Advanced Search

See likes

See likes given/taken


Posts you liked

Pages: [1] 2
Post info No. of Likes
Program Feedback - பின்னூட்டங்கள் (சங்கீத மேகம்)
 " சங்கீத மேகம்" - இது வாரம் தோறும்  சனிக்கிழமை இந்திய நேரம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.உங்கள் விருப்ப பாடல்களை தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி.

SANGEETHA MEGAM : It is a weekly show that airs on Saturdays at 9 PM IST.
its a show that hosts your favorite songs.



இங்கே பின்னூட்டங்கள் /  கருத்துக்கள் பதிவிடும் பொழுது   நிகழ்ச்சியின் எண்  அல்லது ஒளிபரப்பான தேதியை பதிவிட்டு பின்னூட்டங்களை இடுங்கள்.  எந்த வார நிகழ்ச்சியை பற்றி உங்கள் கருத்துக்களை  பதிவிடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.



While posting feedback/comments here, Please include the episode number or broadcast date.  It's helpful to know which week's show you're posting your comments about.

January 09, 2023, 10:58:25 am
1
Program Feedback - பின்னூட்டங்கள் (கவிதையும் கானமும்)


  " கவிதையும் கானமும் " - இது வாரம் தோறும்  ஞாயிற்றுக்கிழமை  இந்திய நேரம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.பொதுமன்றத்தில் கொடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு ஏற்ப நீங்கள் பதிவிட்ட உங்கள்  கவிதைகளை தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி

KAVITHAIYUM GAANAMUM : This program is telecast every Sunday at 9 PM IST.
A program that organizes your poems that you have posted according to the given photo in the forum.



இங்கே பின்னூட்டங்கள் /  கருத்துக்கள் பதிவிடும் பொழுது   நிகழ்ச்சியின் எண்  அல்லது ஒளிபரப்பான தேதியை பதிவிட்டு பின்னூட்டங்களை இடுங்கள்.  எந்த வார நிகழ்ச்சியை பற்றி உங்கள் கருத்துக்களை  பதிவிடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ள இது உதவியாக இருக்கும்.



While posting feedback/comments here, Please include the episode number or broadcast date.  It's helpful to know which week's show you're posting your comments about.

January 09, 2023, 11:06:42 am
1
Program Feedback -பின்னூட்டங்கள் ( GTC 1.ANNIVERSARY SPECIAL PROGRAMS)









January 16, 2023, 05:39:14 am
1
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12
நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12


Dear Friends,

GTC FM has decided to broadcast songs handpicked by GTC Users , So that users get a chance to share their taste of music with listeners....We name the this event as "Nenjil Nindra Raagangal"

Let music bind us further in our journey of friendship.

------------------------------------------------------------------

HOW TO PARTICIPATE?
To decide the slot order that will be telecast, the interested users may find a place by typing "My Place"  in the Nenjil Nindra Raagangal Thread.

HOW MANY SONG YOU CAN REQUEST?
Maximum of 12 Songs.

IN WHICH ORDER SONG REQUESTS WILL BE PLAYED?
The slots will be arranged based on first come first serve basis & Each Day only one user's  songs will be played in GTC Fm.


While Posting in NNR  Please remember that you can post in days from MONDAY to FRIDAY ( Please do not enroll dates in SAT & SUN as we have weekly programs on these days)

July 02, 2023, 02:12:44 pm
1
Re: கவிதையும் கானமும்-029 பிரிவில் ஒரு மழைத்துளி



அந்தி சாயும் மாலை நேரம்..
அழகான மேகங்கள் கடந்த    தூரம்..
நானோ..
பரதம் கற்றுக்கொண்டு
பள்ளி விட்டு வந்த நேரம்..
அழகான தூரல்கள்..
இடைவிடா சாரல்கள்..
துள்ளி துள்ளி குதிக்கும்
துள்ளிமான் போல..
துள்ளிக்குதித்து ஓடியது இந்த குட்டி மான்..
மழையை ரசித்தபடி..
மனசெல்லாம் மங்களமாய்..
பல வண்ண கனவுகளுடன்..
கரை கடந்து நடந்து வந்தேன்..
அம்மா அதிர்சம் செய்திருப்பாள்.
அப்பா அழைத்துக்கொண்டு வெளியே செல்வார்..
இந்த நாள் என் பொன்நாளா?
இல்லை பொன்விழா கொண்டாடும் நாளா?
ஏகப்பட்ட ஆசையுடன்..
எதிர் வந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன்..
எதை நான் இங்கு சொல்வது?
என்னுடைய காதல் மழை என்னுடன் பயணத்தில்..

எதிர்ப்பார்ப்பில் வீட்டை அடைந்தேன்..
எத்தனையோ புது முகங்கள்..
எதற்காக என் வீட்டில் என்று
எத்தனை கேள்விகள் என் மனதில்..
இரண்டு கண்கள் சிவந்து வர..
எதற்கு என என் மனம் தடுமாற.. அப்பா இங்கு மறைந்துவிட்டார் ..
இடியை என் நெஞ்சில் இறக்கி வைத்தார்..
கதறிய நான்..
கட்டிலில் இருந்த என் தந்தையை
கட்டி அணைத்து கதறினேன்..
காலை பள்ளி விட்டு சென்ற தந்தை..
கட்டிலில் கண் மயங்கி கிடக்கிறார்..
காண்பதெல்லாம் கனவென
கல் நெஞ்சை தேற்றுகிறேன்..
கண்ணில் வடிந்த நீர்த்துளிகள்
எல்லாம்
மழைத்துளிகள் மறைத்து கொண்டது..

நேரம் இங்கு நெருங்கவே..
நேர்மை மனிதரின் ஊர்வலம்..
ஆசைப்பட்ட மழைத்துளிகள்..
பன்னீர் துளிகளாய் தெளித்து சென்றது..

முழுதாய் உடைந்தேன்..
எங்கும் அழைத்து செல்லும் அப்பா...
இங்கும் அழைத்துச் செல் என்று கதறினேன்..
மயங்கி விழுந்தேன் ஓர் மடியில்..
எழுப்பியது என் தாய் கண்ணீர் துளிகள்...
எழுந்து சென்று தேடியும்..
என் அப்பா அங்கு இல்லை..
பிஞ்சு மனம் பித்து பிடித்து நின்றது...

விட்டு சென்ற நாற்காலி உண்டு..
அதில் அமர்ந்து என் தந்தை மடி கண்டேன்..
அவர் விட்டுச்சென்ற கண்ணாடியில்
என் கண்ணீர் துளிகளாய் காண்கிறேன்...
எதற்கு இந்த கவிதை என நினைத்தேன்.
எழுதிவிட்டு மீண்டும் அமர்ந்தேன்..
நினைவெல்லாம் நீதான் அப்பா..
நினைத்து கண்ணீர் வடிக்கிறேன் நீதான் மீண்டும் வரவேண்டும் அப்பா..

மழையும் இங்கு ஓய்ந்தது..
மனமும் இங்கு காய்ந்தது..
பொன்நாள் என்றும் பொன்விழா     என்றும்,
என் காதல் மழையோடு வந்த எனக்கு ,
இயற்கை தந்த அன்பு பரிசு
" பிரிவின் வலி"


              NillA

August 09, 2023, 11:13:57 pm
1
Re: நெஞ்சில் நின்ற ராகங்கள் - Nenjil Nindra Raagangal #12 NNR PLACE ON 11 AUGUST
August 10, 2023, 04:47:34 pm
1
Re: Program Feedback - பின்னூட்டங்கள் (கவிதையும் கானமும்)
TODAY Kavithaiyum Gaanamum 029 DATE 》》20~08~23




கவிதையும் கானமும் 029 அத்தியாயம்,

THANK YOU TO ALL  GTC ADMIN'S,STAFF'S & FRIENDS FOR SUPPORTING US ALWAYS👍

SPECIAL THANKS  To All My Prince & Princess,
Vaanmugil Siss❣,Shruthi Siss,❣Sky_blue 💐NillA Siss❣, Donmama 💐,Eagle13 💐, & NATURE LOVER 💐TO ALL👏👏👏👏👏

ALL KAVITHAI  BEAUTIFUL CONGRATS❣
KG LE Niraiya Putiye Kavinjargal PARTICIPATE Pandringe Happy To See That Keep Supporting 👏👏👏


THANKS TO CB❣

CB ALWAYS  EDITING  KING👏


KG TIME  LE  NARAIYA  BANNERS  VANTUCHU THANK YOU SO MUCH FOR  BEAUTIFUL BANNERS❣

PRGM TIME LE NA YARAKACHUM NAME TAG PANNI THANKS SOLAME VIDURKELAM SRY FOR THAT..THANK YOU SO MUCH❣

August 21, 2023, 09:54:04 am
1
கவிதையும் கானமும்-030 உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-030


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.

August 21, 2023, 09:55:14 pm
1
Re: Program Feedback - பின்னூட்டங்கள் (சங்கீத மேகம்) SANGEETHA MEEGAM🎵..FEEDBACK 09/09/23


 💫SUPERB  HOSTING DHIYA  SISS❣💐👏..AS USUAL  SINGING  GOOD  WITH CLEAR VOICE KEEP GOING SISS💐👏

💫 Don Always: SCRIPT WRITING ALWAYS  TO GOOD..KEEP WRITING 👏👏

💫EDITING DJ NILLA: RJ TO DJ  ORU PUTIYA PARIMAANAM....Editing  Good,,, BGM & COMEDY  TRACK VERY NICE...Editing  Kekum Potu Terithu Alot Of  EFFORTS  Poturkinge👏👏
Innum Niraiya Saatikke Ennudaiya Vaaltukkal NillA  Siss❣

💫Don Always: NillA  Siss File Ku  Editing  It Was To Good ..Keep Rocking 👍


💫 USER SONGS  SELECTION  ALL SUPERB👍

💫ALL THE VERY BEST SM TEAM👍

CONGRATS  TO SM TEAM: BULLET, EDITOR SIRPI, RJS VAANMUGIL SISS❣,DHIYA SISS❣, NILLA SISS❣ & SCRIPT  WRITER  DON ALWAYS 👏

September 10, 2023, 12:13:09 am
1
சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#041


சங்கீத மேகம் நேயர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு..


புதிய நண்பர்களும் இந்த சங்கீத மேகம் நிகழ்ச்சியில் வாய்ப்பு பெரும் விதமாக ...ஒவ்வொரு வாரமும் புதிய நண்பர்களுக்கே வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் .. தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பிடிக்கும் நண்பர்களுக்கு ... புதிய நண்பர்கள் அந்தந்த வாரங்களில் பதிவுகளை நிறைவு செய்யவில்லை என்றால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும்.

அதாவது முதல் வாரம் கேட்ட நபர்களை விட  இரண்டாம் வாரம் புதியதாய் பங்குபெறும் நண்பர்களுக்கே நிகழ்ச்சியில் முன்னுரிமை  அளிக்கப்படும்.

ஞாயிற்று கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் பதிவுகளை  புதியதாய் பங்குகொள்பவர்கள் நிறைவு செய்யாத பட்சத்தில்  .... தொடர்ச்சியாக இரண்டாம் வாரம் கேட்கும் நண்பர்களுக்கு   வாய்ப்பு வழங்கப்படும்..

அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற நோக்கத்தோடு இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


உதாரணமாக .....

கடந்த வாரம் சங்கீத மேகம் 39இல் பங்கு பெற்ற  iamcvr, Nilla, Chaan, Roja, Cute, Karthik, Shaa ஆகியோரை தவிர்த்து மற்ற நண்பர்கள் இந்த சங்கீத மேகம் 40இல் பதிவு செய்யும் பட்சத்தில் ..அவர்களின் பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்..   ஒவ்வொரு வாரமும் இதே போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படும்.


சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#041


நிகழ்ச்சி               : சங்கீத மேகம்
ஒளிபரப்பு நேரம் :  சனிக்கிழமை இரவு  ( இந்திய நேரம் ) 09:00 மணி

நிகழ்ச்சி பற்றிய குறிப்பு :
உங்கள் விருப்ப பாடல் ஒன்றை தேர்வு செய்து (திரைப்படத்தின் பெயர் / பாடல் )அதை பற்றிய குறிப்புகள் எழுதலாம் .  யாருக்கேனும் Dedicate செய்ய விரும்பினால் குறிப்பிடலாம்.

பங்கேற்கும் விதம் :
சனிக்கிழமை இரவு இந்நிகழ்ச்சி  ஒளிபரப்பாகும் பொழுது அடுத்த வாரத்திற்கான  பாடலை பதிவிடும் விதமாக இந்த பகுதியில்  வாய்ப்பு உருவாக்கப்படும் . ஏதேனும் டைப்  செய்து பதிவிட்டு உங்களுடைய இடத்தை பதிவு செய்யலாம் .
பின்னர் நீங்கள் இட்ட பதிவை  செய்து ... நீங்கள் கேட்க விரும்பும் பாடல் மற்றும் திரைப்படத்தின் பெயரை தெளிவாக பதிவிட வேண்டும்.

வரைமுறைகள்:

ஞாயிற்றுகிழமை இரவு 12 மணிக்கு முன்பாக பதிவை நிறைவு செய்ய வேண்டும். 
திங்கள் கிழமை அதிகாலை 00:01 மணிக்கு இந்த பகுதி லாக் செய்யப்படும்.

ஒருவருக்கு ஒரு பதிவு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
 


----------------------------------------------------------------------
முதலில் பதிவிட்டு பதிவை நிறைவு செய்த முதல் 7 நபர்களின் பாடல்கள் மட்டுமே சனிக்கிழமை ஒளிபரப்பாகும் சங்கீத மேகம் பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-----------------------------------------------------------------------

September 10, 2023, 07:22:35 pm
1