POEMS - கவிதைகள் > Own Poems - சொந்த கவிதைகள்

வான்முகிலின் கவிதை சுவடுகள்....

<< < (2/11) > >>

Vaanmugil:
கனா.....

விழி இரண்டும் உறக்கத்தில்
மனம் மட்டும் கனவின் மிதக்கத்தில்....
நினைக்க நினைக்க இன்பம்
நினைவில் ஒரு துன்பம்
உன்னோடு நான்,
இன்பமே.....
நிஜம் இல்லை, நிழல் என்றாலும்
துணை இல்லையே,
துன்பமே.......
கனா ஒன்றே வாழ்வின் நிலையானதே......

Ishan:



கவிதைக்கு உயிர் அதில் இருக்கும் வார்த்தைகள் தான்.வாண்முகில் உன் கவிதை அழகு என்று சொல்லுவாத இல்லை உன் சிந்தனை அழகு என்று சொல்லுவாத.... என்னிடம் வார்த்தைகள் இல்லை உன்னை பாராட்ட... ரொம்ப அழகா இருக்கு வாண்முகில் ♥️♥️

Vaanmugil:
முதலும் நீ.....முடிவும் நீ....

எதிர்பாராமல் எனக்குள் வந்த
முதல் காதலும் நீ.....

எனக்குள் என்னவன் ஆன
முதல் உறவும் நீ......

ஏராள கனவுகளையும்,
உணர்வுகளையும் தந்த
முதல் உரிமையும் நீ......

எண்ணிலா கவிதைகளை
வார்த்தைகளால்
வடிவமைத்த கவிதை நீ.....

என்னருகில் நீ இல்லை
என்ற போதிலும்
என் மனதில் என்றும்
முதலும்......முடிவுமாய் நீ........

Vaanmugil:
தூது போ தென்றலே

தூது போ தென்றலே....❤❤❤
தூது போ தென்றலே...❤❤❤

மன்னவனின் செவிகளும்,
தேகங்களும் சிலிர்க்க
மங்கையின் செய்தியை
தூதாக கொண்டு போ தென்றலே.....

மன்னவனின் வருகையை எண்ணி
மங்கையவள் வழி வாசலில்
விழி வைத்து காத்திருக்கிறாள் என்றும்.....❤❤❤

மன்னவன் மணவாளனாய் ஆகும்
தருணங்களை எண்ணி
மங்கையிவள் மணமகள் கோலத்தில்
சிந்தனை கனவில் காத்திருக்கிறாள் என்றும்.....❤❤❤

மன்னவனின் சுட்டு விரல் பிடித்து
அக்னி சாட்சியாய் வலம் வர,
அம்மி மிதித்து அருந்ததி பார்க்க
மனதுக்குள் கோட்டை எழுப்பி
காத்திருக்கிறாள் என்றும்.....
என்னவனிடம் தூதாக கொண்டு போ தென்றலே.....❤❤❤

Vaanmugil:
தரிசு நிலம்

கழனியிலே கால் பதிச்சு......
காலமெல்லாம் நெல் விதைச்சு.....
அரைஜான் வவுத்துக்கு
அல்லும் பகலும் பாராது
அயராது உழைத்தேனடா....

பட்டினியாய் நான் கிடந்தேன்
பச்சை மண்ணு போல நான் காத்தேன்.....
வர்ணனின் கருணை இல்ல....
வாடிய தோரணையில் என் பிள்ள....

பெண் பிள்ளையாய் நான் வளர்க்க....
பேரம் பேசி எவனோ விலை கேட்க....
பெத்த வவுறு எரியுதடா.....
பாலும் மனம் நோகுதடா....
உசுர கிள்ளி போகுதடா.....

விளைஞ்சதெல்லாம் என் வியர்வை....
விலை பேச வேலையில்ல...
விதைச்சவன் உசுரு கண்ணீருல
விட்டேனைய்யா தரிசு நிலத்துல.........

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version