General Category > Cooking Tips - சமையல் குறிப்புகள்

Non - Veg Recipes

(1/5) > >>

Naveen:


ஆம்பூர் மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
காஷ்மீரி சில்லி (அ) மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
புதினா - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை - இரண்டு
உப்பு தூள் - தேவையான அளவு
எண்ணெய் - 200 மில்லி
நெய் - 50 மில்லி
எலுமிச்சை -அரை பழம்

செய்முறை

1. அரிசியை லேசாக களைந்து ஊற வைக்கவும்.

2. மட்டனை கொழுப்பெடுத்து 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.

3. வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் போக காய வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.

4. வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும்.

6. அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.

7. மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.

8. மட்டன்அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.

9. தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

10. பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்கவும்.

11. சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.

குறிப்பு

1. இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி, (பிரட் ஹல்வா, தக்காளி ஹல்வா, பீட்ரூட் ஹல்வா, கேரட் ஹல்வா) ஏதேனும் ஒரு ஸ்வீட், எண்ணெய் கத்திரிக்காயுடன் சாப்பிடலாம்.

2. பிரியாணியை வடித்து தட்டியும் செய்யலாம், குக்கரிலும் செய்யலாம். லேயராக தம் போட்டும் செய்யலாம்.

MDU:


Recipe for Pepper Chicken Chettinad

Preparation Time : 10 minutes
Cooking Time : 20 minutes
Serves : 4

Ingredients

Chicken - 1 lbs (app. 1/2 kg)
Onion - 2 (chopped)
Tomatoes - 2 (diced)
Green chilli - 1 (slit)
Ginger Garlic paste -1tbsp
Whole Garam Masala - (Cloves, Cardamom - 2 pieces each, Cinnamon, Bay Leaf - 1 piece each)
Red chilli powder - 2 tsp
Coriander powder - 1 tbsp
Cumin powder - 1 tsp
Turmeric powder - 1/4 tsp
Crushed black peppercorns - 1.5 tbsp (preferably freshly crushed)
Lemon Juice - 1/2 of a lemon
Mustard seeds - 1 tsp
Fennel seeds - 1 tsp
Curry leaves - 2 strands
Salt - 2 tsp
Coriander leaves - to garnish
Oil - 2 tbsp
Method

Marinate the chicken with the lemon juice, salt and turmeric powder.
Heat oil in a deep vessel. Add the mustard seeds and fennel seeds for tempering. After it splutters add whole garam masala.
Add chopped onions and green chilies. Saute until golden brown.
Add the ginger-garlic paste and curry leaves. Saute everything for 5 mins.
Add tomatoes and saute it until it becomes pulpy.
Add red chilli powder, coriander powder, cumin powder and about 1/4 cup of water. Saute everything for 10 mins in medium heat. When oil comes out it is the correct consistency.
Now add chicken pieces and toss well. Cover and cook for about 10-15 minutes. I prefer this as a dry dish so I do not add any water. If you want gravy, add about 1 cup of water.
After the chicken is cooked, add the crushed pepper powder and check for seasoning. Mix well and switch off.
To garnish add chopped coriander leaves and some more fresh curry leaves.

ரதி:
தேவையான பொருட்கள்:
 1. கோழி இறைச்சி - 500 கிராம் (எழும்புகள் நீக்கப்பட்டது) 2. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 3. தயிர் - 1 கப் 4. கரம் மசாலா - 1 தேக்கரண்டி 5. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி 6. உப்பு - தேவையான அளவு 7. இஞ்சி விழுது - 1 டீஸ்பூன் 8. பூண்டு விழுது - 1 ½ தேக்கரண்டி 9. நெய் - 3 தேக்கரண்டி 10. வறுத்த வெங்காயம் - 1 கப் 11. பாசுமதி அரிசி - 2 கப் (நீரில் ஊறவைத்தது) 12. மசாலா - தேவைக்கேற்ப 13. உலர் பழங்கள் - 1 கப் (நறுக்கியது) 14. குங்குமப்பூ தண்ணீர் - 2 டீஸ்பூன் 15. ரோஸ் - 1 டீஸ்பூன் 16. கீவ்ரா வாட்டர் - 1 டீஸ்பூன்


செயல்முறை: 1. ஒரு பெரிய கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அதனுடன் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி மற்றும் பூண்டு விழுது, உப்பு மற்றும் கரம் மசாலா தூள் போன்றவற்றைச் சேர்க்கவும். 2. அனைத்து மசாலாப் பொருட்களையும் நன்கு கலந்து அதில் சிக்கன் துண்டுகளை சுமார் 2 மணி நேரம்ஊற விட வேண்டும். 3. ஒரு ஆழமான அடிப்பாகமுடைய கடாயில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். நெய் சூடானவுடன், அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக கிளறவும். 4. அதனுடன் பொறித்த வெங்காயம் மற்றும் உலர் பழங்களைச் சேர்த்து, சிக்கன் துண்டுகள் அரை வேக்காடு வேகும் வரை வேக விடவும். சிக்கன் துண்டுகள் வெந்த பின்னர் அதை தனியே எடுத்து வைக்கவும். 5. ஒரு கடாயை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இப்போது, கொதிக்கும் தண்ணீரில் மசாலா பொருட்களைச் சேர்க்க வேண்டும். 6. கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்த பாசுமதி அரிசியைச் சேர்த்து அதை முக்கால் திட்டம் வரை வேக விடவும். 7. இப்போது, ஒரு பெரிய பாத்திரத்தின் அடியில் கோழி துண்டுகளை வைத்து ஒரு அடுக்கை உருவாக்கவும். அதன் மீது வேக வைத்த அரிசியை பரப்பி மற்றொரு அடுக்கை உருவாக்கவும். 8. அதன் மீது குங்குமப்பூ தண்ணீர், ரோஸ் வாட்டர், கீவ்ரா வாட்டர், உலர் பழங்கள், வறுத்த வெங்காயம், மற்றும் துண்டாக்கப்பட்ட கொத்தமல்லியை சேர்ர்க வேண்டும். அதன் பின்னர் அதை ஒரு அலுமினிய தாள் கொண்டு மூடவும். 9. உங்களுக்கு பாரம்பரியமான பிரியாணி வேண்டும் எனில் பாத்திரத்தை அதனுடைய உண்மையான மூடி வைத்து மூடி, அதன் பின்னர் இடைவெளியை மாவை வைத்து அடைத்து விடுங்கள். 10. இப்போது, மிகவும் குறைந்த தீயில் பிரியாணியை சுமார் 20 நிமிடங்கள் சமைக்க வேண்டும். 11. பிரியாணி மணம் உங்களின் மூக்கை துளைக்கும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். இப்பொழுது உங்களுடைய கோழி பிரியாணி பறிமாற தயாராக உள்ளது. நீங்கள் வார இறுதியில் குடும்பத்துடன் ஒரு பார்ட்டி கொண்டாடுவதாக இருந்தால் இந்த சிக்கன் பிரியாணியை தயார் செய்து உங்களின் விருந்தினர்களை ஆச்சரியப்படுத்துங்கள். அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்! அத்துடன் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த அற்புதமான மற்றும் எளிமையான சிக்கன் பிரியாணி செய்முறை குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள மறக்க வேண்டாம்

ரதி:
தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 1-2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை - சிறிது குடைமிளகாய் - 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு ஊற வைப்பதற்கு... இறால் - 20 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் சேர்த்து பிரட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை போட்டு 1 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும். பின்பு அதே வாணலியில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, இறாலையும் போட்டு பிரட்டி விட வேண்டும். பின் அதில் கரம் மசாலா சேர்த்து 4-5 நிமிடம் நன்கு பிரட்டி விட்டு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், இறால் பெப்பர் ப்ரை ரெடி!!!

EWA:

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version