Advanced Search

See likes

See likes given/taken


Your posts liked by others

Pages: [1]
Post info No. of Likes
Re: சங்கீத மேகம் - Sangeetha Megam : Week#038 படம்- வனமகன்
பாடல் - சிலு சிலு வென பூங்காற்று
இசை - Harris Jeyaraj
பாடியவர்கள் - விஜய் யேசுதாஸ்

சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத
வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா
அலை அலையாக ஆனந்தம் தாளமும் போட
பூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா

மேல் கீழாக அருவி எல்லாம்
இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்
சொல்லுக்கண்ணம்மா
வானைத்தாங்கும் மரங்களெல்லாம்
அந்த இரகசியம் சொல்லு செல்லக்கண்ணம்மா

"அன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே
பாறைக்குள்ளும் பாசம் நிழையோடுதே
வெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே
சொர்க்கம் இதுதானம்மா
மேலே கிடையாதும்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா

முட்கள் கிழிந்தாலுமே மொத்தம் அது ஆகுமே
சோகம் கூட இங்கே சுகமாகுமே
வேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே
தெய்வம்கூட இங்கே பசியாறுமே
இது நாம்தானடி மாறிப்போனோமடி
மீண்டும் பின்னே போக வழி சொல்லடி

[u]பிடித்த வரிகள் :[/u]

"அன்பின் நிழல் வீசுதே ..
இன்பம் விளையாடுதே..
பாறைக்குள்ளும் பாசம் நிழையோடுதே..
வெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே..
மேடை இன்றி உண்மை அறங்கேறுதே..
சொர்க்கம் இதுதானம்மா

மேலே கிடையாதும்மா
சொற்கள் கொண்டு சொன்னாலும்
புரியாதம்மா""


யாருக்கு dedicate செய்வது..

" இந்த இரண்டு சரணங்களிலும் இயற்கை அன்னையின் நவரசங்கள் கொட்டி கிடக்கின்றன..

கண்களை மூடிக்கொண்டு இந்த பாடல் ரசிக்கும் பொழுது மலைச்சாரல், காடுகள், அருவிகள் என என்னை அறியாமல் என் மனம் இயற்கையோடு ஒட்டிக்கொள்ளும்..

யாருக்கு சமர்ப்பிப்பது என்பதை விட எதற்காக சமர்ப்பிக்கிறோம் என்பது இனிதானது.. இப்பாடல் எனக்கும் என்னைப்போல் இயற்கை விரும்பிக்கும் சமர்ப்பணம்..

இக்குழந்தைக்கு இயற்கையின் தாலாட்டு...

August 20, 2023, 10:15:09 pm
1
Re: கவிதையும் கானமும்-030           நட்புக்கு ஒரு இலக்கணம்


தோழா எதற்கும் கலங்காதே..
தோழி இருக்கிறேன் மறவாதே..
தோளில் நீயும் சாய்ந்து கொண்டால்
தோல்விகள் உன்னை துரத்தாதே!!

தடைகள் சில இங்கு சார்ந்து வரும்..
தவிப்புகள் பல இங்கு கடந்துவிடும்..
தேனீக்கள் கட்டிய கூட்டு வீடு இது..
தேள் வந்து குடியேறும் மறவாதே..

வந்தது எதுவும் வாய்ப்பதில்லை..
தந்தது எதுவும் தர்மம் இல்லை..
வழியின் வழியில் வலி இருந்தால்..
வசந்தங்கள் வசப்படும் மறவாதே...

சிலந்தியின் வலையினை பார் தோழா...
சிரமங்கள் இருக்கும் தெரியாதா?
சிரமம் என்று நினைத்திருந்தால்
சிகரத்தை தொட வழி அறியாதா?

கடல் அலை வருவதை பார் தோழா..
கடந்து வந்து கரை தொடும் தெரியாதா?
கல்லறையில் பூக்கும் பூவூக்கும்,
கார்மேகம் மழை தந்தால் மலராதா?

நினைத்தால் நினைவுகள் வலி தோழா...
நினைவலைக்கு கரை இங்கு  கிடையாதா?
நிழலும் தனியே நிற்பதினால்
நின்ற இடம் அது மறவாதா?..

ஒருநாள் உனக்கு வரும் தோழா..
ஒவ்வொரு வரமும் உன் வசம் தோழா..
கண்ணுக்கும் கனவுக்கும் தூரம் என்றால்..
கனவுகள் இங்கு பூக்காதா??

சோகங்கள் என்று நினைத்திருந்தால்,.
சோலை கதிர்கள் இங்கு விளைவதில்லை..
சொந்தங்கள் எல்லாம் சொர்க்கம் என்றால் ..
பந்தங்கள் இங்கு பாரமில்லை..

இழப்புகள் எல்லாம் நிரந்திரமில்லை..
இழப்போம் என்று தெரிவதில்லை..
இன்னிசை பாடிடும் கானகுயில் ஒன்றும்..
இதுதான் இசை என்று அறிவதில்லை..

துன்பத்திற்கு துணை உண்டு என் தோழா..
துவண்டு நீ கிடந்தால் துளிர்க்காதா?
துடுப்புகள் எல்லாம் பாரம் என்றால்..
தடுப்புகள் தாண்டி படகு கரை அடையாதா?..

தடுமாறும் மனம் இங்கு ஏன் தோழா..
தட்டிக்கொடுப்பேன் நான் இங்கு வா தோழா..
தவழும் பிள்ளை நீ எனக்கு,
தவறிட வழி இல்லை புரியாதா?

உயிர் தந்த உறவிது நம் நட்பு தோழா..
நீ உடைந்தால் உயிர் விடுவேன் நான் தோழா..
உனக்காக யார் என்று கலங்காதே...
உள்ளங்கையில் உன் உலகம் நான் ,
என்றும் மறவாதே..

சுமை என்றால் சுகமில்லை என் தோழா..
சுழலும் உலகினில் நாம் தோழா..
வார்த்தைகள் எல்லாம் வாழ்த்துக்கள் ஆக,.
வாழ்வோம் இந்நாள் வா தோழா!!!






















August 22, 2023, 12:37:50 am
2