Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Yash

Pages: 1 ... 3 4 [5]
61
மிகவும் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்  கொண்டிருக்கிறீர்கள் அர்ஜுன் சகோ!  அதற்கு
 என்னுடைய பாராட்டுக்கள்

Movie Name-Poovellam Kettuppar  (பூவெல்லாம் கேட்டுப்பார்)

Song - Irava Pagala

Music-Yuvan Shankar Raja

Singers
Hariharan, Swetha Mohan

Lyrics
Palani Barathi

Fav Lyrics:

சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா
கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம் தானா!!


யுவன் இசையில் போதை இருக்கிறது என்பது உண்மையே.!  படம் வந்த போது அந்த பாட்டின் வரிகள் எனக்கு புரியல அப்போ வயது எனக்கு 12

இப்ப மொட்டை மாடியில் மாலை 6 மணி அளவில், சிறு மழை தூறல் உடன், கையில் சூடான தேனீர் உடனும் இந்த பாடலை கேட்க மனதில் ஒரு கற்பனை காதலி தோன்றுவாள்.

எதற்கு வேண்டும் நிஜ வாழ்க்கையில் காதலி, யுவன் சங்கர் ராஜா பாடல்கள் இருக்கிறது எனக்கு கற்பனையில் காதலிக்க.  இந்த பாடலை  அந்த கற்பனை காதலிக்கே Dedicate செய்கிறேன்


62
Own Poems - சொந்த கவிதைகள் / Re: Azhagiyea
« on: October 07, 2022, 05:49:36 pm »
அழகு சாதனங்களுக்கும்   அழகுஊட்டியவள் என் Jesi🥰♥️

63
வாழ்க்கைத் துணையாக காவியா தங்கையாக திவ்யா😊❤️

அழியா கண்மை விழியிலும்
அகல்விளக்கு ஒளியிலும் அழகாகிறாள் காவியா😊❤️

வா என்றால் வரமாட்டேன் என்றும்
வராதே என்றால் வருவேன் என்றும்
சத்தமிட்டு எதிர்மறை பேசும்போது அழகாகிறாள்  திவ்யா😊❤️

சாமி அறையில் நனைந்த கூந்தலுடன்
சமையலறையில் கலைந்த கூந்தலுடன்
அழகாகிறாள் காவியா😊❤️

கொட்டித் தீர்க்கும் மழை போல திட்டி தீர்க்கும் போதும்
சோலையும் பூக்கும் பூக்களை பிடித்து விளையாடும் போதும் அழகாகிறாள் திவ்யா😊❤️

காசநோய்க்கு மருந்து கண்ட உலகம்
காவியா மீது கொண்ட ஆசை நோய்க்கு என்ன செய்யும்😊❤️

சூரியனை சுற்றும் இப்பூமி போலத்தான்  என்னை சுற்றும் காவியாவின் காதலும்,

என்னைச் சுற்றி எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும்  என் மீதான இயல்பில் சற்றேகுறையாத   திவ்யாவின் காதலும்

திக்கி திணறுகிறது இந்த காதல் என்னும் போட்டி மழையில்😊❤️

உன்னுடனான உரையாடல் திகட்டிச் சலிப்பதற்கு முன் தீர்ந்து போன இரவை திட்டித் தீர்க்கிறது என் மனம்.😊❤️

திவ்யாவுடனான பல்லாங்குழி உப்பு மூட்டை  என ஊர்ந்து ஆடிய நினைவுகளை மீண்டும் கேட்கிறது என் மனம்😊❤️

காவியா என் தோளில் சாய்ந்த தருணம்  வானிலிருந்த நட்சத்திரங்களை காண கூட மனம் மறுத்தது😊❤️

திவ்யா என் கரங்களை பிடித்த தருணம் தொட்டில் தொடங்கிய இந்த உறவின் அர்த்தம்   கற்றையாய்             
மனம் சிரித்தது😊❤️

எப்படி விட முடியும் இந்த இரு உறவுகளை,

சிரத்தை கொடுத்தேன் கவிதாவிற்கு என்றும் துணையாய் தலை சாய்பதற்காக😊❤️

கரத்தை கொடுத்தேன் திவ்யாவிற்கு என்றும் அவளின் பாதுகாப்பிற்காக😊❤️

       ~அந்த புகைப்படத்தை பற்றிய என்னுடைய கிறுக்கல்கள்🧢

64
வணக்கம் அர்ஜுன் சகோ!! 😊இங்க முதல் முறையாக பங்கேற்கிறேன் வாய்ப்பு அளித்ததற்கு நன்றி❤️

பிடித்த பாடல்- வெய்யோன் சில்லி
திரைப்படம்-சூரரைப் போற்று
இசையமைப்பாளர் -ஜிவி பிரகாஷ்
நடிகர்கள்-சூர்யா, அபர்ணா பாலமுரளி

பிடித்த பாடல் வரிகள்

யாருக்கெல்லாம் இந்த பொம்மியின் கதாபாத்திரம் பிடிக்கும்.??! jus Stay Connected With me😇

இந்த வரிகளைப் பாருங்கள் "சீயஞ் சிறுக்கிகிட்ட ஜீவன தொலைச்சிட்டேன்"..சீயம் என்பது சிங்கத்தைக் குறிக்கும் ஜீவன் என்பது உயிரைக் குறிக்கும்.சிங்கம் போன்று உள்ளவளிடம் என் உசுரையே தொலைத்து விட்டேன் என்றுதான் அந்த பாடல் ஆரம்பிக்கும்😇❤️

அடுத்த வரிகளைப் பாருங்கள். "வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா".இங்கு வெய்யோன் என்பது சூரியனைக் குறிக்கும் சில்லு என்பது ஒரு துண்டு , சூரியனில் இருந்து வந்த ஒரு துண்டு என  அந்தக் கதையில் அவளது பாத்திரத்தை அழகாக எடுத்துச் சொல்லி இருப்பார்கள்😇❤️

பொண்ணு பார்க்க போவதை மாற்றி மாப்பிள்ளை பார்க்க செல்வது போல் ஒரு வேலை இல்லாத ஆணை திருமணம் செய்துகொண்டு அவனுடைய கனவுகளுக்கு பக்கபலமாய்  தனது பேக்கரி கடை மூலம் நின்று வழக்கமான சம்பிரதாயங்களை உடைத்தெறிவாள் அந்த பொம்மி😇❤️

இந்த பாடலை  பொம்மி என்ற அந்த கதாபாத்திரத்திற்கே Dedicate செய்கிறேன்😇❤️

65
Birthday Wishes / Re: Happy Birthday NATURE LOVER
« on: September 25, 2022, 12:05:31 pm »
Happiee Bday Brother.. Stay Blessed 🎂💕❤️🎉

66
Birthday Wishes / Re: Happy Birthday AslaN
« on: September 24, 2022, 06:01:33 am »
Hai Brother, A very Hapiee B'Day to Yu 🎂❤️


     
                May Yur Bday be filled with Laughter 😊🎉. Have a Smashing Bday ❤️
                                         
                                                                                      ~🧢

67
மரமே உன்னை காதலிக்கிறேன் அவள் என நினைத்து!!

மரம் எத்தனை அன்பு நிறைந்தவள்!!

பளபளக்கும் பச்சை பட்டாடை அணிந்தவள்!!

இயற்கை தாயாக வளம் வருகிறாள்  அவள்!!

உலகிலுள்ள ஜீவன்களுக்கு உயிர் மூச்சாக விளங்குகிறாள் அவள்!!

பூகோள நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காடுகளில்!

பறவைகளின் குரல் இசைகளும்
வியக்க வைக்கும் வன விலங்குகளும்
சலசல என பாயும் நதிகளும்
 தூய்மையான காற்றும் கொடுத்து மனதிற்கு அமைதியை அல்லவோ அள்ளித் தருகிறாள் !!
           
கூவும் குயில் தாவும் குரங்கென எத்தனை  உறவுகளடி உனக்கு !!

இவள் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எத்தனை உறவுகள் இருக்கிறது மனிதர்களுக்கு,!!

பல உயிர்களைத் தாங்கும் ஒற்றைத் தலைமைதான் இவள் !!

வழிப்போக்கர்களுக்கென பூமித்தாய் வழங்கிய நிழற்குடையே அவள்!!

சிந்தித்தபடி  இருக்கிறேன்!புயல் சூறாவளி என காற்று வீசும் திசையில் நீ வளைந்து கொடுத்து வாழ்வது ஏனோ என்று!!!!

மனிதனும் அவளிடம் கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்க்கையில் வளைந்து கொடுத்து வாழ்வது  எப்படி என்று.!!!!!!

                                                                                 ~Thank You🧢

68
#MyPlace

Wanna Date for me 19/09/2022

Kindly Make it  Team GTC❤
     
                            ~Thank You🧢

Pages: 1 ... 3 4 [5]