Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Sivarudran

Pages: 1 [2] 3
16
அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் என்ற பாடல் எனக்கு பிடிக்கும்.
இந்தப் பாடல் வைரமுத்து வரிகளில் எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் பரத்வாஜ் இசையில் அமைந்துள்ளது. தமிழ் திரைப்பட பாடல்களில் மிகவும் சவாலான திரைப்பட பாடல் இது . இந்த திரைப்படப் பாடல்ளில் வைரமுத்துவின் வரிகளில் எந்த வரியையும் தவிர்த்து விட்டு இந்த பாடலை கேட்க இயலாது அனைத்து வரிகளுமே மிகச்சிறப்பான வரிகள். எனக்கு இந்தத் திரைப்படப் பாடல் மீது தனி விரும்பம் உண்டு.‌ எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் இந்த பாடலை கேட்பதே சிறப்பு.

17
அத்தை மகளே !
அத்தை மகளே !
என் இதயம் திருடும் தத்தை மகளே !
நீ ஆடி அசைந்து நடக்கையிலே
என்  நாடி நரம்பு துடிக்குதடி !
உன் பாத சலங்கைகள் பாட்டு படிக்கையிலே
என் பாவி மனசு பாடாய்படுகிறதடி !
பட்டுச்சேலை நீ கட்டி
பாதச் சலங்கை நீ பூட்டி
தகதிமிதா தாளம் மெட்டு கட்டி
தத்தை நீ தனியே தரிகிடதோம் ஆடையிலே !
விந்தை என்னவோ தெரியலையடி !
உன் மாமன் எந்தன் மனசு வீதியிலே அலையுதடி !
பாடும் உந்தன் பாதச் சலங்கையால்
பாடாய்படும் பாவி மனதில் பல சபலங்கள்.
உன் பூவிதழ் பாதத்தில்
பூத்துக் குலுங்கும் சலங்கையின் ஜதியால்
மதிகெட்டு திரியுதடி இந்த மாமன் மனசு.
காதல் கீதம் பாடும்
கன்னி உந்தன் பாதம்
கயவர்கள் போட்ட -இந்த பல்லாங்குழி சாலையிலே
தடம் பதிக்கலாமோ !
பாவம் இந்த பைத்தியக்காரர்கள் போட்ட 
பல்லாங்குழி சாலைகள்
பதம் பார்த்து விடும்
உன் பாதத்தை !
ஆசை அத்தை மகளே !
அன்பாய் ஒரு கை நீட்டுகிறேன் !
அழகாய் உந்தன் பாதத்தை ஏந்துகிறேன் !
வா இப்படியே உன்னோடு வாழ்ந்து விட்டு
வாழ்நாளெல்லாம் கடத்துகிறேன் .

18
காதல்


கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்க்கும் !
 கடிகார நேரத்தை நொடிக்கு நொடி
கண்கள் உத்துப் பார்க்கும் ! 
கை விரல் ஐந்தும் அடிக்கடி தலைமுடியைக் கோதிக் கொள்ளும்!
காரியமே இல்லாமல் காதலி வீட்டு முன்பு
கர்ணம் போட்டு வித்தை காட்டும்!
அவள் வெளியே
எட்டிப் பார்க்கும் நேரத்தில்
குட்டி இதயம் வெளியே எகிரி குதிக்கும் !
கண்கள் உருண்டு திரளும் !
கைகள் நடுங்கி பரபரக்கும் !
காரியமே இல்லாமல் கால்கள் அங்கும் இங்கும் நடை போடும் !
அவள் அழைப்பு ஏதுமின்றி 
அலைபேசி துவண்டு கிடக்கும் !
பாழாய் போன காதலால் படாத பாடுபடுதே 
பாதி ஆண்களின் வாழ்க்கை ‌.

20
தாயை பிரிந்த கன்றானேன் !
தவித்து தனியாய் நின்றேனே !
என் தலையைக் கோதும் என் தாயின் விரல்கள் எங்கே ?
என் தனிமையை துரத்தும்
என் தந்தை விரல்கள் எங்கே ?

தரணி ஆளப் பிறந்த மகன் நான் தானென்றே !
தவறாது என்னை தலையில் வைத்தாடும்
தந்தையே !
தனியாய் நின்று தவிக்கும் உங்கள்
தலைச்சன் பிள்ளை
நான் தானே !

தறிகெட்டு ஓடியாடும் எனக்காய்
கறி கூட்டு பல சமைத்து
நறி வருது கத சொல்லி
நாலு வாய் சோறு ஊட்டும்
நல்ல தாய் நீதானே !

தேர் பாக்க போகையில
தேம்பி நான் அழுகையில
தேயாத நிலவு நான்தானுன்னு
என்னைத் தேற்றும் தெய்வங்களே !

உங்கள் முன்பிருக்கும் என்னைக்
கண்ணிருந்தும் நீங்கள் காணலையே !
உங்களிடம் வந்து வாய் பேசும் என்னை
நீங்கள் வாய் திறந்து
கூப்பிடலையே !
ஓயாமல் அழுகும் என்னை கண் சாயமல்
காத்து நின்ற காவல் தெய்வங்களே !
அடுப்பு கரியில் நான் வரைந்த
அழகு காவியம் இதுவென்று தெரிந்தும்
உங்கள் கரம் பற்றி
ஊமையாய் நிக்கிறேனே !
இங்கே ஊமையாய் நிக்கிறேனே !

21
என்னவளே அடியே என்னவளே !
என் இதயத்துக்கு என்னாச்சு ?
உன் பூவிதழ் விரல் பட்டு
என் இதயத்துடிப்பு நின்னாச்சு .
காதல் மயக்கம் வந்தாச்சு.
கன்னி உன் முகம் இதயத்தில் நின்னாச்சு.
உன் மெல்லிய விரல் வருடலால்
 என்
மெய் சிலிர்பாச்சு .
கூச்சம் கொண்டு நானும் கூனிக்குறுகி நின்னேனே !
வாட்டம் பார்த்து நீயும் வழி தேடி வந்தே வாசம் செய்து போனாயோ !
அடியே !
என் இதயத்தில் வாசம் செய்து போனாயோ !
விரலால் சிலிர்ப்பூட்டும் வித்தையை விடாமல் செய்துவரும் தத்தையே !
கொஞ்சம் விட்டுக் கொடுப்பாயா ?
என் இதயத்தை நான் தொட்டுப் பார்க்க.
நீ தொட்ட இதயம் பட்டு போகுமா ?
விட்டுப் போக மனமின்றி உன் விரலால் உரசி உறைந்து போக செய்தாயே !
கொஞ்ச நேரம் ஓய்வெடு .
உன் மெல்லிய ஐவிரல் மீண்டும் வருடவே அழகாய் ஓய்வு கொடு !
மீண்டும் ஒருமுறை நான் செத்துப் பிழைத்துக் கொள்கிறேன்.

22
என்ன கதை ?

என் கதை சொல்ல
எனக்கும் இங்கு ஆசை உண்டு.
என்னவென்று கேட்க
எனக்கு இங்கு யாரும் உண்டோ ?
என்னுள் வாழ்ந்த கதை சில உண்டு
நான் வீழ்ந்த கதை பல உண்டு .
எனக்கென எழுதி வைத்த கதை ஏதும் உண்டோ?
அதை எடுத்து சொல்ல எனக்கு ஆள் உண்டோ ?
என் எண்ணமெல்லாம்
வண்ணமாக இனியொரு கதை
எனக்கென உண்டோ ?


23
பசுந்தளிரே !
பைங்கிளியே !
பத்துமாத கருவறை இருள் பழகிப்போனது தானே உனக்கென்றே !
அஞ்சும் பிஞ்சு உனை  அடியோடு
 அழிக்க துடிக்கும் அரக்கர்கள் அலையும்
உலகில் நீ அவதி கொள்ளாதே என்றே அச்சப்பட்டே
ஆள் இல்லா அறையில் அடைத்து வைத்தாளோ உன் தாய் !
பாழாகிப்போன நாட்டில்
அங்கே பயிர்களை பலிகேட்கும்
பெருச்சாளிகளின் சலசலப்பால்
பாவம் பெத்தவள் மனதில் இங்கே படபடப்பு.

பல பிசாசகளின் பேய் கரங்கள் உன்னை பலியெடுப்பதால்
பள்ளிச் சாலைகள் உனக்கு சிறையானதோ !

பயம் கொள்ளாதே !
பாய்ந்து விளையாடும் வயதில் நீ ஓய்ந்து ஒடுங்காதே !
இந்த
ஓநாய்கள் சூழ் உலகில்
நீ ஒதுங்கி சென்றாலும்
உன்னை பதுங்கி தாக்கும்
பாவிகள் தான் இங்கே ஏராளம் !

இருண்ட அறையில்
மருண்டு போகாதே !
எழுந்து வா வெளியே !
சூரிய கதிர்கள்
ஓர் அறைக்குள்
சுனங்கிப்போவதா ?

சுடர்விட்டு வெளியே வா !
சுடுகாட்டு பேய்களை
சுட்டெரிக்க சுழன்று வா !
ரத்தம் கொதிக்க
யுத்தம் கொள்
ரெளத்திரம் பழகு
சாட்டையை சுழற்று
சரித்திரம் அதிரட்டும் !

கண்ணாமூச்சி ஆடிடும்
பட்டாம்பூச்சி நீ
கண் கலங்கி
கவலை கொள்வதா ?
உன் மீது கரம் உயர்த்தி
வரம்பு மீறும் வௌவால்களின் நரம்பறுக்க
கையில் பிரம்பு எடு !

முள் இல்லா ரோஜா
நீ என்பதால் கிள்ளி
ஏறிவாரோ ?
முன்னோர் தந்த வீரக்கலைகளை உன்னுள் உரமாக்கு
மோகம் கொண்ட மூடர்களுக்கு இனி நீ
முள்ளாகு !

24
ஏலே நா  உங்க விவசாயி !
என் வார்த்தைக்கு நீ கொஞ்சம் செவி சாயி !

தண்ணீர் விட்டா பயிர் வளர்த்தேன்
என் செந்நீர் விட்டே பயிர் வளர்த்தேன் !

என் நெஞ்சில் உறம் இருக்க
நிலத்தில் விளைய நஞ்சு உரம் எதற்கு  ?

வாஸ்து சாஸ்திரம் பார்த்ததில்ல !
வானிலை அறிக்கை கேட்டதில்ல !
விலைப்பட்டியல் ஏதும் கையில் இல்ல !
விலை உயர்ந்த ஏட்டுக்கல்வி எனக்கு தேவையில்ல !
என் பாட்டன் தந்த பாதையிலே ! பச்சமண்ணு பாசத்திலே
பாவி மக்கா உங்க பசியாத்த நா தினமும் பட்டினி கிடந்தேனே !

கழனியிலே கதிரடிக்கையிலே
நா பேசம் சொல்லும் சிதறாம
நான் வீசும் நெல்லும் சிதறாம ,
பக்குவமா பதப்படுத்தி பத்திரமா கொண்டு வந்தேனே !
பட்டணத்து மக்கா நீங்க பசியாற நா தினமும் வெயிலிலே வெந்தேனே !

நா காவிரி தண்ணீ கேட்டதுண்டு .
என் கவலை நீங்க அழுததுண்டு.
தேடிச் சோறு தின்னதுண்டு .
வானம் பார்த்து
தவித்ததுண்டு.
வாடி வதங்கி நின்னதுண்டு.
என் வயிறு வத்தி போனாலும்
நா என் மண்ணைவிட்டுப் போனதுண்டா ?

ஏலே ! நெல்லு போட்ட இடமெல்லாம் கல்லுநட்டு வச்சி 
காலி மனை விற்பனைக்குன்னு நீ போர்டு வெச்சா ?
உன் வசதிக்கு வீடு  இருக்கும் .
உன் வயித்துக்கு சோறு இருக்குமா ?
வயிறு பசிச்சா சோறுக்கு பதிலா
சுவர பிச்சியா சாப்பிடுவ ?

கையில் வேலை ஆயிரம் இருந்தும் விவசாயமே எங்க
வாழ்வாதாரமென்று வாழும் மானத் தமிழர் நாங்க நிறையா உண்டு.
கடவுள் வந்து சொன்னாலும் கழனி விட்டு போக மாட்டோம் !
வானம் பார்த்து நின்னாலும் வயலை விட்டு போக மாட்டோம் ! 
எங்க நிலத்தைத் தூண்டாடும் பாவிகளே !
நாளைக்கு உங்க புள்ள குட்டிகளை திண்டாட விட்டுறாதீங்க!
மண்ணுக்கு ஈரம் உண்டு
மனுஷ பய மனசுல ஈரம் உண்டா ?
பயிர் போனால் உயிர் போச்சு கேட்டுக்கோ சொல்லிட்டேன் !
பத்திரமா பாத்துக்கோ பசியாத்தும் என்னோட பச்ச மண்ண .....

25
பேறிவுடையவன்

26
பாசமுள்ள பள்ளிக் கூடமே !
முதலாம் வகுப்பில் உன்னைத் தேடி வர மனமின்றி
அம்மா கைப் பிடித்தே
அலறி அழுதேன் .
வழியெங்கும் விழுந்து புரண்டேன் !
புதிதாய் தைத்த சீருடை
புழுதி படிந்திட வழியெங்கும் விழுந்து புரண்டேன் !
உள்ளம் வெதும்பி
கண்கள் பிதுங்கி
கண்ணீர் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடிட
இடை இடையே ஓயாமல் ஒழுகும்
எனது ஒற்றை மூக்குச்சளியை
தன் இடக்கையால் வழித்தெடுத்து
வழியில் வீசியெறிந்தும்.
ஏற்கனவே
வாரிய தலையை வாஞ்சையின்றியே வலக்கையால் கோதிய படியும்
“வாய்யா என்  ராசாலா பள்ளி கூடம் போனா தானே பெரிய ஆளாக முடியும்" என்றே அலறிய எனது அழுகையின் இடையே அழகு வசனம் பேசியே அழைத்து வந்துவிடுவாள் உன்னருகே ! 

அய்யோ ! பள்ளிக்கூடம் வேண்டாம் என கதறி அழும் என்னை கண்டதும்
ஒரு வீச்சு நடை வேகமெடுத்து வகுப்பறையின்
வாசல் வந்தே
வா உள்ளே ,
என்ன அழுகை ?என்றே ஜோதி டீச்சர் சத்தமாக சொன்னதும் .
கப்சிப் என தொண்டையை தொட்டுவிடாமல் எனது அலறலை அடக்கிக் கொள்வேன் !
அஞ்சலி அருகே போய் அமைதியாய் அமர்ந்துக் கொள்வேன்.
இந்த வேடிக்கையே வாடிக்கையாகி போனது எனக்கு அடிக்கடி. 
புளித்தபோதும் அதிகம் பிடித்து போனது அஞ்சலி கடித்து தரும் அரைத்துண்டு ஆரஞ்சு மிட்டாய் !

ஆண்டுகள் உருண்டோட
அடி எடுத்து வைத்தேன் ஆறாம் வகுப்பில்.
பாசாங்கு செய்யாமல் தினமும் படையெடுத்தேன் பள்ளிக்கு !
அஞ்சலி அருகிலிருந்து அநியாயமாகப் பிரிக்கப்பட்டேன் நான்.

பாட வேளைகள் எல்லாம் எனக்கு பாரமானது !
கணக்கு கசப்பானது ! எனக்கு வெறுப்பானது !
பரீட்சை தாளில் பேனாவால் செய்வேன்
அறுவை சிகிச்சை !
மதிப்பெண் வரும் வேளையில் ஆசிரியை கையில் பிரம்பு இயக்கம் பெரும் !
எனக்கு சற்றே மயக்கம்
வரும் !

விளையாட்டுப் பிரிவு எனக்கு விருப்பமானது
எனவே வியாழக்கிழமை என் மனதுக்கு நெருக்கமானது !

கல்வியில் ஓரளவு நல்லவன்
கலைத்துறையில் நான்தான் வல்லவன் !
கணக்கும் நானும் கட்டிப் புரண்டு
ஒரு வழியாய் கடந்து வந்தேன் மேல்நிலை வகுப்பிற்கு !

குரல் வளம் கனத்தும்
குறும் மீசை முளைத்தும்
ஆளும் கொஞ்சம் அழகானேன் !
அறிவிலும் கொஞ்சம்
வளமானேன் !
விரைந்து சென்றது நாட்கள்
உன்னிடமிருந்து விடைபெறும் நேரத்தை நோக்கி .

உன்னோடு பயணித்த இறுதி நாளில்
உள்ளம் வெதும்பி
கண்கள் பிதுங்கி வந்தது
முதல் வகுப்பில் வந்த அதே அழுகை !
உன்னை விட்டு பிரிய மனமின்றி.

27
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நண்பர்களுக்கு வணக்கம்.
நான் இன்று சங்கீத மேகம் நிகழ்ச்சியில் எனது விருப்ப பாடலாக

96 திரைப்படத்தில் இடம் பெற்ற கரை வந்த பிறகே என்ற பாடலை பதிவு செய்துள்ளேன். இந்த பாடலை எனது விருப்ப பாடலாக தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

SONG TITLE -   THE LIFE OF RAM
MOVIE - 96
MUSIC -   GOVIND MENON
SONG WRITER    - KARTHIK NETHA
SINGER    - PRADEEP KUMAR.



யாரோபோல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே
இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய்
பிறந்தே
காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்.

இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்ட வரிகள் போல தோன்றும். ஏனோ என்னை நானே தேற்றிக் கொள்வேன். இந்த வரிகளை கேட்டு. 

இந்த பாடலின் வரிகள் அனைத்தும் மிக ஆழமானவை அந்த ஆழத்தில் இறங்கியவன் நான். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மேலும் பாடலுக்குள் மூழ்கி தான் போகிறேனே தவிர  இன்னும் மீளவில்லை. 

வாங்களே !
எல்லோரும் ஒன்றாக மூழ்குவோம் இந்த பாடலுக்குள்.

29
தனிமையின் காலடி சத்தமாய் அவளது கொலுசின் ஓசை.

தனிமையின் மொழியாய் ஆளற்ற அறையில் அவளின் உளறல்கள்.

தனிமையின் பிம்பமாய் திரும்பும் திசை எங்கும் அவளின் முகம்.

மொத்தத்தில் தனிமையே அவளாய்.
அது தருவதே சுகமாய்.
என் நாட்கள் கழிவதோ தனியாய்.

30

மானே தேனே பொன்மானே !
மரகதமே மயிலிறகே!
அன்னமே எந்தன் பொன் வண்ணமே !
மன்னவன் மாமன் உனக்கு
தாலாட்டு பாடுறேனே
தலை சாய்த்து தூங்கிடுவாயோ!
கட்டி வைரமே கனியமுதே
தேன் கிண்ணமே !
தென்னவன் நான் உனக்கு தெம்மாங்கு பாடுறேனே
தேம்பாதே நீ உறங்கு !
தந்தையாய் நான் இருப்பேன்
நீ தவிக்கயிலே தாயாவும் நான் இருப்பேன்.
காலமெலாம் காவக்காரன் உன் கூட இருப்பேன்
கண் முடி நீ உறங்கிடு .

Pages: 1 [2] 3