Knowledge Based Category > Stories - கதைகள்

சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா

(1/1)

Damien666:
சிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா
 -ராஜேஷ்குமார்
( சிறுகதை )
நியூயார்க் நகரம் அந்த சாயந்தர வேளையின் சாம்பல் நிற இருட்டைத் தின்று விட்டு நியான் விளக்கொளியின் வெளிச்ச உபயத்தால் ஒரு செயற்கைப் பகலுக்கு தயாராகிக்கொண்டிருந்தது,

இருபத்து மூன்று மாடிகளோடு, ஒரு கண்ணாடி, செவ்வகப் பெட்டி போல நின்றிருந்த 'ஹோட்டல் ஹெவன் டச் இன்டர்நேஷனல் ஹோட்டலின் ரூஃப் கார்டன் ரெஸ்டாரென்டில் நானும் கயலும் பக்கம் பக்கமாய் உட்கார்ந்து காரட் வெள்ளரி ஸ்டஃப் செய்யப் பட்டிருந்த ப்ரெட் சீஸ் ரோலை செல்லமாய் முன்பற்களில் கடித்து, அதை கடைவாய்க்கு அனுப்பி நிதானமாய் அரைத்து ஃப்ரஷ் ஜூஸ் உதவியால் விழுங்கிக்கொண்டிருந்தோம்.

நீங்கள் மைண்ட் வாய்ஸில் நினைப்பது சரிதான். கயல் என் காதலி.

நான்?'

வரத், அப்பா எனக்கு வைத்த முழுப் பெயர் வெங்கடரமணா சுந்தர வரத ராஜன். யார் என்னை 'வரத்' என்று கூப்பிட்டாலும் கிடைக்காத போதை, கயல் கூப்பிட்டபோது எனக்குக் கிடைத்தது.

நான் அவளைக் காதலிக்க ஆரம்பித்து போன திமிஷத்தோடு 4,320 மணி நேரம் முடித்துவிட்டது. ஒரே ஐடி. கம்பெனியில் எதிர் எதிரே உட்கார்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, எங்களுக்குத் தெரியாமல் கிடைத்த இடைவெளியில் பச்சைப் பசேல் என்று காதல் செடி துளிர்த்துவிட்டது. நான் அடித்த மொக்கை ஜோக்குகளுக்குக்கூட கயல் விழுந்து விழுந்து சிரித்ததால், அந்தக் காதல் செடி இப்போது செழிப்பாய் ஒரு மரம் போல் வளர்த்துவிட்டது.

ஒவ்வொரு வார இறுதியிலும் இந்த 'ஹெவன் டச்' ஹோட்டலுக்கு வந்து சிக்கன் பர்கரையும் சீஸ் ரோலையும் வயிற்றுக்குக் காட்டாவிட்டால், அமெரிக்கா எங்களுக்கு இருண்ட கண்டமாய் தெரியும்.

இன்றைக்கும் இந்த ஹோட்டலில் அந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டிருந்தோம்...

இதுவல்லவா பொன்மாலை நேரம்❤️
இருப்பினும் திருப்புமுனைகள் உள்ளன... தொடர்ந்து படிக்கவும் https://www.vikatan.com/literature/arts/128656-rajeskumar-short-story


RiJiA:
NICE Damien666 👍

Navigation

[0] Message Index

Go to full version