிறதா....
விண்ணோடும் இல்லாமல் மண்ணோடும் இல்லாமல்...
வழி நடுவில் வலியாய்...
யாரிடமோ பயணம் சொல்ல மறந்தது போல்
அங்கும் இங்குமாய் சிறகடிக்கிறது....

ஒஹ் மனிதா...
என்னை தள்ளி போகாதே....
உடல் விட்டு உயிர் ஓடிவிட்டது...
இப்போது உடலும் இல்லை..உயிரும் இல்லை..
தனிமை வாட்டுகிறது....

உடல் அடக்கமானதும்
குடும்பமே என்னை விட்டு பிரிந்து விட்டது ..
உள்ளம் நினைத்து உறவை தேடி போனால்....
என்னை பார்த்தவுடன் நடுக்கதில் ஓடகின்றனர்.....

உறவே நான் என்ன பிழை செய்தேன்...
உறவை தேடி நான் வந்தது அது  என் தவறா?...
அல்லது என்னை மறந்து பிரிந்தது உங்கள் தவறா?...
 பகலிலே என்னால் வெளிச்சத்தை பார்க்க முடியவில்லை....
 இரவிலே என்னால் நடமாடமல் இருக்க முடியவில்லை....

இரவு என்னை நிம்மதியாய் உறங்க விடாமல்....
நினைவுகளால் அலைய விடுகிறது...
தொலைத்த என் உறவை தேடி
கால் இல்லாமல் காற்றோடு மிதந்து வருகின்றேன்....

உறவோடு இருக்கும் போது
சென்ற இடமெல்லாம் தலை கோதி
போய் வா மகளே என்று சொல்லி அனுப்பும் உங்கள் வார்த்தை...
இப்போதும் என் காதில் ஒளித்து க்கொண்டு தான் இருக்கின்றது....
 
கடைசி நிமிடத்தில் ஏன் கூற மறந்தீரோ
 போய் வா என்று...
விடை தெரியாமல் அலைந்தோடி
வருகின்றேன் தெருவோரம்....
விடை கிடைக்காமல் செல்லவும் மாட்டேன் என் நிரந்தர இல்லத்திற்கு.....

வெளிச்சத்தை தொலைத்து இருளுக்குள் அடங்கி விட்டேன்...
என் நிறைவேறாத ஆசையால் நினைவுகளை தேடுகின்றேன்....
வா என்னிடம்... போய் வா என்று சொல்ல மறந்தாயோ...
உறக்கமில்லதா என் இரவுகளுக்குள்...
இரக்கமில்லாமல் என்னை தொலைத்து விட்டாயே ....

 நினைவோடு நான் இருக்கும் வரை
இரவோடு கலந்த என் பயணம் தொடரும்....
இப்படிக்கு நான் தான் உங்கள் பக்கத்தில் இருக்கும் ....
ஹாஹா ஹா ஹா சட்டென்று திரும்பி பார்க்காதே
நடுக்கத்தில் உறைந்து விடுவாய்....🙄
Title: Re: கவிதையும் கானமும்-016
Post by: Yash on February 03, 2023, 01:42:51 pm
அர்த்தஜாம நேரத்தில் பரந்த அறையில் நான் விழித்திருக்க

விந்தையாய் ஒரு சத்தம் கேட்க சட்டென மரங்கள் அமைதியை தத்தெடுத்துக் கொண்டன

இரவு நேரம் அது, ஒற்றை மின்விளக்கின் ஒளியில் ஓவியம் ஒன்று வரைந்து கொண்டிருந்தேன்

ஒரு கோடு வரைவதற்கு  ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டது

ஒவ்வொரு முறையும் கடிகாரத்தை பார்க்கும் பொழுது 12 என காட்டுகிறது.. ஓடாத கடிகாரம் என்று நினைக்கிறேன்

ஓரளவு வரைந்து முடித்து விட்டேன் இருந்தும் உள்ளத்தில் ஒரு அச்சம், தனிமையில் இருக்கிறேன் என்று நினைத்து அல்ல... தனியாக இல்லை என்று.

யாரோ என்னிடம் நீ தவறு செய்கிறாய் என்று கூறுவது போல இருந்தது, ஏதோ ஒன்று அந்த ஓவியத்தை வரைய தடுப்பது போல ஒரு உணர்வு

இருந்தும் அது என்னுடைய மனசாட்சி என்று நினைத்துக் கொண்டேன் 
 
தாகத்தில் நான் இருக்க தண்ணீர் பருக சென்றிருந்தேன்

கதிரவனுக்கு விடுமுறை அளித்தது போல அவ்விடம் முழுவதும் இருளே ஆட்சி செய்தது

தண்ணீர் மல்க கவிதை ஒன்று நான் ஓவியம் வரைந்த காகிதத்தில் கண்டேன்

அதில் நீ வரைந்த ஓவியத்தை யாரிடமும் காட்டாதே காட்டினால் நீ காணாமல் போய்விடுவாய், என்று எழுதப்பட்டிருந்தது

இருண்ட அறையில்
அரண்ட என் இதயம்
வரண்ட நாவிற்கு தண்ணீர் தேட
உருண்ட பானையில் ரத்த களம்

அப்பொழுது நான் காகிதத்தில் வரைந்த ஓவியம் என் கண் முன்னே!!

ஒற்றை உருவம்
கற்றை முடி விரித்து
நான் வரைந்த ஓவியத்துடன் மீதி உருவமும்,

மல்லிகை வாசத்தோடு,
மெல்லிய கொலுசொலியும் சேர்ந்து வர,
என் இதயம் நிமிடத்திற்கு 74 முறை துடித்தது

கனவுதான் காண்கிறேன் என்று நினைத்து கண் உறங்கி விட்டேன்

காலை நேரம் அது கண்விழித்து முழித்துக் கொண்டேன்  முழுமையாக என் ஓவியத்தை முடிப்பதற்கு ஆனால் அது ஏற்கனவே முடிக்கப்பட்டு இருந்தது

தலை விரித்த கூந்தலுடன் அழகான முகம் அது,
இருப்பினும் அந்த ஓவியம் மனதில் ஒரு இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்தியது

என் உயிர் நண்பனிடம் காட்ட நினைத்தேன் அந்த ஓவியத்தை,

காட்ட வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை நான் காட்டி விட்டேன் என் நண்பனிடம்,

அந்த காகிதத்தில் வரையப்பட்ட ஓவியத்தை அவன் முகத்தில் கண்டேன்
விகார  முகத்தோடு
அகோரமாய் சிரித்த முகம்
கூரிய பற்களோடு
சீரிய புயலாய் என்னை தாக்க 
கவிதை வரிகளின் படி நான் காணாமல் போய் விட்டேன்!!

கனவு கண்டது போதும் கண் விழித்துக்கொள் என்று ஒரு குரல் கேட்டது

விழித்துப் பார்த்தால் என் அம்மாவின் குரல் அது,,! இப்போதுதான் உணர்ந்தேன் இது அத்தனையும் கனவு என்று

உண்மையில் இப்பொழுதுதான் அந்த ஓவியத்தை வரைய தொடங்கப் போகிறேன்

இப்போ நான் இந்த ஓவியத்தை வரையவா?? இல்லை வேண்டாமா!!?
Title: Re: கவிதையும் கானமும்-016
Post by: RavaNaN on February 05, 2023, 11:02:40 am
முகமறியா முழுநிலவோ
மனமறிய  மணிசுடரோ
அறியாமல் அறிந்திடவோ
அகமகிழ அனைத்தவளோ
தெரியத்தான் தவித்திடவோ
தெரியாமல் விழித்திடவோ

கண்ணீரில் கனத்திடவோ
இதயத்தை  கரைத்திடவோ

கற்பனையில் கசிந்தவளோ
காணாத கனவிதுவோ
எண்ணத்தில்  உதித்தவளோ 
என்னுளே கலந்தவளோ
காதலும் புரிந்தவளோ
கனவோடு கலைந்தவளோ

நிழலோடு நிலைத்திடவோ
நிஜமும்தான் நீங்கிடவோ
கலையாத  கனவுலகில்
தொலையாமல் தொலைந்தேனோ
கனவுஎன்னும் கல்லறையில்
காலமெல்லாம் கிடந்தேனோ

                   -இராவணன் என்கிற பச்சபிள்ளை
Title: Re: கவிதையும் கானமும்-016
Post by: vicky on February 07, 2023, 10:40:51 am
பனிவிழும் இரவு
நனைந்தது நிலவு...
அன்று நனைந்தது நிலவு
மட்டும் அல்ல... நானும் தான்
இளையராஜாவின் இசையில்...

வேலையிலிருந்து விடுபட்டு
வீட்டுக்கு விரைந்து சென்று
கொண்டிருந்த தருணம்..
நிசப்தமான சாலை...

அதோ அங்கே எதோ
மினு மினுப்பாய்....
சற்றே அருகில் சென்றவுடன்
தெரிந்தது... அது அந்த
பெண்ணின் ஆடை...
சாலை விளக்கின்
வெளிச்சத்தில் மின்னியது...

உதவி கோரி செய்கை
செய்தால்...
இந்த நள்ளிரவில்
அபலை பெண்ணிற்காக
என் வாகனம் அவள்
இடத்தில் நின்றது....

எதுவும் பேசாமல் அவள்
கண்கள் என்னை உற்று
பார்த்தது...
அவள் முகம் பாதி
அழுகியிருந்தது....
இது பேய்....

என் உடல் உறைந்து போயின..
அந்த பேயின் கைகளில்
ரத்த கறைகள்...
கழுத்தில் ஓர் வெட்டு
இருந்தது...
என் இதயம் வெடித்து விடும்
போல துடித்தது...

பரிதாபபட்டு நின்றதின்
குற்றம் மரணமா, பேய்
பிடித்து விடுமா...
மனம் பல யோசனைகளை
பேயிக்கே கொடுத்துவிடும்
போல...  உயிர் வாழ
ஆசையின் முயற்சியில்
வாகனம் மின்னல்
வேகத்தில் சென்றது...

பனிவிழுந்த இரவு
அன்று... எனக்கு
திகில் நிறைந்த
இரவு...
   
Title: Re: கவிதையும் கானமும்-016
Post by: Vaanmugil on February 07, 2023, 07:51:38 pm
அந்தி இரவில் நான் .....

ஆவி என்ற பெயரில் அலையும்
ஒரு அவலையின் குரல்......

ஆயுள் காலம் அரையாய் ஆனது
ஆரவாரம் செய்யாமல்
அழுக்கடைந்த வீட்டில்
அங்கும் மிங்குமாய், அவதியில்
அலைகிறேன் அந்தி இரவில் நான்....

தொட துடிக்கும் உணர்வும்
தொலைந்து போனதே.....
தூசி போல ஆகினேன்
துர்ஷ்ட மரணத்தால்
துட்சமாய் அலைகிறேன் நான் .....

மக்கள் மனம் அச்சத்தில்
மங்கை என்பதையும் மறந்து
மந்திர தந்திரத்தால்
ஆவி என்றும்,
அடங்காத பேய் என்றும்
பெயரில் அலைகிறேன் நான்......

மனம் விட்டு கதறுகிறேன்
மரணம் தந்த பாவி எவனோ?
மானிட வாழ்வை பறித்தது ஏனோ?
ஆவியாய் அலைய வைத்ததும் ஏனோ? - வேறு
அகிலமின்றி அலைகிறேன் நான்.......