Advanced Search

Author Topic: Arrow Kavithaigal  (Read 31231 times)

April 25, 2019, 12:21:15 pm
Read 31231 times

Arrow

Arrow Kavithaigal
« on: April 25, 2019, 12:21:15 pm »
இணையத்தில் இருந்து
இணைந்த உறவு

அண்ணன் என்றும்
தங்கை என்றும்
நண்பன் என்றும்
பரஸ்பரம்
விளித்து மகிழ்கிறோம்

ஓர் நாள் காணாவிடினும்
ஒவ்வொருவராய் வினாவுகிறோம்
கண்டாயா இவரை என

அடையாளம் மறைத்து
முகமூடியிட்டு தான்
பழகுகிறோம்
எனினும்
நமக்குள்
அன்பு என்றும்
வெளிப்டையானதே

April 25, 2019, 03:01:07 pm
Reply #1
Re: இணைய உறவு !
« Reply #1 on: April 25, 2019, 03:01:07 pm »
True Lines .

 Keep going   with own poems  bro.

April 26, 2019, 01:19:08 pm
Reply #2

Arrow

Arrow Kavithaigal
« Reply #2 on: April 26, 2019, 01:19:08 pm »
இன்றும்
இரவு வரும்
இரவு வந்தால்
இதயத்தில்
இவள் நினைவு வரும்


இரவில்
இவள் வருகையில்
இவளை
இமைக்காமல் கண் பார்க்க
இன்பம்தனை தந்திடுவாள்

இவளை சுற்றி இருப்பர்
எண்ணிலடங்கா கூட்டம்

இவளை நெருங்க கனவு
கண்டு ஒரு கூட்டம்
இவளை முதலில் நெருங்கியவனை
இன்றும் நினைத்திடும்
இவ்வுலகம்

மாதமொருமுறை
மறைந்திடுவாள்
அந்நாள் 
மனதிற்கு சோகம்தனை
தந்திடுவாள்

குழந்தை முதல்
முதியவர் வரை
பாகுபாடில்லாமல்
விரும்பிடுவர்
இவளை

இது
இரவு நெருங்கும்
நேரம்
ஓடி வா
வெண்ணிலவே


April 30, 2019, 12:26:47 pm
Reply #3

Arrow

Arrow Kavithaigal
« Reply #3 on: April 30, 2019, 12:26:47 pm »
தனித்து சுற்றிகொன்றிருந்த
வேளையொன்றில்

முகம் காணாமல்
உருவான உறவு
அன்பு ஒன்றே பிரதானம் என
தொடர்ந்த உறவு

கோபமோ
கேளிக்கையோ
கிண்டலோ
பரஸ்பரம் பெரிதாய்
பாதிக்காமல்
தொடர்ந்தது

கால சுயற்சியில்
குரூரத்தின்
கண்டறிய முடியாத
காரணங்களால்
தனித்து விட படுகையில்
மரணத்தின்
வலி உணர்கிறேன்

அன்பு
மட்டும்
எஞ்சிருக்க 

மீண்டும்
தனித்திருத்தலின்
சௌகரியம்
பழகிக்கொள்கிறேன்


May 06, 2019, 04:13:56 am
Reply #4

MDU

Re: தனிமை !
« Reply #4 on: May 06, 2019, 04:13:56 am »

May 06, 2019, 04:14:39 am
Reply #5

MDU

Re: வெண்ணிலவே !
« Reply #5 on: May 06, 2019, 04:14:39 am »

May 06, 2019, 04:15:13 am
Reply #6

MDU

Re: இணைய உறவு !
« Reply #6 on: May 06, 2019, 04:15:13 am »

May 13, 2019, 08:23:00 pm
Reply #7

Arrow

"மை"
« Reply #7 on: May 13, 2019, 08:23:00 pm »
தனி"மை"
இருளில்
என்
எழுதுகோளின் "மை க்கு
உயிர்கொடுத்துக்கொண்டிருந்தேன்
உன் நினைவுகளை
கவிதை என்ற பெயரில்

May 17, 2019, 12:08:55 am
Reply #8

MDU

Re: "மை"
« Reply #8 on: May 17, 2019, 12:08:55 am »

May 21, 2019, 11:56:43 am
Reply #9

Arrow

வாழ்க்கை
« Reply #9 on: May 21, 2019, 11:56:43 am »
குழந்தையாய் இருக்கையில்
வளர ஆசை கொண்டு
வளர்ந்தபின் மீண்டும்
குழந்தையையாய் இருந்திருக்கலாமோ
என்று யோசிக்கும்
இடைப்பட்ட காலத்தில்
சிலந்தி வலையில் சிக்குண்ட
பூச்சி போல
சின்னாபின்னமாகி போகிறது
சிலரது வாழ்க்கை

May 23, 2019, 03:28:54 am
Reply #10

MDU

Re: வாழ்க்கை
« Reply #10 on: May 23, 2019, 03:28:54 am »

May 23, 2019, 07:20:22 pm
Reply #11

Arrow

சொந்த கவிதைகள் :)
« Reply #11 on: May 23, 2019, 07:20:22 pm »
சுதந்திரமாய்
மனதில்
நினைப்பதை
நினைத்ததது போல்
முடிகிறது
இருவரிடம்
ஒன்று
கடவுள்
மற்றொன்று
என் தனிமை

May 26, 2019, 09:02:50 am
Reply #12
Re: சொந்த கவிதைகள் :)
« Reply #12 on: May 26, 2019, 09:02:50 am »
Short and Sweet Kavithai.

May 26, 2019, 09:03:52 am
Reply #13
Re: வாழ்க்கை
« Reply #13 on: May 26, 2019, 09:03:52 am »
நிதர்சனமான உண்மை.

May 31, 2019, 03:15:22 pm
Reply #14

Arrow

பேசுவாயோ
« Reply #14 on: May 31, 2019, 03:15:22 pm »
பேசுவாயோ என
ஏங்கினேன்
முதல் முறை

அதற்காய் காத்திருப்பதும்
சுகமாயிற்று

மெல்ல மெல்ல
பேச தொடங்கி
பேசுவதே வேலை
என ஆயிற்று நமக்குள்

யார் கண் பட்டதோ
யார் காரணமோ
நானறியேன்

மௌனமாய்
மாயமானாய்

அனலில் இட்ட
புழுவாய்
தவித்துக்கொண்டிருக்கிறது
என் மனம்

வசைபாடி சென்றிருந்தாளேனும்
வலித்திருக்காது இவ்வளவு

தினம் தினம் துடிக்கிறேன்
இருந்தும்
பேசுவாயோ என
ஏங்கினேன்
இன்னொருமுறை