பிரியா நினைவுகள்
வான்காற்று கிழக்கிலிருந்து தூர்வார..
மழை மேகம் தரை நனைக்க..
எறும்புகள் சாலைகளில் வரிசையிட்டு கோலமிடுகிறது அதில்..,
செம்மயிர்க்கொன்றை பூக்களின் ஒப்பனை...
ஊர்க்குருவிகளின் இசை கூடிய நடனம்
இவையல்லாது முன் முற்றத்தில் ஒற்றை கால் காக்கையின் கரைசல்
மார்கழி திங்களன்று ஒரு திங்கள் மறைந்திருக்கும் "திங்கள்"
இவை அனைத்தும் உன் வருகை நோக்கிய இசையோ ? சொல்?
காற்றாக வருகிறாயா?
கார்முகிலாக வருகிறாயா ?
மதியாக வருகிறாயா?
மலரில் மணமாக வருகிறாயா?
மண் வாசமாக வருகிறாயா?
மழலையர் சிரிப்பிலா?
எப்படி ஆயினும் சரி
ஒன்றை மட்டும் உணர்வின்றி நம் நினைவுகளை உரமிட்டு சொல்கிறேன் !
ஒரு முறை வந்தால் போதும்....
மீனாக உன்னை வைத்து
நீராக நான் இருப்பேன் .......
ஆனால் விதியோ,
மீன் வடிவ கண்களில் கண்ணீர் கடலாக நிலைத்திருக்கிறாய் !!